தேவனால் அருளப்பட்ட பாதை GOD'S PROVIDED WAY 53-12-01 வில்லியம் மரியன் பிரான்ஹாம் தேவனால் அருளப்பட்ட பாதை GOD'S PROVIDED WAY அமெரிக்க படையணிப்பிரிவு மண்டபம், வெஸ்ட் பாம் பீச், புளோரிடா, அமெரிக்கா 53-12-01 1. எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் துதிப் பாடல்களைப் பாடிக்கொண்டும், வார்த்தையை வாசித்துக் கொண்டும், அதன்பிறகு உம்மிடம் பேசிக்கொண்டும் இருப்பதாகிய வழக்கமான இந்த வழியில், நாங்கள் இன்றிரவு உம்மிடம் வந்திருக்கிறோம், இப்பொழுது, ஆராதனையின் எஞ்சியுள்ள பாகங்களிலும் உமது வழிநடத்தும் ஒத்தாசை கட்டாயம் இருக்க வேண்டுமென்றும் அல்லது இது முற்றிலும் தோல்வியடையும் ஒன்றாகவே இருக்கும் என்பதையும் அறிந்திருக்கிறோம். நீர் இங்கேயிருக்கிறீர் என்றும், நீர் சகலத்தையும் அறிந்திருக்கிறீர் என்றும், உம்மிடத்தில் அன்புகூகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்றும் அறிந்திருக்கிறோம். இப்பொழுது, இங்கே என்னுடைய கரத்தில், கைக்குட்டைகளை வைத்திருக்கிற சில கடிதங்களைப் பிடித்திருக்கிறேன், இது வியாதிப் பட்டவர்களுக்கும், துன்பப்படுகிறவர்களுக்கும் போகிறது. 2. இஸ்ரவேலர் எகிப்தை விட்டுப் புறப்பட்டுச் சென்ற பிறகு, சிவந்த சமுத்திரமும் வனாந்தரங்களும் அவர்களுக்கு முன்பாக இருக்க, பார்வோனுடைய சேனையானது அவர்களைப் பின்னால் துரத்திக்கொண்டு வர அவர்கள் ஒரு இக்கட்டு நிலையில் மாட்டிக்கொண்ட போது, "தேவனுடைய பிள்ளைகள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் நடந்து கொண்டிருந்த அந்தப் பாதையை சமுத்திரமானது அடைத்துப் போட்டிருந்த படியால், தேவன் அந்த அக்கினிஸ்தம்பம் வழியாக கீழே நோக்கிப் பார்த்து, அந்த சமுத்திரத்தின் மேல் கடுங்கோபம் கொண்டார். உடனே சமுத்திரம் பயந்து போய், சுழன்று பின்னிட்டுத் திரும்பி (rolled back), இஸ்ரவேலர்கள் தொடர்ந்து கடந்து செல்வதற்காக உலர்ந்த ஒரு பாதையை உண்டாக்கினது" என்று எழுத்தாளர்களில் ஒருவன் கூறினான். இப்பொழுது நீர் இன்னும் அதே தேவனாகவே இருக்கிறீர். 3. மேலும் இப்பொழுது, நான் இந்தக் கைக்குட்டைகளை வைத்திருக்கிறேன், ஒருக்கால் பரிதாபமான ஏதோவொரு வயதான தகப்பனார் இங்கு எங்கோ ஓரிடத்திலுள்ள பரந்த துணை வெப்பமண்டல சதுப்பு நிலங்களைச் சுற்றிலும் வெளியில் இருக்கலாம்; தன்னுடைய கையில் கோலைப் பிடித்திருக்கும் ஒரு வயதான குருடாயிருக்கும் தாயார் சுற்றிலும் தம்முடைய வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்படிக்கு தரையில் சுற்றிலுமாக தட்டி தட்டிப் பார்த்துக் கொண்டிருக்கலாம்; அல்லது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏதோவொரு சிறு பிள்ளை எங்கோ ஓரிடத்தில் படுத்துக்கிடந்து, கைக்குட்டை திரும்பி வரும்படியாக ஒரு தாயார் வெறித்தனமாகக் காத்துக்கொண்டிருக்கலாம். நீரோ தப்பிக்கொள்ளும்படியான ஒரு போக்கை உண்டாக்கியிருக்கிறீர். (அவர்கள் உறுமால்களை (கைக்குட்டைகளை - handkerchief) அவனுடைய சரீரத்திலிருந்து எடுத்துக்கொண்டு வந்தார்கள் என்று வேதாகமத்திலிருந்து நாங்கள் பெற்றிருக்கும் இந்தச் சிறு அடையாளங்கள், (நாங்கள் பரிசுத்த பவுல் அல்ல என்று உணருகிறோம், ஆனால் நீர் இன்னும் இயேசுவாக இருக்கிறீர் என்பதை அறிவோம்), நாங்கள் ஜெபிக்கிறோம், தேவனே, நாங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும் இந்த விசுவாச ஜெபத்தின் ஞாபகார்த்தமாக, இந்தச்சிறு ஞாபகக் குறிகள் (tokens) அவர்களுடைய வியாதிப்பட்ட சரீரத்தின் மேல் போடப்படும் போது, தேவன் மறுபடியுமாக அந்தக் கண்கள் மூலமாக கீழே நோக்கிப் பார்த்து, அவர்களைக் கட்டி வைத்திருக்கிற சத்துரு தாமே பயமடைந்து, பின்வாங்கிப் போவானாக. அவர்கள் தாமே நல்ல ஆரோக்கியம் என்றும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் கடந்து போவார்களாக. இதை அருளும், கர்த்தாவே. அவர்களில் ஒருவராவது சுகமடையாமல் இருக்க வேண்டாம். 4. இன்றிரவும் அதே காரியத்தை அருளும். பரிசுத்த ஆவியானவர் தாமே இந்தக் கூட்டத்தை கட்டுக்குள் எடுத்து (take over), இந்தக் கூட்டத்திற்குள் வந்து, ஜனங்களுடைய இருதயங்களுக்குள் தமது வழியை சாவிகொடுத்து முறுக்கிவிடுவாராக, இன்றிரவு அவருடைய பிரசன்னத்தின் நிமித்தமாக அங்கே மகத்தான காரியங்கள் செய்யப்படுவதாக நாங்கள் இதை, இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 5. வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதும், கைக்குட்டைகளை அனுப்புவதும், என்னுடைய சாட்சிகளில் அதிகமான பாகம் கைக்குட்டைகளிலிருந்து தான் வருகிறது. கர்த்தர் அங்கே அநேக காரியங்களைச் செய்திருக்கிறார், ஏனென்றால் அவைகள் அதிக ஜனங்களிடம் போய் சேருகின்றன. அநேகமாக, நாங்கள் அஞ்சல் மூலமாகத்தான் அனுப்புகிறோம், ஜெபர்ஸன்வில்லிலிருந்து ஒருக்கால் தினமும் ஆயிரம் அனுப்பப்படுகிறது, அவ்வாறுதான் நாங்கள் அனுப்புகிறோம். 6. எந்த நேரத்திலாவது உங்களுக்கு ஒன்று தேவைப்படுமானால், ஏன், வைத்துக்கொள்ளலாம்... இப்பொழுது அது அவசியமில்லை, அதை உங்கள் வேதாகமத்தில் வைத்துக்கொள்ளுங்கள், அதை அப்போஸ்தலர் 19ம் அதிகாரத்தில் வையுங்கள். அப்படியானால் அதற்கு நேரம் அனுமதிக்குமானால், சம்பவித்த அநேக காரியங்களைக் குறித்து (பேச விரும்புகிறேன். சிலநேரங்களில், அவர்கள் அதை எடுத்து வேதாகமத்தில் அப்போஸ்தலர் 19ம் அதிகாரத்தில் வைத்துக்கொள்கிறார்கள். இப்பொழுது நீங்கள் அதை எவ்விதத்திலும் உபயோகிக்காமல் இருந்தால், அதை அங்கேயே விட்டுவிடுங்கள். எதிர்பாரா அவசரநிலை எழும்போது, ஏன், அந்த கைக்குட்டையை எடுத்து, அழற்சித் தொண்டை அடைப்பு, அல்லது அது என்னவாக இருந்தாலும், அதனால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளையின் மேல் அதை வையுங்கள். அப்பொழுது என்ன சம்பவிக்கிறது என்று கவனியுங்கள். நம்முடைய கர்த்தர் செய்திருக்கிற காரியங்கள்) அற்புதமாக இருந்து வருகிறது. 7. ஒரே காரியம் என்னவென்றால், அது வெறுமனே தொடர்பு கொள்வதற்கான ஒரு சிறு இடமாக இருக்கிறது.... இப்பொழுது, நான் இவைகளை வெளியே அனுப்பும் போது, அங்கே ஒரு வழக்கமான அமைப்பிலுள்ள ஒரு கடிதமும் இருக்கும். அதே நேரத்தில், ஒவ்வொருவரும் காலை 9 மணிக்கும், பகல் 12 மணிக்கும், பிற்பகல் மூன்று மணிக்கும் ஜெபிக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். அது உலகத்தைச் சுற்றிலுமாக இருக்கிறது. பழங்கால தேசங்களில், ஜனங்கள் இரவில் நள்ளிரவு நேரத்தில் எழுந்து, அவர்களும் அதே நேரத்தில் அந்த சங்கிலி ஜெபத்தை தொடர்ந்து செய்கிறார்கள். உண்மையில், ஆயிரம் பத்தாயிரக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் ஜெபிக்கிறார்கள். தேவன் நிச்சயமாக அதைக் கேட்கிறார். நீங்கள் அப்படியே - நீங்கள் அப்படியே ஜெபத்தோடு கூட பரலோகத்தை வெகு குமுறலோடே பேசிக் கொண்டிருக்கிறீர்கள் (storming), நீங்கள் பாருங்கள், எனவே அவர் அதற்கு செவிகொடுத்தாக வேண்டும். 8. எத்தனை உண்மையுள்ள ஜனங்கள் அங்கேயிருக்கிறார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள், அவர்கள் ஒருவருக்காக ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள், எல்லாரும் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்... தங்கள் மேல் வைத்து, ஜெபம் பண்ணுகிறார்கள். நம்முடைய கர்த்தர் செய்திருக்கிற அந்தக் காரியங்களைக் குறித்த அநேக மகிமையான சாட்சிகள் எனக்கு உண்டாயிருக்கிறது. 9. இப்பொழுது, நான் பூரணமாக குணமடையும்படி, நான் எப்பொழுதும் சற்றேறக்குறைய அவ்வளவு மோசமாகும் வரைக்கும் (as badly worn as) அதை அணிந்து கொள்வதுண்டு. இது எனக்கு அநேக வாரங்கள் ஆகிவிட்டது), அதிகமான தரிசனங்கள் இருந்து வருகிறது. எனவே கர்த்தர் எனக்கு உதவி செய்திருக்கிறார். அதற்கு, அவருடைய அன்பின் இரக்கத்திற்காக நான் மிகவும், மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன், நிச்சயமாக, நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவர் இன்றிரவும் நம்மோடு கூட இருந்து, இன்றிரவு நமக்கு உதவி செய்வார் என்று நம்புகிறோம். 10. மேலும் இப்பொழுது, நான் சற்று நேரத்தில், ஒரு-ஒரு தலைப்பின் பேரில் பேசப் போகிறேன், அது ஒரு தலைப்பு என்று அழைக்கப்படுமானால். நான் ஒரு தலைப்பை எடுப்பதில் மிகவும் (நன்றாக எடுக்கக்கூடியவன்) அல்ல, ஏனென்றால் நான் மிகவும் அதிகமாய், எப்போதாவது தான் அதனோடு தரித்திருக்கிறேன். நான் அப்படியே, ஒருக்கால் ஏதோவொன்றை வாசிக்கலாமே என்று உணர்ந்தேன், நான், "இப்பொழுது இன்றிரவில், நான் சபைக்குப் போகும்போது, நான் இதன் பேரில் பேசப் போகிறேன்" என்று எண்ணிப் பார்ப்பேன். இப்பொழுது, நான் என்னுடைய ஜீவியம் முழுவதுமே இதைச் செய்திருக்கிறேன். நான் இதைச் செய்யப் போகிறேன் என்று, அதைக் குறித்து நிச்சயமுடையவனாய் சிந்தித்துக்கொண்டே போய், நான் அங்கு முழங்கால் படியிடுகையிலே, நான் வேறு ஏதோவொன்றைச் செய்யும்படி கர்த்தர் என்னிடம் சொல்லுகிறார். நீங்கள் எதன்பேரில் பேசப் போகிறீர்கள் என்று நான் பொது அறிவிப்புக் கொடுக்க ஒருபோதும் முயற்சிப்பதே கிடையாது; அப்படியே முன்னால் சென்று, செய்யும்படி கர்த்தர் சொல்லுவதையே செய்கிறேன், அங்கே அதற்கு இருப்பது எல்லாம் அவ்வளவு தான். அவர் என்னிடம் கொடுப்பதையே நான் செய்ய வேண்டியுள்ளது, ஏன், அதையே ஜனங்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ளது. 11. மேலும் சிலசமயங்களில் அது ஓ, ஒருவிதத்தில் கடினமாக இருக்கிறது, ஆனால் அது உங்களுக்கு நன்மை செய்யும். ஆமாம். அது என்னை இரட்சித்தது, அது இப்பொழுது இந்த எல்லா 23 வருடங்களும் என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறது, நான் இயேசு கிறிஸ்துவுக்குள் மிகவும் சந்தோஷமாயிருந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணி வருகிறேன். மேலும் நான்.... என்னுடைய ஜீவியத்தில் எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் உள்ளது. அது என்னவென்றால், நான் ஒரு சின்னஞ்சிறிய குழந்தையாக இருந்த போதே, என்னுடைய பாவங்களை மன்னிக்கும் இயேசு கிறிஸ்துவை அறியாமல் போய் விட்டேனே என்பதுதான். 12. பெற்றோர்களே, நான் இதை உங்களுக்குக் கூறுகிறேன், நான்... நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக சரியான விதமான வீட்டை வைத்திருங்கள். செய்ய வேண்டிய காரியம் அதுதான். ஏனென்றால், நான் வளர்ந்த போது, எனக்கு ஒரு கிறிஸ்தவ வீடு இருந்திருக்குமென்றால், அநேகமாக நான் இன்றிரவு கர்த்தராகிய இயேசுவோடு கூட அதிக பக்கத்தில் இருந்து, இன்னும் அதிக ஜனங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள், ஆனால் என்னுடைய ஜனங்களோ ஒரு பக்தியுள்ள குடும்பமாக இருக்கவில்லை. தேவனோ ஆச்சரியமான கிருபையினால் என்னை இரட்சித்தார். அப்போது, அது முதற்கொண்டு நான் அவர்களில் அநேகரை கர்த்தரிடம் வழிநடத்தியிருக்கிறேன். நான் எனது தாயாருக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன், என்னுடைய தகப்பனார் தம்முடைய இருதயத்தை கிறிஸ்துவுக்குக் கொடுத்து, என்னுடைய கரங்களில் இருந்தவாறே மரித்துப் போனார். என்னுடைய தாத்தா, நான் அவருக்கு ஏறக்குறைய 90 வயதில் அந்த ஆற்றில் ஞானஸ்நானம் கொடுத்தேன், என்னுடைய சகோதரர்கள் சிலருக்கும் மற்றவர்களுக்கும் நான் (ஞானஸ்நானம் கொடுத்தேன்). மேலும் எல்லாரும்.... என்னுடைய சிறு... இங்கேயிருக்கும் என்னுடைய சிறிய மகன், அதன்பிறகு என்னுடைய சிறிய மகளுக்கு ஏழு வயதாக இருந்தது. என்னுடைய வேறொரு மகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க அவள் இன்னும் மிகவும் குழந்தையாக இருக்கிறாள்; அவளுக்கு இரண்டு வயது மட்டுமே ஆகிறது. எனவே அவள் உயிர்வாழ்வாள் என்றால், ஏன், ஞானஸ்நானம் பண்ணப்பட அவளுக்குப் போதிய வயது ஆகும்போது, நான் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பேன் என்று நம்புகிறேன். எனவே அவள் ஏற்கனவே கர்த்தரிடத்தில் ஒப்புவிக்கப்பட்டு விட்டாள், அல்லது நாங்கள் அதை பிரதிஷ்டை செய்தல்" என்று அழைக்கிறோம். எனவே நாங்கள் அப்படியே அந்தக் குழந்தையை கர்த்தரிடம் பிரதிஷ்டை பண்ணி விட்டோம். எங்களால் கூடுமான வரையில் அவ்வளவு நெருக்கமாக வேதவாக்கியத்தைப் பின்பற்றவே முயற்சிக்கிறோம். 13. கிறிஸ்துவோ, அல்லது வேதாகமத்தில் எந்த இடத்திலுமோ, அவர்கள் எப்பொழுதாவது குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்த இடத்தை நாம் ஒருபோதும் காண்பதில்லை. அவர்கள் வெறுமனே குழந்தைகளை கர்த்தரிடம் கொண்டு வந்தார்கள், நம்மால் கண்டுபிடிக்க முடிகிற ஒரே வேதவாக்கியம் அதுதான். அவர் தமது கரங்களில் அவர்களைத் தூக்கி அவர்களை ஆசீர்வதித்து, "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்" என்றார். நீங்களோ அவர்களை தெளித்து, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க விரும்புகிறீர்கள், அது சரி. 14. அநேக ஜனங்கள் இந்தக் கைக்குட்டைகளை எடுத்து, எண்ணையினால் இந்தக் கைக்குட்டைகளை அபிஷேகம் பண்ணுவது போன்று. அது நல்லது. அது மிகவும் அருமையானது. அவைகளை எண்ணெயினால் அபிஷேகிப்பது எல்லாம் சரிதான். தேவன் ஆசீர்வதிப்பது வரையில், அதெல்லாம் சரிதான். பாருங்கள்? ஆனால் இப்பொழுது, நீங்கள் இதைக் குறித்து சற்று சிந்தித்துக் கொண்டிருக்கையில், ஒருசில நிமிடங்கள் என்னோடு பொறுத்துக்கொள்ளுங்கள், பவுல் ஒருபோதும் எண்ணெயினால் அபிஷேகிக்கவில்லை; அவர்கள் அவனுடைய சரீரத்தை விட்டு எடுத்தனர். அது சரிதானா? அவர்கள் பவுலுடைய சரீரத்திலிருந்து எடுத்தனர். 15. இப்பொழுது, பவுல் எதைத் தொட்டாலும், அது ஆசீர்வதிக்கப்பட்டது என்று அவன் அறிந்திருந்தான், அவன் ஜனங்களை ... செய்வானேயாகில். பவுல் அந்த வேதவாக்கியத்தை எங்கிருந்து பெற்றான் என்று நான் நினைப்பது உங்களுக்குத் தெரியுமா? சூனேமிய ஸ்திரீ தன்னுடைய குழந்தை மரித்துப்போன போது, உங்களுக்கு நினைவிருக்கிறதா? குழந்தை ஏன் மரித்துப் போனது என்று கண்டுபிடிக்க முயற்சிக்கும்படி அவள் எலியாவிடம் வந்தாள், எலியா தன்னுடைய கரத்தில் ஒரு கோலை வைத்திருந்தான்; அவன் தன்னுடைய வேலைக்காரனாகிய கேயாசியிடம், அவன் தான் என்று நம்புகிறேன், அவனிடம் இந்தக் கோலை எடுத்துக்கொண்டு, நேராக முன் நோக்கி செல், யாராவது உன்னிடம் பேசினால், அவர்களிடம் பேசாதே, அப்படியே சென்று, அதை அந்தக் குழந்தையின் மேல் வை" என்று கூறினான். 16. இப்பொழுது, எலியா தான் தொடுவது ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்திருந்தான், தேவன் அவனுக்குள் இருந்தார். ஆனால் சூனேமிய ஸ்திரீ அதை நம்பும்படி செய்யக் கூடுமானால். ஆனால் அவள் அதை விசுவாசிக்கவில்லை. தேவன் தம்முடைய தீர்க்கதரிசிக்குள் இருந்தார் என்றும், ஆனால் அந்த கோலில் அல்ல என்றும் அறிந்திருந்தாள், எனவே அந்தக் கோல் கிரியை செய்யவில்லை. அந்த ஸ்திரீ அதை விசுவாசித்திருந்தால், அந்தக் கோலானது அதே காரியத்தைச் செய்திருக்கும். நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? நிச்சயமாக. மேலும் எனவே... 17. ஆனால் எலியா வந்தபோது, அவன் செய்த ஒரே காரியம், அந்தக் குழந்தையின் மேல் தன்னுடைய சரீரத்தைக் கிடத்தினதுதான், அப்போது தேவன் அந்தக் குழந்தையின் ஜீவனைத் திரும்ப அதற்குக் கொடுத்தார். அது சரிதானா? தேவன் தமது ஊழியனுக்குள் இருந்தார், அதைத் தான் அந்த ஸ்திரீ விசுவாசித்தாள், அதுதான் சம்பவிக்க வேண்டியிருந்தது. 18. நான் ஜெப வரிசையை அழைக்கும் போது, அவர்கள் மேடைக்கு வந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். நான் அவர்களைக் கடந்து செல்லும்படி செய்யத் தொடங்குவேன், முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, ஏன், அவர்களுக்கு அது விருப்பமில்லையோ என்று என்னால் - என்னால் கூற இயலாது; நான் அவர்களுக்காக ஜெபிக்க அவர்கள் விரும்பினால், என் கரங்களை அவர்கள் மேல் வைக்கிறேன், அல்லது ஏதோவொன்றைச் செய்கிறேன். அதாவது... அவர்கள்... மட்டுமாக, அது - அது இருக்காது. அது சம்பவிக்கிறது, அந்தவிதமாகத்தான் அவர்கள் - அவர்கள் எதிர்நோக்குகிறார்கள். ஒரு ஸ்திரீ... வேதாகமத்திலுள்ள ஒரு நபராகிய, யவீரு, வந்து, என் குமாரத்தியின் மேல் உமது கரங்களை வையும்" என்று கூறினான். நல்லது, அது இயேசுவின் கரமாக இருந்தது. 19. ஆனால் ஒரு ரோமனோ, "நீர் என்னுடைய வீட்டின் கீழே வர நான் பாத்திரனல்ல, வெறுமனே வார்த்தையைச் சொல்லும்" என்றான். புரிகிறதா? அது நீங்கள் எந்தவிதமாக விசுவாசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது, அவ்வாறு தான் இருக்கும். 20. இப்பொழுது, இன்றிரவு உங்களிடம் பேசுவதற்கு நான் இதை ஒரு சிறிய தலைப்பு என்று அழைப்பேன் என்றால், நான், "தேவனால் அருளப்பட்ட பாதை" என்பதன் பேரில் பேசப் போகிறேன். இப்பொழுது, இந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய எலியாவைக் குறித்த இந்த மூலவேதவசனத்தை வாசிக்கிறோம். அதன்பிறகு, ஏறக்குறைய எப்படி என்றால், நாம் வியாதிப் பட்டவர்களை அழைக்க வேண்டும், வியாதிப்பட்டவர்கள், அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், மூப்பர்களை அழைத்து, வியாதியஸ்தருக்கு எண்ணெய் பூசி அவர்களுக்காக ஜெபிப்போம். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். அவன், "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் பெலனுள்ளதாயிருக்கிறது" என்றான். 21. இப்பொழுது, ஒரு நீதிமான் பாவமில்லாத ஒரு மனிதன் அல்ல. நீங்கள் கவனிப்பீர்களானால், அவன், "எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தான்" என்று கூறினான். அவன் ஏற்றத் தாழ்வுகளையும், தன்னுடைய வேற்றுமைகளையும் உடையவனாயிருந்தான். அவனுடைய ஜீவியத்தைக் குறித்த வேதவாக்கியமானது அவன் நமக்கிருப்பது போன்ற தன்னுடைய மேடு பள்ளமான ஜீவியத்தை உடையவனாயிருந்தான் என்று நிரூபிக்கிறது. அவன் வியப்படைந்து கொண்டிருந்த நேரங்களையும் உடையவனாயிருந்தான், அவனுடைய மனநிலை அவனை விட்டு அப்பால் போன சமயங்களையும் அவன் உடைவனாயிருந்தான், அங்கே தவறாகச் சென்ற நிறைய காரியங்களும் அவனுக்கு இருந்தன. ஆனால் அவன் அப்பொழுதும் ஒரு நீதிமானாக இருந்தான், ஏனென்றால் அவன் தன்னுடைய தகுதியற்ற நிலையை அறிக்கை பண்ணி, தேவனில் விசுவாசம் கொண்டவனாயிருந்தான். எனவே அதுதான் அவனை நீதிமானாக ஆக்கியது. 22. நாம் நமக்குள்ளே நாமாகவே நீதிமான்கள் அல்ல; நாம் இயேசு கிறிஸ்து மூலமாகவே நீதிமான்களாக இருக்கிறோம். நான் நானாகவே எனக்குள் பரிசுத்தமாக முடியாது. நான் என்னுடைய... என்னுடைய ஸ்தானத்தில் தேவனுடைய சமுகத்தில் நின்று கொண்டிருக்கிற இயேசுகிறிஸ்து மூலமாகவே பரிசுத்தமாக்கப்படுகிறேன். அது என்னுடைய பரிசுத்தம் அல்ல; அது அவருடைய பரிசுத்தமாக இருக்கிறது. என்னுடைய பரிசுத்தம் கிரியை செய்யவே செய்யாது, ஆனால் அவருடைய பரிசுத்தம் கிரியை செய்கிறது, ஏனென்றால் தேவன் அவரை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவரை ஏற்றுக் கொண்டதால், அவர் என்னையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால் நான் அவருக்குள் இருக்கிறேன். ஆமென். அதுதான் அதை உண்மையாக ஆக்குகிறது, இல்லையா? அப்படியானால் நாம் நம்மேல் சார்ந்திருக்க வேண்டியதில்லை. 23. இப்பொழுது, நம்மால் பாவம் செய்ய முடியும் என்று நாம் கூறும்படி அது செய்வதில்லை. சகோதரனே, நீங்கள் பாவம் செய்வீர்களானால், நீங்கள் அப்படியே - நீங்கள் அப்படியே தேவனை விட்டு தூரமாகப் போகிறீர்கள். அவ்வளவு தான். செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் தான் உண்டு, அதை அறிக்கை செய்து, தேவனோடு சரிசெய்து கொள்ளுங்கள். பாவம் செய்ய வேண்டுமென்று நீங்கள் வாஞ்சிக்கும் காலம் வரை, பாவம் செய்ய வேண்டுமென்ற வாஞ்சை இன்னும் உங்கள் இருதயத்திற்குள் இருக்கிறது, அப்படியானால், அந்தக் காரியமானது வெளியே எடுத்துப் போடப்படும் வரையில், நீங்கள் பீடத்திலேயே தரித்திருக்க வேண்டிய நேரம் இதுவே. 24. இப்பொழுது, நீங்கள் பாவம் செய்வீர்கள். நீங்கள் நிச்சயமாகவே பாவம் செய்கிறீர்கள், ஏனென்றால் உங்களால் அதிலிருந்து விலகி இருக்க முடியாது, ஆனால் நீங்கள்.. ஆனால் நீங்கள் மனப்பூர்வமாக பாவஞ்செய்வதில்லை. ஒருவன் சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு மனப்பூர்மாக பாவஞ்செய்தால்," பாருங்கள், 'பாவத்தினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்" ஆனால் நீங்கள் நிச்சயமாகவே தினமும் பாவஞ்செய்கிறீர்கள். 25. நீங்கள் நிச்சயமாகவே தொடர்ந்து பின்மாற்றமடைகிறீர்கள். எனவே தொடர்ந்து தேவனிடம் ஜெபிப்பது அவசியமாயிருக்கிறது. பவுல், "நான் அனுதினமும் சாகிறேன்" என்றான். பவுலே அனுதினமும் சாக வேண்டியிருந்தால், நான்.. போவது எவ்வளவு அதிகம். தேவனோடு சரியாக தரித்திருக்கும்படி, பவுலே அனுதினமும் சாக வேண்டியிருந்திருக்குமானால், நான் எல்லா நேரமும் மரித்தவனாகவே தரித்திருக்க வேண்டியிருக்கிறது, நான் அதையே செய்யப் போகிறேன். எனவே, நாம் எல்லாருமே அதைச் செய்ய வேண்டியிருக்கும், நமக்கு நாமே மரித்தல். அதுதான் தேவனுடைய வழியில் வருதலாகும். 26. இப்பொழுது, எதற்குமே இரண்டு வழிகள் தான் உண்டு: அது சரியான வழி மற்றும் தவறான வழி. அந்த வழிகள் உங்களுடைய வழிகளும் தேவனுடைய வழியுமாகும். நீங்கள் உங்களுடைய வழியில் இருந்து கொண்டு, அதேநேரத்தில் தேவனுடைய வழியிலும் இருக்க முடியாது. தேவனுடைய வழியில் வருவதற்கு நீங்கள் உங்கள் சொந்த வழியை மறந்துதான் ஆக வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த வழியிலேயே இருக்கும் காலம் வரையில், நீங்கள் அவருடைய வழியை விட்டு வெளியே தான் இருக்கிறீர்கள். எனவே உங்கள் வழிகளையும், உங்களுடைய எண்ணங்களையும், எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு, அப்படியே கர்த்தர் உரைக்கிறதாவது என்ற ஒரே காரியத்தின் மேல் சார்ந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான். அப்போது நீங்கள் சரியாக இருப்பதை அறிந்து கொள்ளுகிறீர்கள். 27. உங்களால் அதைக் காண முடியாவிட்டாலும், புலன்கள் எதுவுமே அது சரியென்று கூறாவிட்டாலும், அவர்கள் ஒவ்வொருவரும் அது தவறு என்று கூறினாலும், ஆனால் அது சரி என்று உங்களுக்குத் தெரியும், ஏனென்றால் தேவன் அவ்வண்ணமாக கூறியிருக்கிறார். அதுதான் அதைச் சரியாக ஆக்குகிறது. இப்பொழுது, அதாவது... அவர் அருளின வழி அவருடைய வார்த்தையாக இருக்கிறது; அது அவருடைய வார்த்தை. மனிதன் வாழும்படி தேவனால் அருளப்பட்ட பாதை, உங்களுடைய புலன்களின் மூலமாக உள்ள பாதை அல்ல, அது அவருடைய வார்த்தையின் மூலமாக இருக்கிறது. 28. இப்பொழுது, தேவன் மனிதனை முதலில் தம்முடைய சொந்த சாயலில் வைத்தார், அது தேவனுடைய சாயலாகவே இருந்தது. தேவன் இயற்கைக்கு மேற்பட்ட ஒரு ஜீவனாக இருக்கிறார். அவன் இயற்கைக்கு மேற்பட்ட மனிதனாக இருந்தான். அதன்பிறகு அவர் அவனை ஐந்து புலன்களுக்குள் வைத்தார். அந்த ஐந்து புலன்களில் எதுவுமே அவனுடைய பரலோக வீட்டை அறிவிக்காது. அந்த ஐந்து புலன்கள் அவனுடைய பூமிக்குரிய வீட்டைத்தான் அறிவிக்கிறது. அவனுடைய பூமிக்குரிய வீட்டோடு தொடர்புகொள்ளும்படிக்கு தேவன் அவனுக்கு ஐந்து புலன்களைக் கொடுத்தார், தேவனோடு தொடர்பு கொள்ள அல்ல. 29. அவனுடைய புலன், ஐந்து புலன்கள் மனித சரீரத்தைக் கட்டுப்படுத்துகிறது, இரண்டு புலன்கள் உள்ளான மனுஷனைக் கட்டுப்படுத்துகிறது; இவை விசுவாசம் மற்றும் அவிசுவாசம். நீங்கள் இன்றிரவு அதில் ஒன்றையோ அல்லது மற்றொன்றையோ உடையவர்களாயிருக்கிறீர்கள். 30. இப்பொழுது, ஏதேன் தோட்டத்தில் இரண்டு விருட்சங்கள் இருந்தன. அவைகளில் ஒன்று அறிவின் விருட்சம் (மற்ற) ஒன்று ஜீவ விருட்சம். அறிவின் மூலமாக, மனிதனால் ஒருபோதும் தேவனை அறிந்துகொள்ள முடியாது. எனவே நீங்கள் எவ்வளவு நன்றாக கல்வி கற்றாலும், உங்கள் மேய்ப்பர் எவ்வளவு சாமர்த்தியசாலியாக இருந்தாலும், அவர் எத்தனை பட்டங்களைப் பெற்றிருந்தாலும், அது ஒரு பொருட்டேயல்ல, உங்களால் முடியாது... தேவன் கல்வியின் மூலம் அறியப்படுவதில்லை, அவர் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலமாகவும் அறியப்படுவதில்லை; தேவனை அறியும் ஒரே வழி விசுவாசத்தின் மூலமாகத்தான். உலர்ந்த பட்டாணிக்கும் காப்பிக்கும் இடையே உள்ள வித்தியாசம் உங்களுக்கு தெரியாவிட்டாலும், பரவாயில்லை, நீங்கள் முற்றிலும் விசுவாசத்தின் மூலமாகத்தான் தேவனை ஏற்றுக் கொள்ளுகிறீர்கள்.... அது நிச்சயமாக, விசுவாச செயலாகவே உள்ளது. 31. மனிதன் இந்த ஜீவ விருட்சத்தில் புசித்த போது, அவன் நித்திய ஜீவனை உடையவனாயிருந்தான். ஆனால் அவன் ஜீவ விருட்சத்தை விட்டுவிட்டு, அறிவின் விருட்சத்திற்குச் சென்று, அவன் கடித்த முதல் கடியிலேயே அவன் தேவனோடுள்ள தன்னுடைய ஐக்கியத்தை விட்டு வேறுபிரிக்கப்பட்டான், அவன் அறிவின் விருட்சத்திலிருந்து கடிக்கிற ஒவ்வொரு முறையும், அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். 32. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, அவர்கள் ஒரு பெரிய வேலை நிறுத்தத்தைக் கொண்டிருந்த போது, அவர்கள்.... நான் சாலை நெடுகிலும் போய்க்கொண்டிருந்த போது, நிலக்கரியேற்றப்பட்டு வந்து கொண்டிருந்ததைக் கண்டு, "நல்லது, தேவனுக்கு துதி உண்டாவதாக, வேலை நிறுத்தம் முடிந்துவிட்டது. சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் வேலைக்குப் போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன்" என்றேன். "நான் அதற்காக தேவனைத் துதிக்க வேண்டுமா? நல்லது, மினசாரமும் மற்றும் காரியங்களும் போய்விட்டதே" என்று நினைத்தேன். 33. ஆனால் நண்பர்களே, நீங்கள் அப்படியே நினைவுகூருவீர்களானால், அந்த ஒவ்வொரு துணிக்கை அறிவும்... இப்பொழுது, முதல் காரியமாக, இங்கே இந்த விருட்சத்திலிருந்து, இந்த அறிவின் விருட்சத்திலிருந்து அவன் கடித்தபோது, அவன் அந்த விருட்சத்திலிருந்து கடிக்கும் ஒவ்வொரு முறையும், அவன் தன்னைத்தானே தேவனை விட்டு அதிக தூரமாக இழுத்துக் கொள்கிறான். நீங்கள் உங்களுடைய கல்வி அனைத்தையும் பெற்றுக்கொள்ள உங்களால் முடியும் என்று நீங்கள் நினைக்கும் போது.... எல்லாவகையான பட்டங்களையும், மற்ற எல்லாவற்றையும் கொண்டிருந்த மனிதர்கள் என்னிடம் வந்து, சகோதரன் பிரன்ஹாமே, நான் இரட்சிக்கப்பட விரும்புகிறேன்" என்று கூறுவதை நான் உடையவனாயிருந்திருக்கிறேன். அது சரியே. DD. இரட்டைஎல்.டி. பட்டங்களை உடையவர்களாய், வேதசாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற மனிதர்கள். அது சரியே. அது எதை அர்த்தப்படுத்துகிறது? ஒன்றுமேயில்லை. நீங்கள் இங்கே மேலே நிறைய பெற்றுக்கொள்வதைத் தான் அர்த்தப்படுத்துகிறது, ஆனால் இங்கே கீழே (இதைக் குறித்து என்ன? புரிகிறதா? அங்கே தான்... 34. வம்ச அட்டவணைகளை அறிந்து கொள்வதன் (genealogy) மூலமாக, தேவன் அறியப்படுவதில்லை, அது முழங்கால் தத்துவத்தின் (kneeology) மூலமாகவே அறியப்படுகிறது. அங்கே தான் தேவன் அறிகிறார். புத்தகங்களைப் படிப்பதின் மூலமாக, நீங்கள் கண்டுபிடிப்பது கிடையாது; உங்கள் முழங்காலில் தான் நீங்கள் தேவனைக் கண்டுகொள்கிறீர்கள். 35. முதல் தடவை.... இப்பொழுது பாருங்கள், அவன் தானாகவே துப்பாக்கி குண்டைக் கடிக்கிறான். அவன் அதைக்கொண்டு எதைச் செய்கிறான்? அது அறிவாக இருந்தது, அறிவின் விருட்சம்; அவன் தன்னுடைய தோழனையே கொன்று போடுகிறான். அடுத்ததாக, அவன் ஒரு மோட்டார் வாகனத்தைக் கடிக்கிறான். எல்லா யுத்தங்களிலும் சேர்த்து கொல்லப்படுகிறவர்களைக் காட்டிலும் மோட்டார் வாகனங்கள் இன்னும் அதிகமானோரைக் கொன்று போடுகிறது. இப்பொழுது அவன் தனக்கு ஹைட்ரஜன் குண்டை வைத்திருக்கிறான், அவன் அதைக்கொண்டு என்ன செய்யப் போகிறான் என்று வியப்படைகிறேன்? உம் - உம், உம்-உம். புரிகிறதா? அவன் அறிவின் விருட்சத்திலிருந்து புசிப்பதின் மூலமாக தொடர்ந்து தன்னைத்தானே அழித்துக்கொண்டே வருகிறான். 36. எனவே அறிவைக் குறித்தும், உங்களுடைய எல்லா பகட்டாரவாரமான அறிவையும் குறித்து அப்படியே மறந்துவிடுங்கள், அப்படியே நினைவிருக்கட்டும், அது கர்த்தர் உரைக்கிறதாவது, அதைத்தான் நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார், அது அவருடைய வார்த்தையாக இருக்கிறது. அது சரியே அதுதான் மனிதனுக்கு தேவனால் அருளப்பட்ட வழியாக இருக்கிறது, எப்போதுமே அவ்வாறு தான் இருந்து வருகிறது. 37. தேவனை எப்பொழுதாவது அவருடைய வார்த்தையில் எடுத்த ஒவ்வொரு மனிதனும், எப்பொழுதாவது உலகத்திலுள்ள எதையும் அடைந்த ஒவ்வொரு மனிதனும், தேவனை அவருடைய வாாததையில் எடுத்த ஒரு மனிதனாகத்தான் இருந்தான். அது சரியே. ஜார்ஜ் வாஷிங்டன், மற்றும் ஆபிரகாம் லிங்கன், மற்றும் நீங்கள் விரும்பும் யாராக இருந்தாலும், மகத்தான ஆமெரிக்கர்களினூடாகவும், அப்படியே தொடர்ந்து வழிவழியாக, மகத்தான மனிதர்களின் சரித்திரத்தினூடாகவும் அப்படியே பின்னால் துரிதமாக ஓடிச்சென்று பார்ப்பீர்களானால், அவர்கள் தேவனை நம்பின மனிதர்களாகத்தான் இருந்தார்கள். அதுதான் அதற்கான தேவனுடைய வழியாக இருக்கிறது. 38. இப்பொழுது, மனிதன். நல்லது, இங்கே தேவன் மனிதனைப் பார்த்துக்கொண்டார். ஆனால் அவனோ தனக்குத்தானே விலகிச் சென்று, அது ஒரு கடினமான வேலை என்பதைக் கண்டுகொண்டான். எனவே ஒரு மூடல் இல்லாமல், அவனால் தேவனுடைய பிரசன்னத்தில் நிற்க முடியாது என்பதைக் கண்டுகொண்டான், தேவன் அவனுக்கு ஒரு மூடலைக் கொடுத்தார். அவர் அவனுக்கு கொஞ்சம் தோல்களை உண்டு பண்ணி, அவனை மூடினார், எனவே அவனால் முடிக்கொள்ள முடிந்து, தேவனைச் சந்திக்க முடிந்தது. அதுவே தேவனால் அருளப்பட்ட வழியாக இருக்கிறது. 39. இப்பொழுது, மனிதன் அறிவின் மூலமாக, தனக்குத்தானே ஒரு வழியை உண்டுபண்ண முயற்சித்தான். அவன், "இப்பொழுது, கவனியும் நான் நிர்வாணமாக இருக்கிறேன் என்றான். எனவே அவன் சில அத்தி இலைகளை ஒன்றாக தைத்து, தனக்கு சில மேல் ஆடைகளை உண்டு பண்ணிக்கொண்டான். ஆனால் அது கிரியை செய்யாது என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். ஆகவே, அவர்கள் தங்களுடைய வழியை அல்ல, ஆனால் தேவனுடைய வழியை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. 40. இன்று மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே ஒரு வழியை உண்டாக்கிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், "நல்லது, இப்பொழுது நான் சபைக்குப் போகிறேன். நான் இதைச் செய்கிறேன், நான் ஒரு நல்ல மனிதன்" என்று கூறிக்கொள்கிறார்கள். நல்லது, அதில் எந்தத் தவறும் கிடையாது, ஆனால் இன்னுமாக அது உங்களுக்கான தேவனுடைய வழி அல்ல. தேவனுடைய வழி என்னவென்றால், அவர் உங்களுக்காக ஏதோவொன்றைக் கொல்ல வேண்டியிருந்தது. அது அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாக இருந்தது.... எப்போதுமே இரத்தம் தான், ஒரு பாவியாயிருக்கிற எந்த மனிதனும் தப்பிக்கொள்ளும்படியாக தேவனால் அருளப்பட்ட வழியாக அது இருக்கிறது, அல்லது எந்த தேவைக்கும் அதுதான் தேவனால் அருளப்பட்ட வழியாகும். நீங்கள்... உலகத்திலுள்ள ஒரே வழி. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாகவே, தேவன் அருளப்பட்ட ஒரு வழியை உடையவராயிருக்கிறார். 41. இங்கே சமீபத்தில், மகத்தானதும், பிரபலமானதுமாகிய சபைகளில் ஒன்று, அவர்களுடைய அங்கத்தினர்களில் அநேகர் இன்றிரவு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் தங்களுடைய கீர்த்தனைப்பாடல் புத்தகத்திலிருந்து இரத்தத்தை எடுத்துப்போடவும் கூட விரும்பினதாக செய்தித்தாளில் வெளியான ஒரு கட்டுரையை நான் வைத்திருக்கிறேன். இரத்தம், இரத்தம் சம்பந்தமான பாடல்களை அந்த கீர்த்தனைப் பாடல் புத்தகத்தை விட்டு எடுத்துப்போட விரும்பினார்களாம். ஒரு மாமிசம் வெட்டும் மார்க்க த்தை (slaughter-block religion) நாங்கள் கொண்டிருக்க மாட்டோம். ஏதோ அருமையானதும் பக்தியுள்ளதுமான ஏதோவொன்று தான் எங்களுக்கு வேண்டும்" என்றார்களாம். 42. ஏன், அங்கே.... அது இப்பொழுது புத்தரோடு, அல்லது - அல்லது அந்த மற்றவர்களில் சிலரோடு சரிசமமாகி விட்டது. கவனியுங்கள், நீங்கள் இரத்தத்தை அங்கிருந்து எடுத்துப்போடுவீர்களானால், அதற்கு மேலும் உங்களுக்கு இரட்சிப்பு இல்லை. அவ்வளவு தான். ஏனென்றால் இரத்தம் மாத்திரமே... அல்லது, ஜீவனின் மூலம் மட்டுமே இரட்சிப்பு வருகிறது, இரத்த ஓட்டத்தில் தான் ஜீவன் உள்ளது. இரத்தம் செலுத்தப்பட்டது, சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலமாக மட்டுமே அங்கே பாவ மன்னிப்பு உண்டு. பழைமை நாகரீகமான இரத்தம் தெளிக்கப்பட்ட மார்க்கம் எனக்குப் பிடிக்கும்; அது எனக்குப் பிடிக்கும். ஏனென்றால் தேவன் அதன்பேரில் தான் நோக்கிப் பார்த்து, அதை ஏற்றுக்கொள்ளுகிறார். அந்த இரத்தம் நமக்காக சிந்தப்பட்டது, நாம் அதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். 43. பிறகு, வெறுமனே அதை ஏற்றுக்கொள்வதன் மூலமாக, அதை மாத்திரம் செய்வதல்ல, அவர் அதை ஏற்றுக்கொண்டு விட்டார் என்று தேவன் திரும்ப நிரூபித்தாக வேண்டும். அதுதான் காரியம். நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அதன்பிறகு அவர் உங்களை ஏற்றுக்கொள்வாரானால், அவர் உங்களை ஏற்றுக்கொள்வது மட்டுமாக சரியாக அங்கேயே தரித்திருங்கள். அதன்பிறகு அவர் ஏற்றுக்கொள்ளும்போது, அவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் மூலமாக தம்முடைய இராஜ்யத்திற்குள் உங்களை முத்திரையிடுகிறார். அப்பொழுது நீங்கள் கொண்டிருக்கிறீர்கள், அப்போது நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்குமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள். அது சரியே. 44. "நீங்கள் முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்," அடுத்த எழுப்புதல் வரைக்குமா, இல்லை, உ-உ, "மீட்கப்படும் நாள் வரைக்கும்." அது சரிதானா? அங்கே எந்த மேடு பள்ளமான காரியங்களோ, உள்ளேயும் வெளியேயுமாக இருப்பதோ இல்லை, அப்போது நீங்கள் உண்மையாகவே தேவனுக்குள் வந்துவிடுகிறீர்கள், நீங்கள் உண்மையாகவே அவருக்குள் இருப்பீர்களானால்; வெறுமனே ஏதோவொன்றைப் பாவனை செய்து கொள்வது அல்ல, ஆனால் நீங்கள் உண்மையிலேயே கிறிஸ்துவுக்குள் இருப்பது; அது உங்கள் ஒரே தெரிந்தெடுப்பாக இருக்கிறது, உங்கள் முழு இருதயமும் முற்றிலுமாக விற்றுப்போடப்படுகிறது, உங்களுக்குப் பின்னாலுள்ள ஒவ்வொரு பாலமும் சுட்டெரிக்கப்படுகிறது, பரத்திலுள்ளவைகளின் மேலேயே நீங்கள் உங்கள் பிரியத்தை வைத்து, உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிற ஓட்டப்பந்தயத்திலே பொறுமையோடே ஓடுகிறீர்கள். ஆமென். 45. கவனியுங்கள், தேவன் ஒரு வழியை உண்டுபண்ணுகிறார். அவர் ஒரு - ஒரு அருளப்பட்ட பாதையை ஏற்படுத்துகிறார். அவர் நம்மை ஆடுகள் என்று அழைக்கிறார். வேதாகமத்தில், நாம் ஏன் ஆடுகளுக்கு ஒப்பிடப்பட்டோம் என்று நான் எப்போதுமே வியப்படைவேன். ஆடுகளை வளர்ப்பவர்கள் யாராவது இங்கேயிருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் நான் ஒருசில ஆடுகளை மேய்த்ததுண்டு, சிலவற்றை கால்நடைகள் மந்தையிலும், மற்றும் எல்லாவற்றிலும் வளர்த்தேன், எல்லாவற்றிலுமே, அது நடைமுறையில் என்னுடைய ஜீவியத்தின் மிகப்பெரிய பாகமாக இருந்தது. பண்ணைகளுக்கு உள்ளேயும் வெளியேயும், நல்லது, நான் ஒரு பையனாக இருந்தது முதற்கொண்டு அதைச் செய்திருக்கிறேன். 46. ஆனால் உதவியற்ற ஏதாவதை நீங்கள் எப்பொழுதாவது கண்டிருந்தால், அது ஒரு ஆடு வழிதவறிப்போய் விடும் போதுதான். ஒரு ஆடு வழிதவறிப்போகும் போது, அதுவால் எளிதாக தன்னுடைய வழியைக் கண்டுபிடிக்க முடியாது, அவ்வளவு தான். அது சரியாக அங்கேயே நின்றுகொண்டு, ஓநாய்கள் அல்லது ஏதோவொன்று அதைப் பிடிக்கும் வரைக்குமாக கத்திக் கொண்டிருக்கும். அது - அது அப்படியே, அது அப்படியே தொலைந்து போய்விட்டது. அது உதவியற்றதாக இருக்கிறது. 47. அந்தவிதமாகத்தான் ஒரு மனிதன் இருக்கிறான். சகோதரனே, நீங்கள் வழிதவறிப்போகும் போது, நீங்கள் எவ்வளவு சீர்திருத்தம் செய்ய முயற்சித்தாலும் எனக்குக் கவலையில்லை, மேய்ப்பன் வந்து உங்களைத் தூக்கும் மட்டுமாக நீங்கள் முற்றிலும் உதவியற்ற நிலையில் தான் இருக்கிறீர்கள். அது.... நீங்களாகவே உங்களை இரட்சித்துக்கொள்ள முடியாது. அதைச் செய்வதற்கு எந்த வழியுமே கிடையாது. ஒரு - ஒரு சிறுத்தை, தன்னால் முடிந்தவரைக்கும் கடினமாக தன்னுடைய புள்ளிகளை நக்கலாம், நீங்கள் அதை சோப்பு பவுடரை உற்பத்தி செய்ய உதவும் கார்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பைக் கொண்டோ, நீங்கள் விரும்பும் எதைக் கொண்டும் அதைத் தேய்த்துக் கழுவலாம், அப்போது அது அந்தப் புள்ளிகளை பளபளப்பாக்க மாத்திரமே செய்யும். எனவே நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ளக்கூடியதோ, அல்லது இதை வழியை விட்டு விலக்கிவிடக்கூடியதோ, அல்லது ஒரு புதிய பக்கத்தைத் திருப்பக்கூடிய எந்த வழியுமே அங்கேயில்லை; நாம் செய்வதற்காக விடப்பட்டிருக்கிற ஒரே ஒரு காரியம் மாத்திரமே இருக்கிறது, அது என்னவென்றால், வார்த்தை என்ன கூறுகிறதோ அதை ஏற்றுக்கொண்டு, மறுபடியும் பிறப்பது தான், இல்லையென்றால் இழக்கப்பட்டு விட்டீர்கள். இப்பொழுது அது உண்மையாக இருக்கிறது. தேவன், ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், அவன் இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டான்" என்று இயேசு கூறியிருக்கிறார். அவன் சிறியவனோ, பெரியவனோ, படிப்பில்லாதவனோ, அல்லது அவன் யாராக இருந்தாலும், அவன் அந்த நிபந்தனைகளைச் சந்தித்தாக வேண்டும். இயேசு அவ்வாறு கூறியிருக்கிறார். 48. ஒரு பிறப்பு என்பது என்னவென்று நீங்கள் அறிவீர்கள்: அது ஒரு மறுபிறப்பாகவும், ஒரு புது சிருஷ்டியாகவும் இருக்கிறது. ஒரு மனிதன் கிறிஸ்துவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமாக, அவருக்குள் ஒரு புது சிருஷ்டியாக ஆகிறான். 49. இப்பொழுது, நாம் அந்த நேரத்தை குறித்து எண்ணிப்பார்க்க முடியும்.... மேலும் - மேலும் எப்போதுமே, தேவனால் அருளப்பட்ட வழியை ஏற்றுக்கொள்கிற மனிதன், எப்போதுமே விடாப்பிடியுடைய ஒரு மதவெறியனாக கீழே நோக்கிப் பார்க்கப்படுகிற ஒரு மனிதனாகவே இருக்கிறான். அவன் எப்போதுமே, எல்லா காலங்கள் தோறும், உலகத்தால் ஒரு மதவெறியனாக எண்ணப்பட்டான். தேவனுடைய மார்க்கமும், இந்த உலகத்திற்கான இரட்சிப்பும், எக்காலத்திலும், ஒருபோதும் இந்த உலகத்தின் ஜனங்களிடம் பிரபலமாக இருந்ததே கிடையாது, இல்லவே இல்லை, எப்போதும் அவ்வாறு இருந்ததேயில்லை. அவர், "நீங்கள் அன்புகூர்ந்தால்..... என்றார். உலகமானது தன்னுடையவர்களை அறிந்துள்ளது. அது சரியே. "நீங்கள் உலகத்திலும், உலகத்தில் உள்ளவைகளிலும் அன்புகூர்ந்தால், தேவனுடைய அன்பு உண்மையாகவே உங்களுக்குள் இல்லை." எனவே விசுவாசத்தினாலே நடப்பது என்பது, எப்போதுமே கடினமாக இருந்து வருகிறது, போராட்டமான வழியாக இருக்கிறது. ஆனால், அது அந்த மனிதனுக்கு கடினமான போராட்டமாக இருப்பதில்லை. உலகம் அவர்களை நோக்கிப் பார்த்து, "நல்லது, அந்த ஜனங்கள் நிச்சயமாக பைத்தியம் பிடித்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்; அவர்கள் வேடிக்கையாக நடந்த கொள்கிறார்களே" என்று கூறுகிறார்கள். அது எப்போதுமே அந்தவிதமாகத்தான் இருந்து வருகிறது, ஏனென்றால் அவன் தனக்காக தேவன் அருளியிருக்கிற வெளியே செல்லும் அந்த வழியை ஏற்றுக்கொண்டு விட்டான். 50. ஜலப்பிரளயக்காலத்திற்கு முன்பிருந்த உலகத்தில், நம்முடைய தகப்பனாகிய நோவா, அவன், அநேகமாக, அங்கே வெளியிலிருந்து, ஒருநாள் பிற்பகல், தன்னுடைய வேலையை விட்டு வீட்டிற்கு வந்து, அவன் ஒரு விவசாயியாக இருந்தான், அவன் தன்னுடைய மனைவியிடம், கர்த்தர் இன்று என்னிடம் பேசி, போய் ஒரு பெரிய பேழையைக் கட்டும்படி என்னிடம் கூறினார்" என்று சொல்லுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. "நல்லது," அவள், "நோவாவே, உங்களால் எப்படி ஒரு பேழையைக் கட்ட முடியும்? நீர் ஒரு விவசாயி ஆயிற்றே. நீர் எப்படி ஒரு பேழையை எப்பொழுதாவது செய்ய முடியும்?" என்று கூறியிருப்பாள். 51. "நல்லது, மழை பெய்யப் போகிறது என்று தேவன் சொல்லியிருக்கிறார், முழு உலகத்தின் மேலும் வெள்ளப்பெருக்கு வரப்போகிறது, எல்லாரும் தண்ணீரில் மூழ்கி மரிக்கப் போகிறார்கள். நான் அவருடைய வார்த்தையைப் பின்பற்றினால், நான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வேன் என்று அவர் என்னிடம் சொன்னார்." அந்த விதமாகத்தான் நாம் எப்போதுமே தப்பித்துக் கொள்ளுகிறோம் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தேவனுடைய காரியத்திட்டத்தைப் பின்பற்துவது தான் அந்த வழியாகும். நாம் எப்பொழுதாவது அதைச் செய்யக் கூடிய ஒரே வழி அதுதான். 52. நோவா அங்கே வெளியிலிருந்து இந்தப் பேழையை கட்டிக் கொண்டிருப்பதை (building away) என்னால் காண முடிகிறது, அது வெளியே ஒரு பெரிய உலர்ந்த பூமியின் நடுவில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது, அங்கு ஒருபோதும் வானத்திலிருந்து ஒரு மழைத்துளியும் ஒருபோதும் விழுந்ததே கிடையாது. அங்கே ஒருபோதும் மழையாக எதுவுமே வானங்களிலிருந்து வெளியே வந்து (பெய்ததே கிடையாது, வானத்தில் ஒருபோதும் ஒரு மேகமாவது ஒருபோதும் இருந்ததில்லை; இருப்பினும், நோவா அங்கே வெளியே ஒரு பேழையைக் கட்டிக் கொண்டிருந்தான் (building away). அது எவ்வளவு முட்டாள் தனமாக காணப்பட்டிருக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஏன், மாம்ச சிந்தைக்கு, அந்த மனிதன் பைத்தியக்காரனாகத்தான் இருந்தான். 53. பிற்பகல் வேளையில், ஜனங்கள் தங்கள் வேலையிலிருந்து வீட்டுக்கு வந்து, பட்டணத்தில் இருந்து, "சொல்லுங்கள், அங்கே வெளியே அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் அந்த மழைக் கதையை நீங்கள் நம்புகிறீர்களா? அந்தக் கிழட்டு பித்து கொள்ளியைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? ஏன், நீங்கள் எப்பொழுதும் கண்டதிலேயே அது மிகவும் பைத்தியம் பிடித்த ஆளாக இல்லையா? அங்கே வெளியில் ஒரு - ஒரு பேழையை கட்டிக் கொண்டு (building away), வானத்திலிருந்து வெள்ளம் விழப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறானே, ஏன், அந்த மனிதனுக்கு பைத்தியம் தான். அங்கே மேலே எதுவும் கிடையாது. தேவன் எப்போதுமே இங்கே கிழே... இவ்விதமாக, நீர்ப்பாசனம் மூலமாகவே தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அங்கே அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது" என்று கூறிக் கொண்டிருப்பதை என்னால் கேட்க முடிகிறது. 54. ஆனால் அதுதான் தப்பிக்கொள்ளும்படியான வழி என்று தேவன் அவனிடம் கூறினார், அவன் கட்டிக்கொண்டிருக்கும் (building away) அந்த வழிதான் தப்பிக்கொள்ளும் வழியாக இருந்தது. "நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்" என்று இயேசு கூறியிருக்கிறார். ஜனங்களுக்குப் பைத்தியமாகத் தோன்றுகிற ஒரு திட்டம் பூமியின் மேல் இருக்கும் (அது சரியே), அது அப்படியே முட்டாள் தனமாக இருக்கும். ஆயினும், அது தேவனுடைய திட்டமாக இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு பேழையைக் கட்டிக் கொண்டிருப்பார்கள் (building away), அந்தப் பேழை இயேசு கிறிஸ்துவாக இருக்கிறது. அது சரியே. அது சரியே, அவருக்குள் மனமாற்றமடைய முயற்சித்தல். 55. இப்பொழுது... தப்பிக்கொள்ளும்படியாக அங்கேயிருந்த ஒரே வழி அதுதான் என்று தேவன் நோவாவிடம் கூறினார். அது மாத்திரமே ஒரே வழியாக இருந்தது. அவன் 120 வருடங்கள் பிரசங்கம் பண்ணினான். ஜனங்களோ அவனை அசட்டை செய்தது, அவனைப் பார்த்து நகைத்து, அவனைக் கேலி செய்து, பரிகசித்து, ஏளனம் செய்தார்கள். 56. நோவாவின் நாட்களில் நடந்தது போல, புசித்தும்... அவர்கள் எப்படிப்பட்ட, எந்த விதமான ஒரு உலகத்தைக் கொண்டிருந்தார்கள்? அப்படியே இப்பொழுது அவர்கள் செய்து கொண்டிருப்பது போன்று, அவர்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண்கொடுத்தும், எல்லாவித வித்தியாசமான காரியங்களையும் உடையவர்களாக இருந்தார்கள். நமக்கு இப்பொழுது இருக்கும் நாகரிகத்தைக் காட்டிலும் உயரிய நாகரிகத்தை கூட அவர்கள் கொண்டிருந்தார்கள். அது அவ்வண்ணமாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கவில்லை என்றால், முயற்சித்துப் பாருங்கள்.... அங்கேயிருக்கும் கூர்நுனிக்கோபுரத்தை நாம் மீண்டும் உண்டாக்க முயற்சித்துப் பார்ப்போம். நாம் அதையே, அல்லது பெண் நர சிங்க உருவச்சிலையையோ, (sphinx) அல்லது அந்த வரிசையிலுள்ள ஏதோவொன்றைக் கட்ட முயற்சி செய்து பார்ப்போம். எகிப்தியர்கள் பிணங்களைப் பதனிட்டு வைத்திருந்த, தங்களுடைய பிணம் பதனிடல் (embalming) போன்ற ஒரு மம்மியை செய்ய முயற்சித்து, நாம் அந்நாளின் நாகரிகத்திலிருந்து எவ்வளவு- எவ்வளவு தூரமாக இருக்கிறோம் என்று கண்டுகொள்ளுங்கள். நாம் அதிலிருந்து அப்பால் தொலைவில், தூரத்தில் இருக்கிறோம். 57. இதைக் காட்டிலும் ஒரு உயரிய நாகரிகம் இருந்த ஒரு நாளில், அங்கே வெளியிலிருந்த ஒரு மனிதன் ஒரு பேழையைக் கட்டிக் கொண்டிருந்து, மழை பெய்யப் போகிறது என்று கூறினான், வானங்களில் ஒரு மேகமும் கூட ஒருபோதும் இருந்ததில்லை.... உலகம் இருந்தது முதற்கொண்டு, இரண்டாயிரம் வருடங்களாக, அங்கே ஒரு மேகமோ, அல்லது இடி முழக்கமோ, மின்னலோ, அல்லது வேறு எதுவுமோ ஒருபோதும் இருந்ததேயில்லை. ஆயினும், அதைச் செய்யப் போவதாக தேவன் அவனிடம் கூறினார். ஏனென்றால் அவருடைய மகத்தான ஆவியானவர் இந்த உலகத்தை அதனுடைய cater-ஐ விட்டு வெளியே தள்ளப் போவதாக இருந்தார், அது அங்கே வெளியேயிருந்து, பின்னோக்கிசாயும்படி செய்யப் போவதாக இருந்தார், ஏனென்றால் மேகங்கள் வர வேண்டியிருந்தது. தேவன் அவ்வாறு கூறியிருப்பாரென்றால், அது இருக்கப் போகிறது என்று தேவன் கூறினவிதமாகவே அது அப்படியே இருக்கத்தான் போகிறது. 58. நோவா பேழையை சரியாகக் கட்டி (built away), கீல்பூசி, அதற்குள்ளே தார் இட்டான்; அந்தக் காரியமானது தண்ணிரில் இருந்து கொண்டிருந்தது போன்றே. மழை பெய்வது மட்டுமல்ல, ஆனால் முழு உலகத்தையும் வாரிக்கொண்டு போகப் (wash over) போகிற ஒரு ஜலப்பிரளயம் வரப்போவதாக இருந்தது. நோவா தேவனை விசுவாசித்தான், அவன் தேவ எச்சரிப்பு பெற்று, விசுவாசத்தினாலே நடந்து, பேழையைக் கட்டி, தேவனால் அருளப்பட்ட வழியில் வேலை செய்து கொண்டிருந்தான். 59. என்னே! ஓ, அவன் அடித்துக்கொண்டிருக்கையில் (beating away), கடைசி பாகம் ஒன்று சேர்க்கப்பட்டு, இணைக்கப்படுகையில், ஜனங்கள் சுற்றிலும் நின்றபடி, நகைத்து, "ஏய், அந்தப் பெரிய பழங்கால காரியத்தோடு நீ என்ன செய்யப் போகிறாய்? ஏன் நீ.." என்று கூறிக்கொண்டிருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவர்கள் அவனைப் பார்த்து கேலி செய்யவும் மற்றும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தார்கள். அவனோ அப்படியே கட்டிக் கொண்டிருந்து (built away), அதனுடைய முனையில் நின்று, அவனால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு கடினமாகப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தான். 60. பிறகு முடிவாக, தேவன் அதைக் குறித்து களைப்படைந்த போது, அதோ ஒரு நாள் வருகிறது. அப்போது வினோதமான வழக்கத்துக்கு மீறிய உணர்ச்சி பூமியின் மேல் வந்து கொண்டிருப்பதை காண்பதாக என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. சற்றேறக்குறைய இன்று இருப்பது போலவே, எல்லாருமே அமைதியற்றவர்களாய், 'ஏதோவொன்று நடக்கப் போகிறது?" என்கின்றனர். நீங்கள் வெளியே வீதியில் போய், உங்களுக்கு விருப்பமான எந்த பாவியிடமும் பேசிப் பாருங்கள்; நீங்கள் ஒரு மதுக்கடைக்குள் (barroom) செல்லக் கூடுமானாலும், ஏதோவொன்று நடக்கப் போகிறது என்று எல்லாருக்குமே தெரிகிறது. சரி. ஏதோவொன்று நடக்கப் போகிறது. நியாயத்தீர்ப்பு உலகத்தின் மேல் இருக்கிறது, அவர்கள் அதைக் காண்கிறார்கள். 61. இங்கே வெளியே வயலில் மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆட்டுக்குட்டியை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா. அந்தப் பரிதாபமான சிறு ஆட்டுக்குட்டியால் எதையும் காண முடியவில்லை, ஆனால் அது அமைதியற்றதாக உணரத் தொடங்குகிறது, அங்கே ஏதோவொன்று நடக்கப் போகிறது. சரளை மீது நெரித்து நடந்தபடி, அதோ அங்கே புதர்களில், ஒரு சிங்கம் வந்து கொண்டிருந்தது. அதைக் குறித்து ஏதோவொன்றுள்ளது. அதுவால் அதைக் கூற முடியும். ஏதோவொன்று நடக்கப் போகிறது. அதுவால் அந்த சிங்கத்தைக் காண முடியவில்லை, ஆனால் அங்கே ஏதோ தவறாயிருக்கிறது என்பது அதற்குத் தெரிகிறது. 62. சகோதரனே, அந்த விதமாகத்தான் இன்றும் உள்ளது, இந்த உலகம் போய்க்கொண்டிருக்கும் மிகவும் இருண்டதும், இருளும், பாவமும் மற்றும் காரியங்களுமான இந்த கதம்ப கூளம் (conglomeration) எல்லாவற்றோடும் இன்று ஒரு காட்சி அமைப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. வெளியே எல்லா காலங்களிலும் எப்பொழுதாவது நடிக்கப்பட்ட மிக மகத்தான நாடகத்திற்கான நாடக மேடையை அவர்கள் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் வருகை. மனிதனால் முடியாது. ஜனங்கள் கடைசி நாளின் ஆவிக்குள்ளாகும் வரைக்குமாக, நம்மால் கடைசி நாளைக் கொண்டிருக்க முடியாது. 63. ஜனங்கள் சுகமளிக்கும் ஆராதனையின் ஆவிக்குள்ளாகும் வரைக்குமாக, நம்மால் இங்கே ஒரு சுகமளிக்கிற ஆராதனையைக் கொண்டிருக்க முடியாது. ஜனங்கள் பரிசுத்த ஆவியால் நிறையப்படும் அந்த விதமான ஒரு சூழ்நிலைக்குள்ளாகும் வரைக்குமாக நம்மால் பரிசுத்த ஆவியால் நிறையப்பட முடியாது. அந்த நாளில், பூமியின் மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரும்படிக்கு, ஜனங்கள் அந்த சூழ்நிலைக்குள் இருந்தார்கள். புசித்தல், குடித்தல், பெண்கொண்டு, பெண்கொடுத்தல், மற்றும் அதைப்போன்று இவ்விதமான காரியங்கள் எல்லாம் உடைய, அதே சூழ்நிலையில் தான் இன்றும் அவர்கள் இருக்கிறார்கள். நான் இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக, தேவனுடைய மகிமை பிரசங்கிக்கப்பட்டும் நிரூபிக்கப்பட்டும் வருகிறது, மேலும் சபையை மகிமைக்குள் எடுத்துக்கொண்டு போகப் போகிற இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் ஒரு - ஒரு திருஷ்டாந்தமாக பரிசுத்த ஆவியானவரின் வல்லமையானது வைக்கப்பட்டிருக்கிறது. அது சரியே. மனிதர்களோ அதைப் புறக்கணித்து, அதற்கு எந்தக் கவனமும் செலுத்துவதில்லை, ஏனென்றால் அவர்கள் கடைசி நாளில் ஆவிக்குள் இருக்கிறார்கள். 64. உலகமானது இதைப் போன்றவற்றிற்குள் வர வேண்டியிருக்கிறது. தேவன் ஒரு நீதியான ஜனங்களின் மேலே தம்முடைய கடுங்கோபத்தை ஊற்றினால், அவர் அநீதியுள்ளவராயிருப்பார். அவர்கள் அவரைப் புறக்கணித்து, தூரமாக நடந்து போய்விட்டார்கள், சாத்தான் அவர்களைப் பிடித்துக் கொண்டான். அதோ அந்த சமயத்தில் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேவனோ இன்று ஒரு அருளப்பட்ட வழியை, தப்பிக்கொள்ளும்படியான ஒரு போக்கை உடையவராயிருக்கிறார். அந்த வழியானது இயேசு கிறிஸ்துவாக இருக்கிறது, மறுபடியும் பிறப்பதின் மூலமாகவே. மின்னல் முதல்முறையாக வந்து, வானத்தின் குறுக்கே பளிச்சிடுவதை என்னால் காண முடிகிறது, நோவா, "தேனே, வேகமாக வா" என்றான். அவனுடைய மகன்கள் தங்கள் மனைவிமார்களிடம், "வேகமாக வாருங்கள்" என்று கூறினார்கள். அவர்கள் பேழைக்குள் பிரவேசித்தார்கள். ஏன், ஜனங்களோ, என்ன நடந்ததோ என்று வியப்பாக உள்ளதே? கொடுங்காற்று ஏதோ ஓரிடத்திலிருந்து புறப்பட்டு வருகிறதே" என்று கூறினார்கள். 65. ஆனால் மிருக சிருஷ்டிப்புகளும் கூட ஏதோ தவறாயிருக்கிறது என்று அறிந்து கொள்ளும் அளவுக்கு அப்படிப்பட்ட ஒரு இழுப்பு அங்கேயிருந்தது. அங்கே மேலே அமர்ந்து கொண்டிருந்த வயதான அம்மா பறவையும் அப்பா பறவையும் அப்படியே பாடிக்கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. மின்னல் முதல் தடவையாக இடி ஒலியை எழுப்ப, முதல் முறையாக அந்த அடையாளங்களும் அற்புதங்களும் சம்பவிக்கத் தொடங்கினபோது, தகப்பன் பறவையானது, "தாய் பறவையே, வேகமாக வந்துவிடு, நாம் நேராக பேழைக்குள் போய்விடுவோம், ஏனென்றால் நோவா சொன்னது சரியாகச் சம்பவிக்கப் போகிறது. அது தேவனுடைய ஆவியானவர் எனக்குள் அசைவாடுவதாக இருக்கிறது, நாம் பேழைக்குள் போய்விடுவோம்" என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. 66. அங்கு வெளியே அந்த மலையின் பக்கவாட்டில் மேய்ந்து கொண்டிருந்த தாய் ஒட்டகத்தையும், இங்கேயிருக்கும் தகப்பன் ஒட்டகத்தையும் என்னால் காண முடிகிறது. மின்னலின் முதலாவது பளீரொளியானது ஆகாயத்தினூடாகப் போய், அடையாளங்களும் அற்புதங்களும் கண்ணுக்குத் தோன்றத் தொடங்கின போது, அப்பா ஒட்டகமானது அம்மா ஒட்டகத்தைப் பார்த்து, "வேகமாக வா, இதுதான் அது. இங்கே உள்ளே ஏதோவொன்று பலமாக பற்றி இழுத்துக் கொண்டிருக்கிறது, ஏதோவொன்று என்னை அசைத்துக் கொண்டிருக்கிறது, நான் பேழைக்குள் போயாக வேண்டும்" என்று கூறுவதை நான் கேட்கிறேன். அவைகள் பேழைக்குள் வரும் என்று தேவன் நியமித்திருந்தார் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். 67. இன்றும் நான் அதை நம்புகிறேன், தேவனுடைய குமாரனுடைய வருகையின் அடையாளங்களும் அற்புதங்களும் எல்லாவிடங்களிலும் தோன்றிக் கொண்டிருக்கும் போது, தேவனுடைய சத்தத்தைக் கேட்க வேண்டுமென்று தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு மனிதனோ அல்லது பெண்ணோ, அவர்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு வேகமாக பேழைக்கு நெருக்கியடித்துக்கொண்டு சென்று, பாதுகாப்புக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள், அது மனிதன் தப்பிக்கொள்ளும்படியாக தேவனால் அருளப்பட்ட வழியாக இருக்கிறது. அது சரியே. அடையாளங்கள் தோன்றுவதையும், அற்புதங்கள் தோன்றுவதையும், மறை பொருளாயிருக்கும் இரகசியமான காரியங்கள் சம்பவித்துக் கொண்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள், நிச்சயமாக, ஆகாயத்தினூடாக பறக்கும் தட்டுகளும் மற்ற எல்லா காரியங்களும். இயேசு, "மேலே வானத்திலும், கீழே பூமியிலும், அக்கினி ஸ்தம்பங்களும் மற்றும் புகைக்காடாகிய அடையாளங்கள் உண்டாகும்; கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே, இது சம்பவிக்கும்" என்று இயேசு கூறியிருக்கிறார். 68. அவர் இந்த எல்லாவற்றையும் பேசியிருக்கிறார். சமுத்திரம் முழக்கமாயிருக்கும், ஆழிப் பேரலைகள் உடைத்துக் கொண்டுவரும்; மற்றும் எல்லா காரியங்களும் சம்பவிக்கும்; மனிதரின் இருதயங்கள் செயலிழந்து போகும், நாம் எப்பொழுதும் கொண்டிருந்ததிலேயே இருதயக்கோளாறு உடைய மிகப்பெரிய காலம்; திகில்; குழப்பமான காலம்; தேசங்களுக்கிடையே இடுக்கண். ஓ, என்னே. தீர்க்கதரிசி எப்படியாக, "இங்கேயிருக்கும் குதிரை இல்லாத அந்த வண்டிகள், அவைகள் அகன்ற சாலைகளில் விரைந்தோடும், அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னலைப் போல வேகமாய் ஓடும்" என்று கூறியிருக்கிறான். உரைக்கப்பட்டிருக்கிற எல்லாமே, நாம் இன்று அதனுடைய முன்புறத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது என்ன? அது ஜனங்களாகிய உங்களுக்கு தேவனுடைய எச்சரிக்கையாக இருக்கிறது: "தேவனைச் சந்திக்க ஆயத்தப்படு. ஆயத்தமாகு!" 69. "சகோதரன் பிரன்ஹாமே, நான் ஏன் தேவனைச் சந்திக்க ஆயத்தப்பட வேண்டும்?" சகோதரனே, நீ ஒரு கலியாணத்திற்காக ஆயத்தப்படுகிறாய்; நீ மற்ற எதற்காகவும் ஆயத்தப்படுகிறாய். இந்தக் காரியங்கள் வந்து கொண்டிருப்பதை நீ காணும் போது, நீ தேவனைச் சந்திக்க ஆயத்தப்படு. நீ உன்னுடைய தலையில் நரைமுடியைக் காணும் ஒவ்வொரு முறையும், உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தப்படுவது நல்லது என்பதையே அது அர்த்தப்படுத்துகிறது. இறுதிச் சடங்குகளை மேற்பார்வையிடுபவர் செய்யும் ஏற்பாடுகளை நீ கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும், தேவனைச் சந்திக்க ஆயத்தப்படுவது தான் அதற்கு அர்த்தம். ஒவ்வொரு முறை ஒரு குழந்தை பிறக்கும் போதும், தேவனைச் சந்திக்க ஆயத்தப்பட வேண்டும் என்பது நினைவிருக்கட்டும். இறுதி சடங்கு ஊர்வலம் கடந்து செல்லும் ஒவ்வொரு தடவையும், தேவனைச் சந்திக்க ஆயத்தப்படு. ஒரு எச்சரிப்பாக நீ சுவிசேஷத்தைக் கேட்கும் ஒவ்வொரு முறையும், தேவனைச் சந்திக்க ஆயத்தப்படு. 70. தேவன் தப்பிக்கொள்ளும்படியான ஒரு வழியை உடையவராயிருக்கிறார். நீங்கள் பாதுகாப்பாக இருக்கும் இடமாகிய, இயேசு கிறிஸ்துவுக்குள் இப்பொழுதே வந்துவிடுங்கள். அந்த மிருகங்கள் ஒவ்வொன்றும், ஜோடு ஜோடாக, சரியாகப் பேழைக்குள் பிரவேசித்தன. தேவனுடைய கடுங்கோபத்திலிருந்து உண்மையிலேயே தப்பிக்கொள்ள விரும்புகிறவர்களுக்காக தேவன் எப்போதுமே ஒரு வழியை உண்டாக்குகிறார். 71. துரிதமாக வந்துவிடுங்கள், நாம் அநேக காரியங்களைக் குறித்து சிந்தித்துப் பார்க்க முடியும். நான் யோபைக் குறித்து சிந்தித்துப்பார்க்க முடியும், வேதாமகத்திலேயே மிகவும் பழைய புத்தங்களில் ஒன்று தான் யோபு. யோபு அங்கே நின்றுகொண்டிருப்பதை என்னால் சிந்தித்துப் பார்க்க முடிகிறது, கொப்பளங்கள் (பருக்கள்) வெடித்துக் கிளம்பின. ஜனங்கள் சிலசமயங்களில், "நல்லது, யோபு பாவம் செய்திருந்தான்" என்று கூறினார்கள். நிறைய நேரங்களில், இன்று யாரோ ஒருவர், இந்த நபருக்கு இது நடந்ததற்கும், இவருக்கு இது நடந்ததற்கும் காரணம் என்னவென்றால், அவர்கள் பாவிகளாக இருக்கிறார்கள் என்பதைத் தான் அது காட்டுகிறது என்று கூறுகிறார். 72. அது அவர்கள் பாவிகளாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதில்லை, நிச்சயமாக இல்லை. சிலசமயங்களில், வியாதி வரும்படிக்கு தேவனே அனுமதிக்கிறார். ஆனால் யோபைப் போன்று, நீங்கள் தேவனுக்கு முன்பாக, உங்கள் இருதயத்தில், தூய்மையாகவும், குற்றமற்றவர்களாகவும் இருந்தீர்கள் என்று அறிந்திருந்தால்... யோபுவும் கூட, வந்த சில தேற்றரவாளர்களை உடையவனாயிருந்தான், அவர்கள் ஏழு நாட்களாக அவனுக்கு தங்கள் முதுகுகளைத் திருப்பினவர்களாக உட்கார்ந்து கொண்டு, அவன் ஒரு இரகசிய பாவி என்று அவனைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யோபுவோ கீழாக முடியவில்லை... [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) - சகோதரனே. 73. "நீ பயித்தியக்காரி போலப் பேசுகிறாய்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்." சகோதரனே, அவன் உடையவனாயிருந்தான்... அவன் ஒரு காரியத்தை அறிந்திருந்தான். தேவன் மாற்று வழியாக இருந்ததை. அவன் உறுதியாகப் பற்றிப்பிடிக்க வேண்டியிருந்தது எல்லாமே தேவனாகத்தான் இருந்தது. எனவே, கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம். நான் நிர்வாணியாக இந்த உலகத்திற்குள் வந்தேன், நான் நிர்வாணியாக வெளியே போவேன், ஆனால் கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம். 74. அந்த நிலையிலுள்ள ஒரு மனிதன், தேவனுடைய வார்த்தையைத் தொடர்ந்து கெட்டியாகப் பிடித்துக்கொள்ள விரும்பும் ஒரு மனிதன், அப்படியானால் தேவன் ஏதோவொன்றை அவனுக்கு அனுப்ப கடமைப்பட்டிருக்கிறார். அவனைத் தம்மிடம் கொண்டுவர தேவன் கடமைப்பட்டிருக்கிறார். 75. இன்றிரவு, தெய்வீக சுகமளித்தலை விரும்பி, இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஜனங்களாகிய நீங்கள், தெய்வீக சுகமளித்தல் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியம் அங்கு உண்டு என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிப்பீர்களானால், அதை உங்களுக்கு அறிமுகப்படுத்த தேவன் கடமைப்பட்டிருக்கிறார். ஆமென். ஏனென்றால் தேவனுடைய வார்த்தை அதைப் போதிக்கிறது. 76. அங்கே ஒரு தீர்க்கதரிசி இருந்தான். அது சரியே. அங்கே பழங்காலத்தில் ஒரு தீர்க்கதரிசி இருந்தான், அவனுக்கான தேவனுடைய சித்தம் என்னவென்று அவனுக்குச் சரியாகத் தெரியாதிருந்தது. அவன் காத்திருந்தான். என்ன செய்ய வேண்டுமென்று அவனுக்குத் தெரியவில்லை. எனவே முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, எல்லாமே தவறாகப் போவதாகத் தோன்றின போது, அவனுடைய தேற்றரவாளர்கள் அவனை ஆறுதல்படுத்தவில்லை, அப்படியானால் தேவன் கடமைப்பட்டவராக இருந்தார். கிழக்கிலிருந்து ஒரு சிறு மனிதன் வந்திருந்தான், அவன் தான் எலிகூ எலிகூ அவனிடம் நின்று, "இப்போது பாரும்..." என்றான். 77. நாம் அதை எளிய வடிவில் கூறுவோம். யோபு, "இப்பொழுது பாருங்கள், மரங்கள், அவைகள் மரிக்கும்போது, அவை மறுபடியும் ஜீவிப்பதை நான் -நான் காண்கிறேன். மலர்கள், அவைகள் மரிக்கும்போது, அவைகள் மீண்டும் ஜீவிக்கின்றன. ஆனால் மனிதனோ படுத்துக்கிடக்கிறான், அவன் ஆவியை விட வேண்டியிருக்கிறது. அவன் ஒழிந்து போகிறான். அவனுடைய குமாரர்கள் அவனுக்கு மரியாதை செலுத்த வருகிறார்கள், ஆனால் அவன் எங்கே? ஓ நீர் என்னைக் கல்லறையில் ஒளித்து வைத்திரும்" என்றான், மேலும் அதைப் போன்ற மற்ற காரியங்களையும் அவன் பேசினான். 78. எலிகூ, "இப்பொழுது, பொறும், யோபோ" என்றான். "பொறுத்திரு, யோபே, நீர் தேவனைத் தவறாக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறீர். இப்பொழுது, அந்தப் பூவானது பாவம் செய்திருக்கவில்லை. அந்த மலர் மீண்டும் ஜீவிக்கும்படியாக தேவன் ஒரு அருளப்பட்ட வழியை உடையவராயிருக்கிறார்" என்றான். 79. நான் வளர்ந்து, நான் வந்திருக்கிற இடமாகிய, மேலே வடக்கு தேசத்தில்... அங்கே மேலேயுள்ள பெண்கள், உங்களைப் போன்று பூக்களைப் போல இருக்கிறார்கள். அந்தச் சிறு மலர்கள் கோடைகாலத்தில் அழகாக இருப்பார்கள், அதன்பிறகு உறைபனி கூட வரும், அவர்களில் சிலர் வாலிபமாக இருக்கிறார்கள், சிலர் வயதானவர்களாக இருக்கிறார்கள், ஆனால் உறைபனி உடன் வந்து, அவர்களைக் கடிக்கும் போது, அதுவே மரணமாக இருக்கிறது. அவைகள் தங்களுடைய சிறு தலையைத் தாழ்த்துகின்றன; முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, அந்த பூவிதழ்கள் உதிர்ந்து விடுகின்றன, ஒரு சிறு கருப்பு விதையானது அதை விட்டு வெளியே உதிர்ந்து விழுந்து விடுகிறது; அதன்பிறகு அவைகளுக்கு ஒரு இறுதி சடங்கு ஊர்வலத்தை அவைகள் கொண்டிருக்கின்றன. 80. மழை அதன்மேல் பொழிகிறது, அவைகள் கீழே (crying down) போகின்றன, அது அந்தச் சிறு விதையை நிலத்தில் புதைக்கிறது. பிறகு அதனோடு கூட கடுங்குளிரான குளிர்காலம் வருகிறது; அப்போது அது உறைந்திருக்கும் என்று நினைக்கிறேன், இப்பொழுது அங்கு மேலே நான்கு அல்லது ஐந்து அங்குலங்கள் உயரத்திற்கு, ஆழத்திற்கு உறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். இப்பொழுது, அந்தச் சிறு பூவிதழ்கள் போய்விடுகின்றன. கிழங்கின் எல்லா ஈரப்பதமும் போய்விடுகின்றன; அந்தச்சிறு விதையானது வெடித்து, பிளந்து திறக்கிறது; விதைபருப்பானது போய்விடுகிறது. 81. இப்பொழுது, அது டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களினூடாக தொடர்ந்து போகிறது. இப்பொழுது, அதனோடு மே மாதம் வருகிறது; ஏப்ரல் மாதம் கடைசி, மே மாதம் முதல் பகுதி. அப்போது அந்த விதை போய்விடுகிறது, விதைபருப்பு போய்விடுகிறது, பூவிதழ் போய்விடுகிறது, தண்டு போய்விடுகிறது. அங்கே அந்தப் பூவைப் பற்றியதாக, காணக்கூடியதாக இருந்த எல்லாமே போய்விடுகின்றன. 82. அப்போது அது போய்விட்டதா? இல்லை. தேவன் ஒரு அருளப்பட்ட வழியைக் கொண்டிருக்கிறார். அங்கே ஜீவனின் ஒரு சிறு கருஉயிர்மம் (germ) எங்கேயோ கிடக்கிறது. அதோ அங்கே கிழக்கில் அந்த சூரியன் உதித்து, பூமியின் மேல் வெப்பத்தை பிரகாசிக்கத் தொடங்குவது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, அது மீண்டும் ஜீவிக்கிறது. ஏன்? அது மறுபடியும் உயிர்வாழ தேவன் அதற்காக ஒரு வழியை அருளியிருக்கிறார். ஒரு மலர் மீண்டும் ஜீவிக்க தேவன் அதற்காக ஒரு வழியை உண்டு பண்ணியிருப்பாரென்றால், அவருடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிற ஒரு மனிதனைக் குறித்து என்ன? நாம் மீண்டும் ஜீவிக்கும்படியாக, தேவன் நமக்காக எப்படியாக ஒரு வழியை உண்டுபண்ணியிருக்கிறார். 83. ஆனால் யோபு பேசிக்கொண்டிருந்து, மனிதன் தன்னுடைய பாவத்தினிமித்தமாகவும், தன்னுடைய மீறுதல்களினி மித்தமாகவும் தேவனிடமிருந்து அறுப்புண்டு போனதைக் கண்டான்... எலிகூ அதை அவனுக்கு புரியும்படி சொல்லத் தொங்கினான், அவனுடைய - அவனுடைய மீறுதல்கள் எப்படியாக அவனைதேவனை விட்டுத் தூரமாக எடுத்துக்கொண்டு போயிருந்தது. அதன்பிறகு யோபு அதைக் குறித்து சிந்திக்கத் தொடங்கினான். அவன் அங்கே நின்று கொண்டிருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, சற்றுநேரம் கழித்து, எலிகூ, ஆனால் அங்கே ஒருவர், நீதியான ஒருவர், பிளவில் நிற்கும் ஒருவர் வருகிறார், அவர் தம்முடைய கரத்தை ஒரு பாவியின் மேலும், ஒரு பரிசுத்த தேவன் மேலும் வைப்பார்; பிறகு பூவானது மண்ணுக்கு வெளியே எழும்புவது போன்று மனிதன் மீண்டுமாக மண்ணை விட்டு வெளியே உயிர்த்தெழுந்து வருவான். இப்பொழுது, நீர் வருடத்தின் வசந்தக் காலத்தில், பூவானது மேலே வருவதைக் கவனிக்கலாம்; ஆனால் மனிதனோ படுத்துக் கிடக்கிறான் என்றும், அவன் ஆவியை விடுகிறான் என்றும், அவன் எங்கே என்று கூறுகிறீர்? ஏனென்றால் அவன் தேவனால் அருளப்பட்ட பாதைக்கு வெளியே இருக்கிறான்" என்றான். 84. ஆனால் அவனைத் திரும்பவும் அந்த வழியில் வைக்கப் போகிற ஒருவர் வருகிறார். அல்லேலூயா! ஓ, நான் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது, என்னுடைய மிகவும் உள்ளே உள்ள ஜீவன், "நான் இதை மனிதனிடம் கொண்டுவர என்ன செய்யலாம்?" என்று உரத்த ஆர்ப்பரிப்பு செய்கிறது. 85. "ஆமாம், அவனைத் திரும்பவும் அந்த வழியில் வைக்கும் ஒருவர் வருகிறார். அங்கே இந்த ஒருவர் நின்று தம்முடைய கரத்தை இங்குள்ள பாவத்தின் இந்த - இந்த பிளவின் மேல் வைப்பார், அவர் உள்ளே பிரவேசித்து, தம்மேல் பாவத்தை ஏற்றுக்கொண்டு, அந்த மனிதன் மறுபடியுமாக மண்ணுக்கு வெளியே வரக்கூடிய அந்த வழிக்கு அவனைத் திரும்ப இணைப்பார்." 86. யோபு அதைக் காணத் தொடங்குகிறான், அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான், அவன் இந்தச் சிறு தீர்க்கதரிசியாகிய எலிகூ சொல்லுவதற்கு கவனம் செலுத்தத் தொடங்கினான். முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, யோபு எழுந்தான், தேவன் தம்முடைய இரட்டைத் தொலை நோக்கிகளை (binoculars) கீழே அவனுடைய கண்கள் மேல் வைத்தார். அவன் கீழே 4000 வருடங்கள் பார்த்து, அவன், "என் மீட்பர் உயிரோடிருக்கிறார், கடைசி நாட்களில், அவர் பூமியின் மேல் நிற்பார். இந்த புழுக்கள் இந்த சரீரத்தை அழித்துப்போட்டாலும், இருப்பினும் என்னுடைய மாம்சத்திலிருந்து தேவனைப் பார்ப்பேன். நானே பார்ப்பேன், என் கண்களே காணும், அந்நிய கண்கள் அல்ல" என்றான். 87. ஆம், அவன் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கண்டான். அவன், "என் கண்களே காணும், அந்நிய கண்களல்ல" என்றான். அவன் இயேசுவைக் கண்டான். அவன் தேவனால் அருளப்பட்ட வழியில் இருந்தான் என்பதை அறிந்திருந்தான், அவன் தனக்குள்ளே ஜீவனைக் கொண்டிருந்தான், அவன், "நான் அந்த நாளில் உயிர்த்தெழுவேன் என்று அறிவேன், ஏனென்றால் நான் அவரிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறேன்" என்றான். கடைசி நாளில், இயேசு நின்று மனிதனுக்காக அந்த வழியை இணைக்க வேண்டியிருந்தது. எப்படியாக தேவன் எப்போதுமே விசுவாசிக்கிறவர்களுக்கு தப்பிக்கொள்ளும்படியான ஒரு வழியை உண்டாக்கியிருக்கிறார். 88. நான் மோசேயைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன், இஸ்ரவேல் புத்திரர்கள் அங்கே எகிப்தில் இருந்தார்கள், அவர்கள் எகிப்தில் மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாய் இருந்து, எகிப்திய ஆளோட்டிகளால் தாக்கப்பட்டும், அடிக்கப்பட்டும் இருந்தார்கள். தேவனோ தப்பிக்கொள்ளும்படியான ஒரு வழியை உண்டாக்கினார். அவர் மோசே என்ற பெயருடைய ஒரு மனிதனை அனுப்பினார். மோசே அவர்களை வெளியே கொண்டுவருவதற்கு முன்பு... அவர்கள் பாவம் செய்து, தேவனை விட்டுத் தூரமாகப் போயிருந்தார்கள். மோசே செய்ய முடிந்த ஒரே வழி என்னவென்றால், தேவனுக்குக் கீழ்ப்படிவதாகத்தான் இருந்தது. தேவன் அவனை அங்கு அனுப்பி, ஒரு ஆட்டுக்குட்டியை எடுத்து, பலியிட்டு, அந்த இரத்தத்தை கதவின் மேற்சட்டத்திலும் (lintel), கதவின் நிலைக்காலிலும் பூச வேண்டும் என்றும் அவனிடம் கூறினார். 89. அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று நீங்கள் கவனிக்க விரும்புகிறேன், மேற்சட்டம், கதவின் மேல், கதவின் நிலைக்காலிலும், கீழ்ப்பாகம் அல்ல. இல்லை... கிறிஸ்துவின் இரத்தமானது கீழே பார்க்க அல்ல, அது மேலே நோக்கிப் பார்க்கவே அது பரிபூரணமாக கதவில், அது சிலுவையின் வடிவத்தில் உள்ளது. அந்நாளில் ஒவ்வொரு தகப்பனும் தன்னுடைய குடும்பத்தின் ஆசாரியனாக இருந்தான். ஒவ்வொரு தனிப்பட்ட குடும்பமும் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொல்ல வேண்டியிருந்தது. அந்த ஆட்டுக்குட்டியானது 14 நாட்கள் அதை நல்ல முறையில் பராமரித்து வைத்திருந்து, சோதனை பண்ணப்பட வேண்டியிருந்தது. கிறிஸ்துவுக்கு பரிபூரண முன்னடையாளம், அவர் தம்மைக் குற்றம் சாட்டின எல்லாருக்கு முன்பாகவும் சோதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் மேல் ஒரு குற்றமும் இல்லாதிருந்தது. 90. நாம் ஒரு கணநேரம் நோக்கி (கண்ணோட்டம் விட்டு, தேவனுடைய இந்த ஆட்டுக்குட்டியானவர் மேல் அவர்கள் ஒரு குற்றத்தையாவது கண்டுபிடிக்க முடிந்ததா என்று பார்ப்போம். நிச்சயமாகவே (Course), அவருடைய சிநேகிதர்கள் எல்லாருமே அவரைக் குறித்து சாட்சி கொடுத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நாம் அவருடைய சத்துருக்களை பார்ப்போம். அவருடைய முக்கிய சத்துருவாகிய யூதாஸ்காரியோத்து, அவர் அங்கே தொங்கிக் கொண்டிருந்ததை அவன் கண்டபோது, அவன், குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேனே" என்று சொல்லி, அந்தப் பிரதான ஆசாரியர்களிடமாக அந்தப் பணத்தை எறிந்துவிட்டு, போய், ஒரு கயிறை எடுத்து, தன்னைத் தானே தூக்கிட்டு கொண்டான். 91. நாம் ரோம் நூற்றுக்கதிபதியை நோக்கிப் பார்ப்போம், இயேசு மரித்தபோது, பூமி அதிர்ந்து, அவ்வாறு நடந்து கொண்டிருந்ததை அவன் உணர்ந்தபோது, அவன் தன்னுடைய நெஞ்சில் தன் கரத்தை வைத்து, "மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்" என்றான். 92. பிதாவானவர் தாமே பரலோகத்தின் பார்வையை நிறுத்திக்கொண்டார். என்ன சம்பவிக்கும் என்று தீர்க்கதரிசி உரைத்ததின்படியே, நடுப்பகலானது நள்ளிரவின் இருளாக மாறிவிட்டது. தேவன், "அது என் நேச குமாரன்" என்றார். நிச்சயமாக, அவர் அவ்வாறு கூறினார். 93. அந்தப் பிலாத்துவை நோக்கிப் பாருங்கள், அந்த மகத்தான மனிதன் அங்கே வெளியே நியாயத்தீர்ப்பு ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான். அவன் அதிகாலையிலேயே வெளியே வந்து விட்டான், அவன் தன்னுடைய மனதில் முழுவதுமாக கோபமுள்ளவனாயிருந்தான், எப்படியும் அவன் முற்றிலும் கசப்புள்ளவனாக இருந்தான், அவன் ஒருவிதத்தில் இந்த மனிதரை (இயேசுவை) வெறுத்தான். அவர்கள் அவனை வெளியே அழைத்துவந்து, நியாயத்தீர்ப்பு ஆசனத்தில் அமர வைத்தனர், அது நியாயத்தீர்ப்பு கொடுக்க அதிகாலை நேரமாக இருந்தது. அவர்கள் அவரை (இயேசுவை) மேலே கொண்டு வந்தார்கள், அவர் (இயேசு) தனக்காக சில அற்புதங்களைச் செய்ய வேண்டுமென்று அவன் விரும்பினான், அல்லது ஏதோவொரு விதத்தில் அவனை மகிழ்விக்க விரும்பினான். 94. மேலும் கவனியுங்கள், அவன் இயேசுவை குற்றவாளியாகத் தீர்க்க சற்றே ஆயத்தமானான், அப்போது தன்னால் கூடியமட்டும் வேகமாக கீழே சாலையில் ஏதோவொன்று வந்து கொண்டிருக்கும் சத்தத்தை நான் கேட்கிறேன். அது என்ன? அது அரண்மனையிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு குதிரையாக இருந்தது. ஒரு மனிதன் அந்தக் குதிரையை விட்டு குதித்திறங்கி, அங்கே மேலே ஓடுகிறான். அது என்ன? அது அரண்மனை காவலர்களில் ஒருவன். அவன் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து ஒரு கடிதத்தை வெளியே எடுத்து, பிலாத்துவுக்கு முன்பாக விழுந்து, அதை அவனிடம் கொடுத்தான். அவன் அதை வாங்கி, அதைத் திறந்து பார்த்தான். அவன் இயேசுவை குற்றவாளியாகத் தீர்க்கும்படி, ஆயத்தமாக தன்னுடைய ஆவேச வெறியோடு அங்கே நின்று கொண்டிருந்தான். அவன் வாசிக்கத் தொடங்கியபோது, அவனுடைய கைகள் நடுங்கத் தொடங்கினது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதத் தொடங்கினது. அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது? ஒருசில நிமிடங்களில் அந்த இரக்கமற்ற (கொடூரமான) சக்கரவர்த்தி (emperor) மாறுவதற்கு என்ன காரணம்? நின்று கொண்டிருந்த, அல்லது அவர்களுடைய சக்கரவர்த்தியைப் போன்ற ஒரு மனிதன் (அவ்வாறு) ஆவதற்கு என்னதான் நடந்தது, எது அவனை அவ்வாறு செய்ய வைத்தது? நாம் ஒருநிமிடம் அவனுடைய தோள்பட்டை வழியாகப்) பார்வையிட்டு, கண்டுபிடிப்போம். அந்தக் கடிதம் ஒரு அஞ்ஞானியாயிருந்த மனைவியிமிருந்து வந்திருந்தது: "இந்த நீதிமானை ஒன்றும் செய்து விடாதீர்கள், நான் இன்று அவர் நிமித்தமாகச் சொப்பனத்தில் வெகுபாடுபட்டேன் என்று எழுதியிருந்தது. 95. அவன், "என்னிடம் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வாருங்கள், நான் என்னுடைய கைகளைக் கழுவி விடுகிறேன். எனக்கு இதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது" என்றான். அல்லேலூயா! தேவன் அங்கே அவனுக்காக ஒரு வழியை உண்டாக்கிக் கொண்டிருந்தார், அவன் மாத்திரம் அதை ஏற்றுக்கொண்டிருந்திருப்பான் என்றால் அது சரியே. ஆம், ஐயா 96. இன்றிரவு அவர் உங்களுக்காக ஒரு வழியை உண்டாக்கியிருக்கிறார். பிலாத்து செய்த அதே காரியத்தையே நீங்களும் செய்து, அவரை உங்கள் கைகளை விட்டு கழுவிப்போடப் போகிறீர்களா? நீங்கள் ஒருபோதும் அதைச் செய்ய மாட்டீர்கள். சில ஜனங்கள் பிலாத்துவை நியாயப்படுத்துகிறார்கள். இல்லை, ஐயா. பிலாத்து தன்னுடைய கைகளைக் கழுவியதன் மூலமாக நீதிமான் என்று நிரூபிக்கப்படவில்லை. நீங்கள் செய்வீர்கள். 97. பிலாத்து, நீதிமான் ஆக்கப்பட்டிருப்பான் என்றால், நீங்கள் அதேவிதமாக இருக்க முடியும். நீங்கள் அதற்குச் செவிகொடுத்து, இங்கே ஒவ்வொரு இரவும் அதைக் கண்டு, நீங்கள் உங்கள் கைகளைக் கழுவி, நல்லது, அதனோடு நான் எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ள மாட்டேன், நான் திரும்பிப் போய்விடுவேன்" என்று கூற முடியும். நீங்கள் அவரை உங்கள் கரங்களை விட்டு அகற்றிப்போட முடியாது. சரி. 98. பிலாத்துவின் முடிவு உங்களுக்குத் தெரியும், அவன் அங்கே நார்வே அல்லது ஸ்வீடனுக்கு அருகில், தன்னைத்தானே தண்ணீரில் மூழ்கடித்து மரித்துப்போனான். இன்னுமாக ஒவ்வொரு வருடமும், அந்த நீலநில தண்ணீர் மேலே வருவதைப் பார்க்கும்படியாக ஜனங்கள் அங்கே போகிறார்கள், அது அவன் இயேசுவிடமிருந்து தன்னுடைய கைகளைக் கழுவின அதே (தண்ணீராக இருந்தது. அது ஒரு மூடநம்பிக்கையாகவும் இருக்கலாம், ஆனால் எப்படியும் அவர்கள் வருடந்தோறும் அதைக் காணும்படி அங்கே ஒன்று கூடுகிறார்கள். இல்லை, ஐயா, உங்களால் அதைக் கழுவிப்போட முடியாது. 99. அங்கே எகிப்தில், தேவன் அவனிடம் கூறினார், அவர், "இப்பொழுது.... அறிவி" என்று கூறினார். எனக்கு அது பிடிக்கும். அவர், "நான் ஒரு வித்தியாசத்தை உண்டாக்கப் போகிறேன்" என்றார். தேவன் ஒரு வித்தியாசத்தை உண்டாக்குகிறார். "நான் எகிப்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் ஒரு வித்தியாசத்தை உண்டாக்கப் போகிறேன். இந்த வித்தியாசமானது ஒரு ஆட்டுக்குட்டியால் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலமாக இருக்கப் போகிறது." வெளியே அழைக்கப்பட்டவர்கள், வேறு பிரிக்கப்பட்டவர்கள். தேவன் எப்போதுமே வேறு பிரிக்கப்படுகிறவர்களுக்காக அழைப்பு விடுக்கிறார். 100. சபையிலுள்ள நிறைய ஜனங்கள், "நாம் இந்த வாலிப மனிதரை விரும்புகிறோம். அவர் இப்போது தான் கல்லூரியை விட்டு வெளியே வந்திருக்கிறார். நான் உங்களுக்குக் கூறுகிறேன், அவர் ஒரு சமுதாய மது அருந்துதலைக் கொண்டிருக்கிறார், மேலும் ஓ, அவர் - அவர் எல்லாரோடும் எளிதாக நன்கு பழகுபவர் (mixer)" என்று கூறுகிறார்கள். 101. எல்லாரோடும் எளிதாக பழகுபவர்களை (mixer) தேவன் விரும்புவதில்லை; அவர் வேறுபிரிந்து வருபவர்களையே (separators) விரும்புகிறார். பவுலை... எனக்காக வேறுபிரித்துவிடு" உங்களைத்தானே உலக காரியங்களை விட்டு வேறுபிரித்துக் கொள்ளுங்கள். தேவன் இரக்கம் உள்ளவராயிருக்கிறார். அது இருக்கும் ஸ்தானத்தில் சுவிசேஷத்தை வைத்து, கறுப்பாயிருப்பதை கறுப்பு" என்றும், வெள்ளையாயிருப்பதை "வெள்ளை" என்றும் அழைத்து, இயேசு கிறிஸ்துவின் கலப்படமற்ற சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணும் சில பழைமை நாகரீகமான பிரங்கிமார்களை எங்களுக்குத் தாரும். யோவான் ஸ்நானகன், "கோடரியானது மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினது போன்று. அதைப் போன்ற இன்னும் அதிகமான பிரசங்கிமார்களை எங்களுக்குத் தாரும். அப்போது நாம் காரியங்களைக் குறித்துள்ள தேவனுடைய வழிக்குத் திரும்பிச் செல்வோம். ஆமென். 102. சரி. நீங்கள் இதைக் கவனிக்க விரும்புகிறேன். அதன்பிறகு அவன், "நீங்கள் இந்த ஆட்டுக்குட்டியை எடுத்து, சாயங்கால நேரத்தில் அதைக் கொல்ல விரும்புகிறேன்" என்றான், கிறிஸ்துவுக்கு பரிபூரண முன்னடையாளம், அவர் சாயங்காலத்தில் கொல்லப்பட்டார். அப்போது இஸ்ரவேலின் முழு சபையாரும் மரணத்திற்கு சாட்சிகளாக இருந்தார்கள். அவர்கள் கிறிஸ்துவில் செய்தார்கள். இரத்தமானது கதவின் மேல் பூசப்பட வேண்டியிருந்தது, அந்த இரவில், மரண தூதன் தேசத்தில் சவாரி செய்து வந்து, இரத்தம் இல்லாத எல்லாவிடங்களிலும் மரணம் இருக்கப் போவதாக இருந்தது. 103. சகோதரனே, நான் இதை உங்களுக்குச் சொல்லுகிறேன், தேசத்தில் மரண தூதன் எப்பொழுதாவது சவாரி செய்து கொண்டிருக்கிற ஒரு நேரம் இருந்திருக்குமென்றால், அது இன்றிரவு தான். ஆசாரியன் நின்று கொண்டிருக்கிற சபை வாசலுக்கு அவன் வருகிறான். இரத்தத்தையும் இயேசுவின் வல்லமையையும் மறுதலித்துக் கொண்டும், தொடர்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு சபை, "தேவனுடைய மகிமை விலகிப் போய்விட்டது." மரண தூதன் உள்ளே செல்கிறான், அதோடு அது முடிந்து விடுகிறது. அப்பொழுது அவர்கள் சடங்காசாரமாகவும் (formal), மரித்தவர்களாகவும், தேவனுடைய வல்லமையை மறுதலிக்கிறவர்களாகவும் ஆகி விடுகிறார்கள். முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, அந்த முழு கூட்டத்தினர் மேலும் மரணம் மூடிக்கொள்கிறது. நீங்கள் ஒருபோதும் அவர்களை விசுவாசிக்கும்படி செய்யவே மாட்டீர்கள். அவர்களால் அதை விசுவாசிக்க முடியாது. 104. இப்பொழுது, இந்த மரண தூதனைக் கவனியுங்கள். என்னால் அந்த தகப்பனைக் காண முடிகிறது. இப்பொழுது, இப்பொழுது, அவர்கள் திடமாக விசுவாசித்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள், சூரியன் அஸ்தமித்து, இருள் வரத் தொடங்கின போது, அவர் ஒருமுறை அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் கீழாக வந்து, அணிவகுத்துச் செல்வதற்கான உத்தரவு கொடுக்கப்படுவது வரையில், அவர்கள் அங்கே கீழேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது. சகோதரனே, இப்பொழுது, நசரீன்களாகிய உங்களுக்கு இது நன்மையானதாக இருக்கும். 105. கவனியுங்கள், இரத்தத்தின் கீழாக வருதல்... ஒருமுறை இரத்தத்தின் கீழாக வந்து, அதை கதவின் மேற்சட்டத்திலும், நிலைக்காலின் மேலும் தெளித்தல். ஆனால் ஒரு மனிதன் அந்த வாசல் வழியாக இந்த வீட்டிற்குள் வரும் ஒவ்வொரு தடவையும், எகிப்தை விட்டு வெளியே அணிவகுத்துப் போகும்படியான உத்தரவுகள் வரும் வரை, அவன் அங்கேயே தங்கியிருந்தான். எனக்கு அது பிடிக்கும். அங்கே தங்கியிருத்தல். 106. அந்த இரவில் விருந்து கொண்டாட்டங்களுக்குப் (parties) போய்க் கொண்டிருந்த அந்த வாலிப பெண்கள் இஸ்ரவேலின் சிறு வாலிப் பெண்களிடம், "ரெபேக்காளே, வேகமாக வா" என்றும், மற்றும் அதைப்போன்ற காரியங்களையும் கூறிக் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது, "ரெபேக்காளே, வேகமாக வெளியே வா, நாங்கள் - போய்க் கொண்டிருக்கிறோம்." "என்னால் வர முடியாது." "ஏன்?" "நல்லது, நாங்கள் இரத்தத்தின் கீழிருக்கிறோம்." ஓ, என்னே. "நாங்கள் இரத்தத்தின் கீழே இருக்கிறோம்." "ஓ, விரைவாக வா, நாம் போவோம். முட்டாள்தனம், அங்கிருக்கும் உன் அப்பாவிடம் உள்ள அந்தப் பழங்கால பைத்தியக்கார மார்க்கம்." "ஆனால் கவனி, நான் கட்டாயம் அந்த இரத்தத்திற்கு அப்பால் போகக் கூடாது என்று என் இருதயத்திலுள்ள ஏதோவொன்று என்னிடம் கூறுகிறது." 107. அவர்கள் தொடர்ந்து தங்கள் பெரிய விருந்து கொண்டாட்டங்களுக்கும் (parties) மற்றவைகளுக்கும் போய்விட்டார்கள். அதன்பிறகு அங்கே அதனூடாக, ஏறக்குறைய நள்ளிரவில், ஒரு வினோதமான உணர்ச்சி வரத் தொடங்கியது, அது இப்பொழுது மறுபடியுமாக உலகத்தின் மேல் வந்து கொண்டிருப்பது போன்று இருந்தது, நாம் அதைக் குறித்து சற்று முன்பு பேசினோம். ஏதோ தவறாக உள்ளது. மகா துயரார்ந்த மந்தமான இருள் பூமியின் மேல் வந்திறங்கியது; காற்று வீசத் தொடங்கினது. நாம் போகப்போகிற இடமாகிய இங்கேயிருக்கும் இந்த வீட்டிற்குள் இருக்கிற இந்தச் சிறு பையனை என்னால் காண முடிகிறது. அவனைப் பாருங்கள், அவன், "அது என்னவென்று சொல்லுங்கள்? நான் - நான் - நான் ஒருவிதத்தில் வினோதமாக உணருகிறேனே. நடனம் ஆடிக் கொண்டிருந்த வாலிப பெண்கள் எல்லாம், வீட்டிற்கு வேகமாக போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்" என்று கூறுகிறான். 108. ஓ, என்னே. அப்போது ஜெபம் பண்ண மிகவும் கால தாமதம் ஆகிவிட்டது. இப்பொழுது, முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, அவன் - அவன் சுற்றும் முற்றும் பார்க்கத் தொடங்கினான் - தொடங்குகிறான். அந்தச் சிறு பையன், அப்பா, வீட்டிலுள்ள மூத்த மகன் கொல்லப்படப் போகிறான் என்று வார்த்தை சொல்லுகிறது?" என்று கேட்பதை என்னால் கேட்க முடிகிறது. "ஆமாம்." "நல்லது, அப்பா, நம்முடைய வீட்டைக் குறித்து என்ன?" "மகனே, நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியுமோ அவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம்." "நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? "நாம் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம். நாம் பெற்றிருக்கிறோம். நாம் இரத்தத்தின் கீழே இருக்கிறோம்." 109. அவன் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது, சற்று கழிந்து.... கொஞ்சம் கழித்து, நான் ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறேன், அந்தச் சிறு பையன் ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறான், அவன் கவனித்தபோது, அதோ இரண்டு பெரிய கறுத்த செட்டைகள் ஆகாயத்தினூடாக வந்து கொண்டிருக்கிறது. அதுதான் மரணம். அங்கே எந்த நேரத்திலாவது கறுத்த செட்டைகள் தேசத்தைத் தாக்குவது உண்டானால், அது இன்றுதான். நாம் பூமி அதிர்ச்சிகளை உடையவர்களாயிருக்கிறோம்; நாம் சாவைக் கொண்டுவருகிற கொள்ளை நோய்களைக் கொண்டிருக்கிறோம். இந்த தேசத்தில் வரக்கூடிய எல்லாவிதமான காரியங்களையும் நாம் கொண்டிருக்கிறோம்; அவர்கள் எகிப்தில் செய்தது போன்றே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அழிவுக்கு முன்பாக எகிப்தைத் தாக்கிய கடைசி வாதை மரணமாக இருந்தது. சபையைத் தாக்குகிற கடைசி வாதை ஆவிக்குரிய மரணமாக இருக்கிறது. அதுதான் கடைசி காரியமாக இருக்கிறது. அவர்கள் மரித்துக் கொண்டிருக்கிறார்கள், சபைகள் முற்றிலுமாக மரித்துக் கொண்டிருக்கின்றன. ஆகிக் கொண்டிருக்கிறோம், நாம், ஓ, நாம் நீடித்தக் கூட்டங்களை கொண்டிருக்கத்தான் செய்கிறோம், ஆனால் எந்த எழுப்புதலும், எழுப்புதல் இல்லை. அவர்கள், அமெரிக்காவில் பெரிய எழுப்புதல். என்று கூறுகிறார்கள். 110. அது எங்கேயிருக்கிறது என்று எனக்குச் சொல்லுங்கள் பார்க்கலாம். எழுப்புதல் எங்கே? அமெரிக்காவில் ஒரு எழுப்புதலின் முதலாவது கட்டம் கூட தாக்கவில்லை. அதற்கு காரணம் என்னவென்றால், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமாக அவர்களைத் திரும்ப தேவனால் அருளப்பட்ட பாதைக்குக் கொண்டு வந்து, கல்வாரி பாதையின் மூலமாக அவர்களைத் திரும்பவும் தேவனிடத்திற்கு அனுப்புவதற்குப் பதிலாக, நாம் மனிதனுடைய வேதசாஸ்திரத்தையும் மற்றும் காரியங்களையும் போதிக்க முயற்சிக்கிறோம். நாம் அவர்களை சபைக்குள் கொண்டுவந்து, அவர்களைச் சபைக்குள் சேர்த்து, அவர்களை சபைக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணி, சபைக்குள்ளே அவர்களுடைய கரங்களைக் குலுக்கி, சபைக்குள்ளே அவர்களுடைய கடிதங்களைக் கட்ட முயற்சிக்கிறோம்; ஆனால் அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய சபையில் பிறந்தாக வெண்டும். அந்த காரணத்தினால் தான் நமக்கு எந்த எழுப்புதலும் இல்லாதிருக்கிறது. 111. நமக்கு என்ன அவசியமாயிருக்கிறது என்றால், மறுபடியும் பழைமை நாகரீகமான கலக்குதல் தான், அங்கே, பழங்கால ஜான் வெஸ்லி எழுப்புதல், அங்கே அவர்கள் நின்றுகொண்டு, இரவு முழுவதும் பிரசங்கம் பண்ணினார்கள், அப்போது பரிசுத்த ஆவியின் வல்லமை கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்தினரின் மேல் விழுந்து கொண்டிருந்தது. அதுதான் நமக்கு மீண்டும் அவசியமாயிருக்கிறது. ஆமென். நான் ஒருவிதத்தில் இப்பொழுது பக்தி பரவசப்படுகிறேன். எனவே கவனியுங்கள், நண்பனே, நான் உங்களிடம் ஒரு காரியத்தைக் கூறட்டும். இந்த தேசத்திற்கு பெரிய தேவையாக இருப்பதைக் குறித்து நான் எண்ணிப்பார்க்கும் போது, நமக்கு இன்னும் கூடுதலாக வேதாகமக் கல்லூரிகள் அவசியமில்லை. நமக்கு இன்னும் அதிகமான பிரசங்கிமார்கள் தேவையில்லை. நமக்கு என்ன தேவையாயிருக்கிறது என்றால், நமக்கிருக்கிற பிரங்கிமார்கள் பரிசுத்த ஆவியால் நிறையப்படுவது தான். அதுதான் நமக்கு அவசியமாயிருக்கிறது. உண்மை, நான் இங்கே நின்று கொண்டிருக்கையில், அதுவே சத்தியமாக இருக்கிறது. 112. இப்பொழுது, நீங்கள் வேறு ஒரு காரியத்தைக் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். பிறகு, அந்தச் சிறு பையன், இந்தச் செட்டைகள் கீழே இறங்கி வருவதை கவனிக்கிறான், அது ஒரு வீட்டுக்குப் போன போது, அலறல் கூக்குரல் சத்தம் எழும்புவதைக் கேட்கிறான். ஆனால் அந்தச் சிறு பையன், "அப்பா, அந்த இரத்தம் அங்கேயிருக்கிறது என்பதில் உமக்கு நிச்சயம் உள்ளதா?" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறதா? அவன் வெளியே நடந்து வந்து, வாசல் மேல் நோக்கிப் பார்த்து, "ஆம், ஐயா, மகனே, அவள் மூடப்பட்டிருக்கிறாள்" என்று கூறுவதை என்னால் காண முடிகிறது 113. அந்த செட்டைகள் அந்த வீட்டை நோக்கி வரத் தொடங்குகிறது, ஆனால் அவள் (she) இந்த விதமாக இறங்கி வரத் தொடங்கின போது, அவள் (she) அந்த இரத்தத்தைப் பார்க்கிறாள், அவர் (He), "நான் இரத்தத்தைக் காணும்போது, நான் கடந்து போவேன் - உங்களைக் கடந்து போவேன். நான் போவேன்" என்றார். அது சரியே. அதன்மேல், தப்பிக்கொள்ளும்படியாக தேவனுடைய அருளப்பட்ட வழி. 114. இன்றிரவு, தேவனால் அருளப்பட்ட பாதை: இன்று கிறிஸ்தவம் என்ற பெயரில் அழைக்கப்படும் அமெரிக்காவில் இருக்கிற இந்தக் குளிர்ந்து போன, சடங்காசாரமான, அலட்சியப் போக்குடைய, தேவபக்தியற்ற நிலையிலிருந்து நீங்கள் தப்பிக்கொள்ளும்படியாக. அவர்கள் செய்யக் கூடாது என்று கிறிஸ்து அவர்களிடம் கூறிய எல்லாவற்றையுமே அவர்கள் செய்கிறார்கள், அவர்கள் அதை கிறிஸ்துவின் நாமத்தில் செய்கிறார்கள். கிறிஸ்து, "வியாதியஸ்தரைச் சுகப்படுத்துங்கள், மரித்தோரை எழுப்புங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம் பண்ணுங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்" என்று கூறியிருக்கிறார், ஆயினும் அவர்கள் அதை மறுதலிக்கிறார்கள். அவர்கள் தங்கள் பிரசங்கிமார்களுக்கு கல்வி புகட்டி, அவர்களை வேதசாஸ்திரத்தோடு கூட வெளியே அனுப்புகிறார்கள், சரியாக, செய்யக் கூடாது என்று அவர் சொன்னதையே, பிறகு அதை கிறிஸ்துவின் நாமத்தில் செய்கிறார்கள். ஆமென். 115. சகோதரனே, அது சத்தியமாக இருக்கிறது. அதைக் கூற வேண்டிய விதத்தில் என்னால் அதைக் கூற முடியாமல் இருக்கலாம், ஆனால் அது என்னுடைய இருதயத்தில் உள்ளவிதமாக நான் அதைக் கூறுகிறேன். அது ஒருக்கால் வெறுங்காலுடன் இருக்கலாம், ஆனால் அது -அது - அது மனிதன் சுவிசேஷத்தைக் கையாளும் நேரமாக இருக்கிறது, ஒரு ஜோடி ரப்பர் கையுறைகளை அணிந்துகொண்டு கோழையாக (sissified) இருப்பது அல்ல. அவர்களிடம் சத்தியத்தைச் சொல்லுங்கள். அது சரியே. அவர்கள் இங்கேயிருக்கும் உங்களைப் பகைக்கலாம், ஆனால் நியாயத்தீர்ப்பு வழக்கு மன்றத்தில் (Judgment Bar) அவர்கள் உங்களை நேசிப்பார்கள். அது சரியே. நாம் சுற்றிலும் பயங்கொள்ளிகளாக (கோழைகளாக - sissying) இருக்கக் கூடாது. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷமானது கோழைத்தனமாக இருப்பதற்கு (sissified) அல்ல. அது ஒரு மனிதன் எப்பொழுதும் செய்ததிலேயே மிக மகத்தான காரியமாக இருக்கிறது. 116. தேவன் - ஒரு மனிதன் எவ்வளவு... என்று தேவன் ஒருபோதும் நியாயத்தீர்ப்பு செய்வதில்லை. யாரோ ஒருவர், அவன் ஒரு மனிதன் அல்லவா? அவனுக்கு அவ்வளவு அகன்ற தோள்களும், அவ்வளவு பெரிய கைகளும் உள்ளதே" என்று கூறலாம். அவன் ஒரு காட்டுமிராண்டியாக இருக்கலாம், ஆனால் அவன் தனக்குள் மனிதனுக்குரிய மிகச்சிறிய அளவையும் கொண்டிராமலும் இருக்கலாம். அது சரியே. நீங்கள் மனிதனை பலத்தைக் கொண்டு நிதானிக்க வேண்டாம், நீங்கள் மனிதனை குணாதிசயத்தைக் கொண்டு நிதானியுங்கள். 200 பவுண்டுகள் எடையிருந்தும், ஒரு தாயின் கைகளிலிருந்து குழந்தையை வெளியே தூக்கி எறிந்து விட்டு, அவனுடைய சொந்த மிருகத்தனமான இச்சைக்காக அவளைக் கற்பழிக்கும் மனிதர்களையும் நான் கண்டிருக்கிறேன். அது சரியே. நீங்கள் ஒரு மனிதனை அவனுடைய கையிலுள்ள காய்ப்புகளைக் (callous) கொண்டு நிதானிக்க வேண்டாம், ஆனால் அவன் ஜெபித்துக் கொண்டு வருகிற இடமாகிய காற்சட்டையின் முழங்கால்களில் இருக்கும் காய்ப்புகளைக் (bags) கொண்டு நிதானியுங்கள். அல்லேலூயா! அதுதான் நமக்கு இன்று தேவையாக இருக்கிறது, அதைப்போன்று உண்மையான, தெய்வ பக்தியுள்ள, பழைமை நாகரீகமான, பரிசுத்த ஆவியில் திடநம்பிக்கை உடைய இன்னும் கூடுதலான சில மனிதர்கள் தான் நமக்குத் தேவையாயிருக்கிறது. 117. என்னுடைய மகனுக்குள்ளே வேதசாஸ்திரத்தை நுழைக்க முயற்சிக்கும் அங்கே உலகத்திலுள்ள போதகர்கள் எல்லாரையும் நான் கொண்டிருப்பதைக் காட்டிலும், ஒரு மனிதன் தன்னுடைய ஏபிசிகளையும் (மொழியின் முதலெழுத்துக்களையும்) கூட அறியாதவனாக இருந்தாலும், ஏதோவொரு இடத்திலுள்ள உயரமான இழைமுடிச்சுள்ள புற்களுள்ள ஒரு திட்டில் (broomsedge patch) ஒரு அடிக்கட்டை மூலமாக இங்கே வெளியே நிற்கும்படியும், அவன் பரிசுத்த ஆவியைக் கொண்டவனாய் அதனூடாக வருவது மட்டும் அவனுக்காக ஜெபிக்கிற அதைப் போன்ற ஒரு மனிதனையே என்னுடைய மகனோடு கூட நான் கொண்டிருக்கும்படி இன்னும் அதிகம் விரும்புவேன். ஆமென். சகோதரனே, அது சாத்தியமாக உள்ளது. இன்று நமக்குத் தேவையாயிருப்பது என்னவென்றால், பாவிகளுக்கான தேவனால் அருளப்பட்ட பாதைக்குத் திரும்பி வருவது தான். 118. அதோ, அங்கே கீழே அவர்கள் அதன் கீழே அணிவகுத்துப் போனபோது, அவர்களுக்கு... இல்லாதிருந்தது. அணிவகுத்துச் செல்வதற்கான உத்தரவுகள் அவர்களுக்குக் கிடைத்த உடன், அவர்கள் பிரயாணத்தைத் துவங்கினார்கள். அவர்கள் அந்தப் பாலத்தைக் கடந்து, குறுக்கே போன போது, அவர்களுக்காக சமுத்திரத்தின் அடிப்புறத்தினூடாக ஒரு பாலத்தை தேவன் உண்டாக்கினார். அவர்கள் அங்கு போய் சேர்ந்த போது, அவர்களுக்குக் குடிக்க ஏதோவொன்று தேவையாயிருந்தது, தண்ணீர் எல்லாமே முழுவதும் காலியாகியிருந்தது, அப்போது அங்கே ஒரு குளம் இருந்தது. ஆனால் அந்தத் தண்ணீரோ கசப்பாக இருந்தது, அவர்களால் அதைக் குடிக்க முடியாதிருந்தது. அப்போது தேவன் ஒரு அருளப்பட்ட மரத்தைக் கொண்டிருந்தார். அவன் அப்படியே அங்கு நடந்து சென்று, அந்த மரத்தை வெட்டி வீழ்த்தி, அதை அந்த குளத்தில் போட்டான். உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் குடித்துக்கொள்ளுங்கள்." தேவன் ஒரு அருளப்பட்ட வழியை உடையவராயிருக்கிறார். 119. நாமும் பிரயாணத்தில் இருக்கிறோம், நமக்குத் தேவையாயிருக்கிற எல்லாவற்றிற்காகவும் தேவன் ஒரு வழியை உடையவராயிருக்கிறார். அல்லேலூயா! தேவன் இரக்கமுள்ளவராயிருக்கிறார். தேவனுடைய மகிமைக்காக இங்கேயுள்ள இந்தப் பட்டணத்திற்குத் தீர்வுகாண (crack) நிச்சயமாகவே அங்கே ஏதோவொரு வழி இருக்கத்தான் செய்கிறது. நம்மால் அதைக் கண்டுபிடிக்க மாத்திரம் முடியும். அது சரியே. நம்மால் என்ன செய்ய முடியும்? என்னால் என்ன செய்ய முடியும்? தேவன் அப்படியே அதை வெளிப்படுத்துகிறார், அது அதைச் செய்யும். 120. அங்கே ஒரு வழி இருந்தது; அங்கே அந்த மலையின் பக்கவாட்டில் ஒரு-ஒரு குத்துச்செடி (புதர்) நின்று கொண்டிருந்தது. மோசே அந்த புதர்செடியை (bush) வெட்டி வீழ்த்தி, அதை அங்கே உள்ளே போட்டு, "உங்களுக்கு விருப்பமான எல்லாவற்றையும் குடியுங்கள். அது நன்றாக உள்ளது" என்றான். 121. அவர்கள் வெளியே வனாந்தரத்தில் பாதையில் இருந்தார்கள், சற்று கழிந்து, அவர்களுக்கு மீண்டும் தண்ணீர் தேவைப்பட்ட போது, தேவன், "போய், அந்தக் கன்மலையை அடி" என்றார். கன்மலை! அநேகமாக, அவர்கள் ஒவ்வொரு, அவர்களால் கண்டுபிடிக்க முடிந்த ஒவ்வொரு சிறிய பழைய இடங்கள் வழியாகவும், ஒவ்வொரு பாலைவனச் சோலைகளின் வழியாகவும் வலைவீசித் தேடியிருந்தார்கள், ஒவ்வொரு இடத்தின் கீழாகவும் போனார்கள், அந்தப் பாறைகளை தூக்கியும் பார்த்தார்கள், வேறு எங்காவது ஒரு நீரூற்று இருக்கிறதா என்று வலைவீசி தேடியும், எந்தத் தண்ணீருமே இல்லாதிருந்தது. அப்போது, தேவன் முட்டாள்தனமான காரியத்தைச் செய்தார். அங்கே வனாந்தரத்திலேயே மிகவும் வறண்ட காரியம், அவர், "போய், அங்கே பேசு, அங்கேதான் தண்ணீர் இருக்கிறது" என்றார். 122. அது இன்று எப்படித் தோன்றுகிறது, நீங்கள் தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும், தேவனுடைய வல்லமையைக் குறித்தும், வத்திக்கான் பட்டணம் அல்லது ஏதோவொன்றை விட்டு வெளியே வர வேண்டியிருந்த பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்தும் நீங்கள் சிந்தித்துப் பார்க்கும் போது. தேவனுக்கு அந்த மூலையில் கொஞ்சம் ஒரு கூட்ட பரிசுத்த உருளையர்கள் அவசியமாயிருந்தது, ஒருக்கால் அவர்களுடைய ABC's - களை (மொழியின் முதலெழுத்துக்களை) அறியாதவர்களாக இருக்கலாம், அங்கேதான் தண்ணீர் இருக்கிறது. சரி. அவர் பகட்டாரவாரத்திலோ மற்றும் அதைப்போன்ற காரியங்களிலோ இடைபட மாட்டார். அவர் எழுத்தறிவற்ற (படிப்பில்லாதவர்கள்) மேல் இரக்கமுள்ளவராயிருக்கிறார். 123. பேதுருவும் யோவானும் பேதமையுள்ளவர்களாகவும் படிப்பறியாதவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் முற்றிலுமாக படிப்பில்லாதவர்கள் என்று வேதாகமம் கூறுகிறது. ஆனால் அவர்கள் இவர்கள் சொல்லுவதைக் (பேதுருவும் யோவானும் சொல்லுவதைக் கவனிக்க வேண்டியிருந்தது, அவர்கள் இயேசுவோடு கூட இருந்திருந்தார்கள். அதுதான் பிரதான காரியம் ஆகும். அது சரியே. அலங்கார வாசல் என்னப்பட்ட வாசலண்டையிலே ஒரு மனிதனைச் சுகப்படுத்த போதுமான விசுவாசம் அவர்களுக்கு இருந்தது. பேதுரு அனனியாவிடம், "நீ பொய் பேசுகிறாய்" என்று கூறும்படிக்கு அவன் தனக்குள்ளே போதுமான தேவனுடைய வல்லமையை உடையவனாயிருந்தான். அது சரியே. "நீ பணத்தை உன்னிடமே வஞ்சித்து வைத்துக்கொண்டாய்; சப்பீராளே, நீயும் அதே காரியத்தைச் செய்திருக்கிறாய்." உடனே அது அவர்களை மிக மோசமாக பயப்படுத்தினதினால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மரித்துப் போனார்கள். அவர்கள் இவர்களை பொதிந்து வெளியே எடுத்துக்கொண்டு போய், அடக்கம்பண்ணினார்கள். ஆமென். அதே தேவன் இன்றும் ஜீவிக்கிறார். அதே காரியத்திட்டம் தான் இன்றைக்கான தேவனுடைய திட்டமாகவும் இருக்கிறது. 124. அதோ அங்கே அந்த வனாந்தரத்தினூடாக தேவன் அசைவாடிக் கொண்டிருந்தார்.... சாப்பிட அவர்களுக்கு ஏதோவொன்று அவசியமாயிருந்த ஒரு நேரமும் வந்தது. அவர்கள் புசிக்க ஏதோவொன்று தேவைப்பட்ட போது, தேவன் மன்னாவை பரலோகத்திலிருந்து பொழியப் பண்ணினார். தேவனால் அருளப்பட்ட வழி. "நாம் எவ்வாறு சாப்பிடப் போகிறோம்? இங்கே வெளியே எந்த அப்பமும் இல்லாத இடத்தில் இருக்கிறோமே, அங்கே எந்த கோதுமையோ, எந்த சோளமோ இல்லையே. நாம் என்ன செய்யப் போகிறோம்" 125. அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காது, தேவன், "இங்கே வெளியே வா, நான் மீதியானதைப் பார்த்துக் கொள்கிறேன்" என்றார். அப்போது மன்னாவானது பரலோகத்தை விட்டு கீழே பொழிந்தது. அது மகிமையாக இல்லையா? அப்படியே மன்னாவைப் பொழியப் பண்ணினார், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாமே வெளியே சென்று, அதைப் பொறுக்குவது தான். ஆனால் ஒரே சமயத்தில் மிக அதிகம் பொறுக்கி விடாதீர்கள், ஏனென்றால் நாளை இரவுக்கும் போதுமானதாயிருக்கப் பண்ணும்படிக்கு இன்றிரவே போதுமானதை பெற்றுக்கொள்ள நீங்கள் முயற்சித்தால், அதிலே கொக்கிபுழுக்கள் (wiggletails) பிடித்துவிடும், அது கெட்டுவிடும். 126. இன்று சபையைக் குறித்த பாதி விஷயம் அதுதான்: அங்கே மேலே தெற்கில், ஓடிக்கொண்டிருக்காமல் தேங்கி நிற்கும் (தண்ணீ ரில்) இருக்கும், "கொக்கிபுழுக்கள் (wiggletails)" என்று நாம் அழைப்பது. இன்று நிறைய ஜனங்களின் அனுபவங்ளோடு அதுதான் காரியமாகும், அவர்கள், 'ஓ, அதோ அங்கே முற்காலத்தில், பத்து வருடங்களுக்கு முன்பு, நான் - நான் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தேன்" என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது அதைக் குறித்து என்ன? நீங்கள் இப்பொழுது எவ்வாறு ஜெபிக்கிறீர்கள் (prayed up)? 127. ஐயர்லாந்தைக் கடந்து வந்து கொண்டிருந்த ஒரு சிறு ஐரிஸ் தாயாரை அது எனக்கு நினைவுப்படுத்துகிறது. அவர்கள் தம்முடைய மகளைச் சந்திக்கும்படியாக, நியூயார்க் - கிற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். வழியில், அவர்கள் எங்கள் கப்பலைக் காப்பாற்றுங்கள் (SOS - Save Our Ship) என்ற ஒரு இக்கட்டு செய்தியை அனுப்பினார்கள், அந்தக் கப்பல் ஏறக்குறைய மூழ்கிக் கொண்டிருந்தது. அவர்களோ.... அதில், அடித்தளத்தில் ஏதோவொருவிதமான ஆரவார இசைக்கூத்து இசையை இசைத்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் எல்லாரும் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். கப்பல் கேப்டன், இன்னுஞ் சரியாகச் சொன்னால், கப்பல் தலைவன் கீழே இறங்கி வந்து, "எல்லாரும், ஒரு நிமிடம். உங்களுடைய இசையை மாற்றுங்கள். நம்மால் முப்பது நிமிடங்கள் தாக்குப்பிடிக்க முடியுமானால், நாம் அங்கு இருப்போம். நம்மால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்றால், நாம் கடலின் அடியில் (போகப் போகிறோம்" என்றான். 128. எல்லாருமே, அவர்கள் உம்மண்டை, என் தேவனே, என்பதை இசைக்கத் தொடங்கினார்கள், எல்லாருமே தரையில் விழுந்து, ஜெபிக்கத் தொடங்கினார்கள். சிறிய வயதான ஐரிஸ் தாயாரோ, இந்தவிதமாக சுற்றிலும் இணைக்கப்பட்டிருந்த ஒரு வஸ்திரத்தையும், அவர்களுடைய நீளமான சட்டை கைகளையும் உடையவர்களாக, அவர்கள், 'மகிமை! அல்லேலூயா! அல்லேலூயா!" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏன், அந்த கப்பற்தலைவனோ, "அம்மையீர், உங்களுக்கு என்னவாயிற்று?" என்று கேட்டான். "நான் சந்தோஷமாயிருக்கிறேன்" என்று கூறினார்கள். "நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள். இப்பொழுதிலிருந்து முப்பது நிமிடங்களில், நாம் ஒருவேளை கடலின் அடியில் இருக்கலாம் என்று நான் சொன்னது உங்களுக்குத் தெரியுமா?" என்றான். "நீங்கள் சொன்னது எனக்குப் புரிந்தது" என்றார்கள். "நீங்கள் ஏன் ஜெபிக்கக் கூடாது?" என்றான். "நான் ஜெபித்துவிட்டேன் (prayed up), நான் ஜெபிக்க வேண்டியதில்லை" என்று கூறினார்கள். சரி. "நான் ஜெபித்துவிட்டேன். ஓ, மகிமை! கர்த்தருக்குத் துதி உண்டாவதாக!" என்றார்கள். "சீமாட்டியே, உங்களால் அதை எப்படி செய்ய முடிகிறது, நீங்கள் ஜெபித்து விட்டீர்களானால், நீங்கள் எதைக் குறித்து சத்தமிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டான். "நல்லது, இப்பொழுதிலிருந்து முப்பது நிமிடங்களில், நாம் தாக்குப்பிடிப்போமானால், நாம் நியூயார்க்கில் இருப்போம் என்று நீர் கூறினீர்" என்றார்கள். "அது சரியே." 'நாம் தாக்குப்பிடிக்காவிட்டால், நாம் கடலின் அடியில் இருப்போம்." "அது சரியே." 129. அவர்கள், "மகிமை! எனக்கு நியூயார்க்கில் ஒரு மகள் இருக்கிறாள், நான் அவளைக் காணத்தான் போகிறேன். நான் நாம் தாக்குப்பிடிக்காமல் போனால், மகிமையில் எனக்கு ஒரு (மகள்) இருக்கிறாள், எனவே முப்பது நிமிடங்களில் (ஏதாவது) ஒரு மகளை நான் காணப் போகிறேன். அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!" என்றாள். 130. அந்தவிதமாகத்தான் நீங்கள் ஜீவிக்க விரும்புகிறீர்கள். அல்லேலூயா! சரி. ஜெபித்து விட்டு (Prayed up), போக ஆயத்தமாகுங்கள். ஆமென். தேவனால் அருளப்பட்ட பாதையில் நடந்து, எந்த நிமிடத்திற்கும் ஆயத்தமாக இருங்கள். ஆமென். நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் வரும்படிக்கு அவர் உங்களை எந்த நிமிடத்தில் அழைப்பார் என்று உங்களுக்குத் தெரியாது. 131. அங்கே இஸ்ரவேலர்கள் அதனூடாகப் போகையில், என்னால் அவர்களைக் காண முடிகிறது. முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, அங்கே வெளியே அவர்களுக்கு எந்த பரிகாரமும் இல்லாதிருந்தது. வைத்தியனாகிய மோசேயினால் (Dr. Moses) சரியான விதமாய் இருந்த ஒரு ஊனீரை பெற்றுக்கொள்ள முடியாதிருந்தது. இந்நிலையில் அவர்கள் சில பாம்பு கடிகளை உடையவர்களாயிருந்தார்கள், எனவே தேவன் ஒரு வழியை அருளினார். அது சரிதானா? அவன் ஒரு சர்ப்பத்தை உண்டாக்கினான், அவன் அதை வெண்கலத்தினால் உண்டு பண்ணி, அதை ஒரு கம்பத்தின் மேல் வைத்தான். ஜனங்கள் செய்ய வேண்டியிருந்த ஒரே காரியம் என்னவென்றால், சென்று, அந்தக் கம்பத்தை, அந்தக் கம்பத்தின் மேலிருந்த அந்த சர்ப்பத்தைப் பார்த்து, தேவன் தான் அதை அங்கே மேலே வைத்தார் என்று விசுவாசிப்பது தான், அப்பொழுது அவர்கள் சுகமடைந்தார்கள். அவர்களில் சிலர், "நல்லது, என்னால் சில பாம்புகடி விஷத்திற்கு மருந்தாக உள்ள சில பச்சிலைகள் (snakeroot) எனக்குக் கிடைக்கக் கூடுமா என்று நான் பார்க்கும்படி இங்கே போகிறேன், என்னால் அதை வைக்க முடியுமா என்று பார்க்கப் போகிறேன் என்று கூறினார்கள். மற்றவன், "நல்லது, ஜான், நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டான். "பாம்புக்கடி விஷமருந்து பச்சிலைகள் (snakeroot) கொஞ்சம் எடுத்து, இங்கே அதை வைத்து, அது சுகமடையுமா என்று பார்க்கப் போகிறேன் என்று கூறினான். (இவனோ), "நான் தேவனுடைய வழியை ஏற்றுக்கொண்டு, சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைக்கப் போகிறேன்" என்றான். இவன் பிழைத்துக்கொண்டான்; பாம்புக்கடி விஷமருந்து பச்சிலைகள் (snakeroot) தோல்வியடைந்து விட்டன. ஆமென். 132. தேவன் இன்றிரவும் ஒரு பரிகாரத்தை வைத்திருக்கிறார். அல்லேலூயா! அது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமாக, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாக இருக்கிறது. நான் பைத்தியக்காரன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஒருக்கால் நான் இருக்கலாம். நான் அவ்வாறு இருந்தால், நான் சந்தோஷமாக இருக்கிறேன். எனவே நான் வேறுவிதமாக இருந்ததைக் காட்டிலும், இந்த விதமாக இருப்பதிலேயே அதிக சந்தோஷமாயிருக்கிறேன், எனவே அப்படியே... நான் இவ்விதமாக இருப்பதையே அதிகம் விரும்புகிறேன். பாருங்கள்? எனவே நான் - நான் அப்படியே அற்புதமாக உணருகிறேன். சரி. ஆம், ஐயா. தேவன் ஒரு அருளப்பட்ட பாதையை உடையவராயிருந்தார். 133. ஒருசமயம் எலியா என்ற பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். கர்த்தர் அவனிடம், "நான் இந்த தேசத்தின்மேல் நியாயத்தீர்ப்பை அனுப்பப் போகும் அளவுக்கு, இந்த தேசம் மிகவும் பாவமுள்ளதாயிருக்கிறது. ஆனால் எலியாவே, நான் உனக்காக தப்பிக்கொள்ளும்படியான ஒரு வழியை ஏற்படுத்தப் போகிறேன்" என்றார். "கர்த்தாவே நீர் என்ன செய்யப் போகிறீர்?" "நீ அங்கே மேலே போய், அதோ அங்கே அந்த மலையின் உச்சியிலுள்ள, கேரீத் என்ற சிறு குளத்தண்டையில் இரு". எலியா வீதியினூடாக நடந்து சென்று, "நல்லது, இப்பொழுது, நான் மழைக்காக அழைப்பது வரையில், மழை பெய்யப் போவதில்லை. நான் அதோ அங்கே மேலே போய், அந்த மலையின் மேல் இருக்கப் போகிறேன்" என்றான். 134. மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டபோது, அந்த ஜனங்கள் வீட்டிற்கு வந்து, "அங்கே மேலே தண்ணீர் இல்லாதிருக்கும் போது, அங்கே மேலே அந்த மலையின் உச்சியிலிருக்கிற அந்தச் சிறு பழைய நீரூற்றண்டையில் உட்கார்ந்து கொண்டிருக்கிற அந்தப் பைத்தியக்கார பித்து கொள்ளி கிழவனைப் பாருங்கள்" என்று கூறிக்கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. ஆனால் தேவனோ அதைத் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்திக்கொண்டிருந்தார் (kept it running). அவர் அவ்வாறு செய்வதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஆமாம், அவன் மேலே மலையின் உச்சியில் இருந்தான். அந்தக் கிழவன் அங்கு மேலேயே காய்ந்து போய்விடுவான் என்று பந்தயம் கட்டுகிறேன்" என்றார்கள். 135. இல்லை, இல்லை, இல்லை, அவன் அப்படியே செய்து கொண்டிருந்தான். அவன் தேவனால் அருளப்பட்ட வழியை எடுத்துக்கொண்டான். தேவன், "நீ அங்கே மேலே போய், இரு, ஏனென்றால் உன்னைப் போஷிக்க நான் ஏற்கனவே காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்" என்றார். அவர்கள், அந்தப் பரிதாபமான கிழட்டு பித்து கொள்ளி அங்கே மேலே இருந்து பட்டினி கிடந்து செத்து விடுவான்" என்று கூறினார்கள். 136. நல்லது, அவனோ மிக நல்ல நிலையில் இருந்து கொண்டிருந்தான். இன்றிரவு இங்கேயிருக்கும் உங்களில் நிறைய பேர் - ஏராளமானோரைக் காட்டிலும் அவன் மிக நல்ல நிலையில் இருந்தான் என்று நான் பந்தயம் கட்டுகிறேன். அவனுக்கு சேவை செய்ய, அவனுக்குச் சில கறுப்பின வேலைக்காரர்கள் இருந்தார்கள். உங்களுக்கு அது இல்லை என்று நான் பந்தயம் கட்டுகிறேன். ஆம், ஐயா. காகங்கள் அவன் பக்கத்தில் வந்து, அவனுக்கு பரிமாறின. அது சரிதானா? அது சரியே. அவனுக்கு கறுப்பின சுமை தூக்குபவர்கள் இருந்தார்கள், உங்களில் பாதிபேருக்கு அது இல்லை. அவைகள், அந்தக் காகங்கள் அருகில் வந்து, அவனுக்குப் பணி புரிந்துவிட்டு, அவைகள் கடந்து சென்றன. சமீபத்தில் ஏதோவொரு பிரசங்கியார், "பில்லி, அந்தக் காகங்கள் அந்த மனிதனுக்கு ஆகாரத்தைக் கொண்டு வந்தது என்று நீர் நம்புவதாகவா என்னிடம் சொல்ல வருகிறீர்?" என்று கேட்டார். அதற்கு நான், அவ்வாறு தான் வேதாகமம் கூறுகிறது. நான் அதை விசுவாசிக்கிறேன்" என்றேன். ஆமாம். "நான் உம்மிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். இந்த உலகத்திலே அந்தக் காகங்களுக்கு எப்படி சான்ட்விச்சுகள் கிடைத்து, அதை எலியாவிடம் கொண்டு வந்தன?" என்று கேட்டார் 137. நான், "எனக்குத் தெரியாது. ஒரே காரியம் என்னவென்றால் காகங்களுக்கு அது கிடைத்து, அவை அதைக் கொண்டு வந்தன; எலியா அதைப் பெற்றுக்கொண்டான், அதோடு அது முடிவுபெறுகிறது. இப்பொழுது சரியாக இதைப்போன்று, எது என்னை இவ்விதம் நடந்து கொள்ளச் செய்கிறது என்று என்னால் உம்மிடம் கூற முடியாது, எனக்குத் தெரிந்த ஒரே காரியம் என்னவென்றால்: தேவன் அதைப் போதித்திருக்கிறார்; வேதாகமம் அவ்வாறு கூறுகிறது; பரிசுத்த ஆவியானவர் அதைக் கொண்டு வந்தார்; நான் அதைப் பெற்றுக்கொண்டேன், நான் அப்படியே ஒரு நல்ல நேரத்தை உடையவனாயிருக்கிறேன்" என்றேன். 138. அது எப்படி வருகிறது என்று எனக்குத் தெரியாது. நான் அப்படியே... அது அப்படியே இங்கேயிருக்கிறது. அல்லேலூயா! எனக்குத் தெரியாது. தேவன் அவ்வாறு கூறியுள்ளார். எனவே நான் அப்படியே - நான் அப்படியே அதைப் புசிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் அதைக் கொண்டு வருகிறார், நான், "ஆம், கர்த்தாவே" என்று கூறுகிறேன். "நல்லது, அவர்கள் உம்மை ஒரு பரிசுத்த உருளை என்று அழைக்கப் போகிறார்கள்." 139. "எனக்குக் கவலையில்லை, ஆண்டவரே. நான் அப்படியே அதை நேசிக்கிறேன். அது அப்படியே நன்றாக உள்ளது. நான் அப்படியே தொடர்ந்து புசித்துக்கொண்டே இருக்கிறேன். அதைக் கீழே அனுப்பும்." ஆமென். "அந்த இறைச்சி இடையீட்டு அப்பத்தில் (sandwich) ஒரு பெரிய கடியை எனக்குக் கொடும். அவ்வளவு தான். அவர்கள், "ஓ, என்னே, கண்டுபிடிக்க முயற்சிக்கும்படியாக, அங்கே சுற்றிலும் வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறோமே" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 140. அந்த வயதான பிரசங்கியோ அங்கே மேலே உட்கார்ந்து கொண்டிருந்தான், மத வெறியன் என்று கருதப்பட்ட அவன், ஒரு காரியத்தையும் குறித்து கவலைப்படாதவனாக உட்கார்ந்திருந்தான். பாருங்கள்? அவன் நாள் முழுவதும் அங்கே உட்கார்ந்திருந்து, "ஓ கர்த்தாவே, நான் உம்மை நேசிக்கிறேன். கர்த்தருக்கு துதி உண்டாவதாக. தேவனே, நான் உம்மைத் துதிக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டிருந்தான். காகமானது அருகில் வந்து, "எலியாவே, இங்கே இருக்கிறாயா" என்றது. 141. அவன் இந்த மகத்தான பெரிய இறைச்சி இடையீட்டு அப்பத்தை (சான்விச்) எடுத்துக்கொண்டு, ஓ, என்னே" என்றான். அங்கே கீழே அந்த பேர்வழிகளோ தங்கள் பேச்சினாலே கோபத்தால் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார்கள்.... இவனோ அப்படியே சிற்றாற்றில் இறங்கி, அவனுக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ அதைக் குடித்தான், இருப்பினும் அவன், "பைத்தியக்காரன் (crazy)" என்று அழைக்கப்பட்டான். 142. அது அந்தவிதமாகத்தான் இருக்கிறது, சகோதரனே. நாம் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றிருக்கிற காரணத்தினால், நாம் பைத்தியம் பிடித்தவர்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள். சகோதரனே, நாமோ தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக பீறிட்டுப் பாய்கிற, ஒருபோதும் தீர்ந்து போகாத நித்திய ஜீவத்தண்ணீர்களை உடைய ஒரு நீரூற்றிலிருந்து பருகிக் கொண்டிருக்கிறோம். நிச்சயமாக, அதுவே தேவனால் அருளப்பட்ட வழியாக இருக்கிறது. நிச்சயமாக, அவ்வாறுதான். 143. உங்கள் சபையில் சேர்ந்து, உங்கள் பிரசங்கியாரோடு கரங்களைக் குலுக்க முயற்சிக்க வேண்டாம். தேவனோடு சரிப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லேலூயா! அதைச் செய்ய வேண்டிய வழி அதுதான், அதைச் செய்வதற்கு உங்களுக்காக தேவனால் அருளப்பட்ட பாதை அதுதான். நீங்கள் வெறுமனே விசுவாசிப்பீர்களானால், தப்பிக்கொள்ளும்படியாக, ஒவ்வொரு முறையும், அவர் ஒரு வழியை உண்டாக்குவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆம், ஐயா. அவர் எலியாவுக்காக தப்பிக்கொள்ளும்படியான ஒரு வழியை உண்டுபண்ணினார். அதன்பிறகு கடைசியாக அங்கே எந்த மழையுமே இல்லாதிருந்த ஒரு நேரத்திற்கு அது வந்தபோது, தேவன் எலியாவிடம், அங்கே சென்று, காரியங்களுக்காக ஆயத்தப்படு" என்றார். 144. எலியா இஸ்ரவேலிலே அந்த எழுப்புதலுக்காக ஆயத்தமான போது, அப்போது அவன், "நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் போய் எனக்கு 12 கற்களை எடுத்து, அவைகளை இங்கே ஒன்றாக உருட்டிக்கொண்டு வாருங்கள்" என்றான். 145. இப்பொழுது, அது காரியங்களை ஒழுங்குக்குள் வைப்பதாக இருந்தது. அவன் தேவனுடைய அருளப்பட்ட வழியைச் செய்து கொண்டிருந்தான். அவன் போய், இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு கல்லாக எடுத்துக்கொண்டான். ஆனால் இன்று என்ன காரியம் என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் பெந்தெகோஸ்தே கல்லை உருட்டுக்கொண்டு வந்து (roll up), "இது தான் அது" என்று கூற முயற்சிக்கிறோம். மெதோடிஸ்டுகள் ஒரு கல்லை உருட்டி வந்து, இது தான் அது என்று கூறுகிறார்கள். ஆனால் நாம் அந்த ஒவ்வொருவரையும் ஒன்றாக உருட்டிக்கொண்டு வந்து, முழு சபையின் மேலும் எல்லாவிடங்களிலும் ஒரு பழைமை நாகரீகமான பரிசுத்த ஆவி ஊற்றப்படுவதையே தேவன் விரும்புகிறார். ஓ, சகோதரனே, அது வீட்டிற்குப் போனதா? நான் அதை உணர்ந்தேன். ஆம், ஐயா. 146. இன்று நமக்கு அதுதான் அவசியமாயிருக்கிறது, சகோதரனே. ஒவ்வொரு விசுவாசியையும் ஒன்றாகக் கொண்டு வந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுதல்; எதையும் தடுக்க வேண்டாம், ஆனால் முழு சபையின் (Church) மேலும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் ஊற்றப்படும் வரைக்கும், கிறிஸ்துவின் முழு சுவிசேஷத்தையும் பிரசங்கம் பண்ணுங்கள். ஒரு எழுப்புதலைக் கொண்டிருக்கும்படியான ஒரே வழி அதுதான். 147. எலியா, "இப்பொழுது, எல்லாவற்றையும் ஒன்று கூட்டுங்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும்படியாக இங்கே ஒரு கல்லை எனக்குத் தாருங்கள்" என்று கூறினான். பிறகு அதன் மேல் அவனுடைய பலியை வைத்து, அங்கே வெளியே நடந்து சென்று, "இப்பொழுதும், கர்த்தாவே, நீரே பரலோகத்தின் தேவன் என்றும் நான் உம்முடைய தீர்க்கதரிசி என்று அறியப்படட்டும்" என்றான். அப்போது அக்கினி விழத் தொடங்கினது. 148. சகோதரனே, மெதோடிஸ்டுகள், தாங்கள் மாத்திரமே பூமியின் மேலுள்ள ஜனங்கள் என்பதையும், பாப்டிஸ்டுகள், தாங்கள் மாத்திரமே என்றும்; பெந்தெகோஸ்தேயினர், தாங்கள் மாத்திரமே என்பதையும் அவர்களால் மறக்கக் கூடும் போது நாமெல்லாரும் நம்மை நாமே ஒன்றாகக்கூடி, "கர்த்தாவே, அக்கினியை அனுப்பும்" என்று கூற முடியும், அப்போது, நாம் எங்கோ போகப் போகிறோம். அது சரியே. 149. ஒருத்துவ பெந்தெகோஸ்தேயினரும், இருத்துவ பெந்தெகோஸ்தேயினரும், திரித்துவ பெந்தெகோஸ்தேயினரும், ஐந்துத்துவ பெற்தெகோஸ்தேயினரும், அவர்கள் எல்லாருமே தங்கள் தலைகளை ஒன்றாகக் கூட்டி, எல்லா மெதோடிஸ்டுகளும் தெளித்தலைக் குறித்து மறக்க முடிந்து, அல்லது உங்களுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட்டாலோ, அல்லது உங்களுக்கு ஊற்றப்பட்டாலோ, அல்லது நீங்கள் இதைச் செய்தாலும், எல்லாருமே ஒன்றாகக் கூடி, அந்தச் சிறு பழமையான காரியங்கள் எல்லாவற்றைக் குறித்தும் மறந்து, "தேவனே, வல்லமையை அனுப்பும்" என்று கூற முடியுமானால், எல்லாமே தானாகவே பார்த்துக்கொள்ளப்பட்டு விடும். பரிசுத்த ஆவியானவரோடு இருதயத்தைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள், அப்போது பரிசுத்த ஆவியானவரே மீதியானவற்றைப் பார்த்துக் கொள்வார். ஆம், ஐயா. ஆமென். அம்மாதிரியான எழுப்புதலை நான் விசுவாசிக்கிறேன். தேவனுடைய அருளப்பட்ட வழியைப் பெற்றுக்கொள்ளுங்கள். 150. இரட்சிப்பின் கல்லை உருட்டுங்கள்; நான் அதை விசுவாசிக்கிறேன். அந்நிய பாஷைகளில் பேசுவதாகிய கல்லமை உருட்டிக் கொண்டு வாருங்கள்; நான் அதை விசுவாசிக்கிறேன். வியாக்கியானம் பண்ணும் கல்லை உருட்டிக் கொண்டு வாருங்கள், நான் அதை விசுவாசிக்கிறேன். தெய்வீக சுகமளித்தலின் கல்லை உருட்டிக்கொண்டு வாருங்கள், நான் அதை விசுவாசிக்கிறேன்; சகோதரர்களே, இப்பொழுது அக்கினிக்காக ஆயத்தமாகுங்கள். அது நிச்சயம். "இப்பொழுது, நான் எங்களுடைய வேதசாஸ்திரத்தைக் குறித்த எல்லாவற்றையும் மறந்துவிடப் போகிறேன், கர்த்தாவே. நான் இந்த கற்களை உருட்டிக்கொண்டு வருகிறேன். நான் சரியாக என்னைத்தானே குறுக்கே கிடத்தி, 'ஓ கர்த்தாவே, என்னை முழுவதுமாக சுட்டெரித்துப் போடும்' என்று கூறுகிறேன்" என்று (கூறுங்கள்.) கவலைப்பட வேண்டாம், அவர் உங்களிடம் வருவார். 151. அந்தவிதமாகத்தான் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள், எல்லாவற்றையும் உங்கள் சிந்தையை விட்டு அகற்றிவிடுங்கள், தேவனுடைய வார்த்தையே அருளப்பட்ட பாதையாக இருக்கட்டும். மெதோடிஸ்டு மதச் சடங்கு அல்ல, இந்த மதச் சடங்கோ, அல்லது அந்த மதச் சடங்கோ, அல்லது இந்த வேதசாஸ்திரமோ, அல்லது அந்த வேதசாஸ்திரமோ அல்ல; வேதாகமம் சரியாக இருப்பதாக. தேவன், என்னுடைய வார்த்தை உண்மையாகவும், ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தையும் பொய்யாகவும் இருப்பதாக" என்று கூறியிருக்கிறார். 152. "கடைசி நாட்களில், நான் மாம்சமான யாவர் மேலும், மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், கத்தோலிக்கர்கள், லூத்தரன்கள், மற்ற எல்லார் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். என் ஜனங்களே, நீங்கள் அவர்கள் பாவங்களுக்கு உடன்படாமல், அவர்களை விட்டு வெளியே வாருங்கள். அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்." 153. இப்பொழுது, பாவம் என்பது வெறுமனே நல்நடத்தைக்குரிய பழக்க வழக்கங்கள் அல்ல என்று உங்களுக்குத் தெரியும். சில காரியங்கள், அவர்களில் நிறைய பேர், "நல்லது, இந்த மனிதன் புகைப்பிடிக்கிறான், அது ஒரு பாவம் ஆயிற்றே" என்று கூறலாம். இல்லை, அதுவல்ல. அது ஒரு புகை.... அல்ல. பொய் பேசுவதற்காக அவனுக்கு. அதுவல்ல - அவன் பொய் பேசுவது பாவமல்ல, திருடுவது அவனுக்கு பாவமல்ல. அது பாவமல்ல. அது பாவத்தின் தன்மைகளாகும். அது.... அவன் ஒரு பாவியாக இருக்கும் காரணத்தினால் தான் அதைச் செய்கிறான். அவன் ஒரு பாவியாக இல்லை என்றால், அதைச் செய்திருக்க மாட்டான். ஆனால் அவன் ஒரு பாவியாக இருக்கும் காரணத்தினால் தான், அவன் அதைச் செய்கிறான். 154. இப்பொழுது, நீங்கள், "நல்லது, தேவனுக்கு மகிமை, நான் புகைப்பிடிப்பதில்லை, நான் குடிப்பதில்லை என்று கூறலாம். அது உங்களை ஒரு பாவியாக ஆக்குவதில்லை. அது ஒரு கிறிஸ்தவனின் தன்மைகளாக இருக்கின்றன. நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்கும் காரணத்தினால் அதைச் செய்ய மாட்டீர்கள். அந்தவிதமாகத்தான் அது இருக்கிறது. மற்ற காரியங்களை நீங்கள் செய்தால், நீங்கள் ஒரு கிறிஸ்தவன் அல்ல. நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் ஒரு கிறி -- அல்ல, நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறீர்கள். எனவே அதுதான் வித்தியாசம். அது தேவனுடைய அருளப்பட்ட பாதையாக இருக்கிறது. 155. இயேசு, "என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, நான் கடைசி நாளில், அவனை எழுப்புவேன்" என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள், அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ, என்னவிதமான ஜீவன் உள்ளதோ, அவர்கள் (அதைத்தான்) ஜீவிக்கிறார்கள். அவர்கள் விசுவாசிப்பதாகக் கூறியும், அந்த ஜீவியத்தை அவர்கள் ஜீவிக்காவிட்டால், அவர்களுக்குள் எந்த வெளிச்சமும் இல்லை. உண்மையில்லாத ஏதோவொன்றை அவர்கள் வெறுமனே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நான் இங்கே வெளியே போக, நீங்கள், "பிரசங்கியாரே, இதோ ஒரு மகத்தான கோதுமை வயல் இருக்கிறது, இதைப் பாரும்" என்று கூறினால். 156. நான் அங்கே வெளியில் பார்த்து, முழு வயலும் களைகளால் (cockleburs) நிரம்பியிருப்பதை நான் கண்டால், "நான் உம்மை நம்ப மாட்டேன்" என்று கூறுவேன். அது சரியே. அது ஒரு கோதுமையாக இருக்குமானால்... ஒரு கோதுமையானது கோதுமையையே விளைவிக்கும். 157. ஒரு கிறிஸ்தவ சபையானது வேதாகம அத்தாட்சியையே பிறப்பிக்கும். ஆமென். "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்," என்று எஜமானாகிய வேர் சொல்லியிருக்கிறார், தாவீதின் வேரும், சந்ததியுமானவர். அது சரிதானா? "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். என் நாமத்தினாலே, அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்; புது பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான காரியங்களைக் குடிப்பார்கள், வியாதியஸ்தர்மேல் தங்கள் கரங்களை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தடைவார்கள். நான் வரும் போதுள்ள, உலகத்தில் முடிவு மட்டுமாக, இது செய்யப்படும்." 158. அவர் ஒருபோதும், "தசமபாகம் கொடுக்கிற ஜனங்களை நான் காண்பேனா?" என்று கூறவில்லை. அவர் ஒருபோதும் அதைக் கேட்கவில்லை. "நல்ல பக்தியுள்ள ஜனங்களை நான் காண்பேனா?" அவர் ஒருபோதும் அதைக் கேட்கவில்லை. அவர், "நான் திரும்பி வரும்போது, விசுவாசத்தைக் காண்பேனோ?" என்று தான் கூறினார். அதுதான் அது. விசுவாசம் தான் அந்தக் காரியமாகும்; அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜனங்கள் அதைக் கொண்டிருப்பதாக உரிமை கொண்டாடுகிறார்கள், ஆனால் அவர்கள் அதைப் பெற்றிருக்கவில்லை என்பதை அவர்களுடைய ஜீவியங்கள் நிரூபிக்கின்றன. அவர்களுடைய கனியினாலே நீங்கள் அவர்களை அறிகிறீர்கள். 159. இப்பொழுது, எலியா, அவன் மலையை விட்டு வருவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஒருநாள் இறங்கிவந்த வேறொரு மனிதனை எனக்குத் தெரியும், அவனுக்கு குஷ்டரோகம் பிடித்திருந்தது, அவனுடைய பெயர் தான் நாகமான். அவன் அங்கே இறங்கி வந்து, அவன் பெற்றிருந்தான்.... "ஓ, என்னே." அவன் கேள்விப்பட்டான்... விசுவாசம் கேள்வியினாலே வருகிறது, இல்லையா? தேவனுடைய வார்த்தையின் மூலமாக கேட்பதினால் வருகிறது. அங்கே சீரியாவில் இருந்த எல்லா மருத்துவர்களையும் அவன் முயற்சி செய்து பார்த்தும், அவர்களில் யாருமே அந்த குஷ்டரோகத்திலிருந்து அவனைக் குணப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் சிறைப்பிடித்து வந்திருந்த ஒரு சிறு பெண்பிள்ளை அங்கேயிருந்தாள் என்பதை அவன் கேள்விப்பட்டான். அவள் அநேகமாக ஒரு நல்ல கிறிஸ்தவ அனுபவத்தை உடையவளாயிருந்தாள், அல்லது நல்ல - ஒரு நல்ல இரட்சிப்பின் அனுபவத்தைக் கொண்டிருந்தாள். அவள், "உமக்குத் தெரியுமா, அங்கே எங்கள் தேசத்தில் எலிசா என்ற பெயருடைய ஒரு மனிதர் இருக்கிறார், அவர் தெய்வீக சுகமளித்தலை செய்கிறார். எனக்குத் தெரிந்த வரையில் (Far as), அவரிடம் யாருமே குஷ்டரோகத்திலிருந்து இதுவரை சுகமடைந்ததில்லை, அவர் உமக்காக ஜெபித்தால், நீர் சுகமடைவீர்" என்று கூறினாள். ஓ, என்னே, அப்படிப்பட்ட இன்னும் சில சிறு பெண்பிள்ளைகள் நமக்குத் தேவையாயிருக்கிறது. அது சரியே. 160. சரி. "நல்லது, நாம் சேணம்பூட்டுவோம் என்று நம்புகிறேன்" என்று கூறுகிறான். அந்த மனிதனைக் கவனியுங்கள்: அவன் அநேக மாற்று வஸ்திரங்களையும், அநேக பவுண்டுகள் எடையுள்ள வெள்ளியையும், அநேக பவுண்டுகள் எடையுள்ள தங்கத்தையும் அங்கே எடுத்துக்கொண்டு போனான். இப்பொழுது, அவன் - அவன் தன்னுடைய மனதில் கற்பனை செய்து வைத்திருந்த விதமான தெய்வீக சுகமளித்தலைத்தான் அவன் விரும்பினான், "நான் இந்தவிதமாகத்தான் அதைப் பெற்றுக்கொள்ளப் போகிறேன்." எனவே அவன் ஓட்டிச் சென்று, அங்கு போய், அங்கிருந்த எலிசாவுக்கு ... முன்பாக நின்றான். 161. எலிசா இங்கே பின்னால் ஒரு சிறிய பழைய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, அவன் தன்னுடைய சிறு மண் குடிசையில் இருந்து, வேதவாக்கியங்களில் சிலவற்றை வாசித்துக் கொண்டிருந்தான். அப்போது இதோ கேயாசி உள்ளே வந்து, அவன், "ஓ, எஐமானரே" என்றான். "உனக்கு என்ன வேண்டும்?" "நல்லது, அங்கே வெளியிலுள்ள சீரிய சேனைக்கு படைத்தலைவனாகிய மகத்தான நாகமான் அங்கேயிருக்கிறான்; அவனுக்கு குஷ்டரோகம் உள்ளது." "இந்த யோர்தானில் போய், எழுதரம் முழுகு' என்று அவனிடம் சொல்." "நல்லது, அவனைப் பார்க்கும்படிக்கு நீர் வெளியே போகவில்லையா?" "இல்லை, எனக்கு நேரமில்லை; நான் இப்பொழுது கர்த்தரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்." அதனால் அவன், "ஏன், அவர் வேதப்புத்தகம் வாசித்துக் கொண்டும், ஜெபத்திலும் இருக்கிறார், அவர் வெளியே வர மாட்டார். அவர், 'யோர்தானில் போய், ஏழுதரம் முழுகச் சொன்னார்" என்று கூறுகிறான். 162. ஓ, அவன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உரத்த சத்தமாக பழிதூற்றினானா? ஓ, என்னே. சற்று ஏறக்குறைய இப்பொழுது ஜனங்கள் செய்வதைப் போன்று. "ஓ, அந்தப் பழங்கால இடத்திற்கு நான் மறுபடியும் திரும்ப போகவே மாட்டேன். ம்ம். அந்தப் பரிசுத்த உருளையர்களோடு நான் ஒருக்காலும் எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ள மாட்டேன்." துப்பாக்கிக் குண்டை சாப்பிட்ட ஒரு தவளையைப் போன்று வீங்கி உப்பிப்போய், அதைப் போன்று சுற்றிலும் செல்லுதல். "ஓ, இனிமேலும் அதனோடு எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ளவே மாட்டேன், நான் அதை விசுவாசிக்க முடியாது, இல்லை, இல்லை, இல்லை, இல்லை." அந்தக் காரணத்தினால் தான், இப்பொழுது நீங்கள் இருக்கிற இந்த நிலையில் இருக்கிறீர்கள். அது சரியே தேவனுடைய வார்த்தையானது பாதையைப் போட்டிருக்கிறது (laid out). "அந்தப் பழைய சேறு நிறைந்த கலங்கிய தண்ணீ ரில் நான் முழுகுவதா? இல்லை, ஐயா! நல்லது, மேலே சீரியாவிலுள்ள தண்ணீர்கள் இவைகளைக் காட்டிலும் மிகச்சிறந்தது ஆயிற்றே.' 163. அன்றொரு நாள் ஒரு நபர் கூறினதைக் கேட்டேன், அவர் சொன்னார், ஓ, அது கொஞ்ச காலத்திற்கு முன்பு, அவர், "நான் அங்கே அந்தப் பீடத்திற்கு இறங்கிப் போய், மூக்கொழுக வேண்டும் என்றும்... அவ்வாறு நான் செய்யப் போகிறேன் என்றா என்னிடம் சொல்ல வருகிறீர்களா." என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், "நான் அங்கே இறங்கிச் சென்று, அழுது, அங்கே கீழேயிருக்கும் அந்த மற்ற ஜனங்களைப் போன்று நீண்ட நேரமாக கதறிக் கொண்டிருக்கவும், சத்தமாக பீறிட்டு அழுது கொண்டும், தேம்பிக் கொண்டிருக்க வேண்டும் என்றா என்னிடம் கூறக் கருதுகிறீர்கள் என்று கூறினார். அதற்கு நான், "உமக்கு இரட்சிக்கப்பட விருப்பம், நீர் அதை விரும்புகிறீர்" என்றேன். "ஓ" அவர், "நான் ஒருபோதும் அதைச் செய்ய மாட்டேன்" என்று கூறினார். நான், அப்படியானால் நீர் இருக்கிற விதமாகவே தொடர்ந்து செல்லும்" என்றேன். 164. நான் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தேன், அங்கே ஒரு பெண்மணி இருந்தாள், அவள் அழுதுகொண்டும், தன்னுடைய கரத்தை உயர்த்தி, சத்தமிடவும் தொடங்கினாள். அவன் சிறு வாலிபனாகவும், பாப்டிஸ்டு போதகனாகவும் இருந்தான், அவன் என்னிடம் மேலே வந்து, அவன், "பில்லி, நீர் எப்போது அந்தப் பரிசுத்த உருளையர்களை விட்டு வெளியே வரப் போகிறீர்?" என்று கேட்டார். நான், "அவர்களை விட்டு வெளியேவா?" என்றேன். 165. "அந்தப் பரிசுத்த உருளையர்களை விட்டுத் தான், நான் அன்றொரு இரவில், அந்தப் பெண்மணி எழுந்து, தன்னுடைய கரங்களை மேலே உயர்த்தி அழவும் கூச்சல் போடவும் தொடங்கும் வரையில், உம்முடைய செய்தியை கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தேன்" என்று கூறினார். நான் சொன்னேன்... "அது உமக்கு இடைஞ்சலாக இல்லையா?" என்று கேட்டார். நான் சொன்னேன், "இல்லை, அவள் செய்யவில்லை என்றால், அது நடக்கும்." நான் சொன்னேன், "அது... எனக்கு இடையூறு செய்யவில்லை." அவர், "என்னவென்று உமக்குத் தெரியுமா? அது ஒரு ஜன்னலில் தொங்கும் திரைச்சீலையைப் போன்று என்னுடைய முதுகில் குளிர் நடுக்கம் எழும்பும்படி ஆக்கி விட்டது" என்று கூறினார். 166. நான், "வாலிபனே, நீ எப்பொழுதாவது பரலோகத்துக்குப் போவாயானால், நீ குளிரால் உறைந்தே மரித்துவிடுவாய். அவர்கள் நிச்சயமாக பரலோகத்திலே சத்தமிட்டுக்கொண்டும், அவ்வாறு தொடர்ந்து செய்துகொண்டுமிருக்கிறார்கள். அது சரியே. அவர்கள் தேவனுடைய பலிபீடத்திற்கு முன்பாக, 'சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்' என்று பரலோகத்தினூடாக இரவும் பகலும் கூச்சல் போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்" என்று கூறினேன். ஆமென். ஆம், ஐயா. தேவனால் அருளப்பட்ட பாதை. நீங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, அந்தப் புது விதமான மார்க்கத்தைத்தானே நீர் போதித்துக் கொண்டிருக்கிறீர்" என்று கேட்கலாம். ஊ -உ, நான் பழங்கால வித மார்க்கத்தின் ஒரு முற்றிலும் புதிய வகையைத்தான் நான் பெற்றிருக்கிறேன். "கூச்சலிடுவதும், கத்துவதும் மற்றும் அவ்வாறு தொடர்ந்து செய்வதுமான அங்கேயுள்ள பழங்கால மார்க்கம்?" "ஆமாம், அது சரியே." 167. தேவன் யோபிடம் கூறினார், அவர், "உலகம் அஸ்திபாரம் போடப்பட்ட போது, அந்தப் பழங்கால மார்க்கம் முதலாவது இருந்த போது, நீ எங்கேயிருந்தாய்? ஏன்... அப்போது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய் பாடினார்களே, தேவபுத்திரர் கெம்பீரித்தார்களே?" என்று கூறினார். வியூ. ஓ, சகோதரனே. தேவனால் அருளப்பட்ட பாதை, அவ்வளவு தான். ஆமாம், அப்படியே செய்யும்படி தேவன் கூறியுள்ளதைச் செய்து கொண்டிருப்பது. சரி, முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, நாகமான், என்னால் அவனைக் காண முடிகிறது, அவன்: "நான் ஒருபோதும் அங்கே திரும்பிப் போகவே மாட்டேன்" என்றபடி, பொங்கி எழுந்தவாறு, அங்கிருந்து போய்விட்டான். 168. "இப்பொழுது, இதோ பாரும் தகப்பனே, ஏதோவொரு கடினமான காரியத்தைச் செய்யும்படி தீர்க்கதரிசி கட்டளையிட்டிருந்தால், நீர் இந்தப் பணம் எல்லாவற்றையும் கொடுத்திருப்பீரே (give you all this money), நீர் சுகத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கொடுத்திருப்பீரே, நல்லது, நீர் அதற்கு சம்மதித்திருப்பீரே. ஆனால் 'யோர்தானுக்குப் போய் முழுகும்படியாக' அவர் உம்மிடம் கூறினதின் நிமித்தமாக, நீர் ஏன் அதைச் செய்வதற்கு விருப்பமில்லாமல் இருக்கிறீர்" என்று கூறும்படியாக, தன்னைக் குறித்து போதுமான இரட்சிப்பை ஒரு மனிதன் உடையவனாயிருந்தான். 169. "நல்லது, ஒருக்கால் நான் முயற்சித்துப் பார்ப்பேன்" என்று அவன் கூறுவதை என்னால் காண முடிகிறது. இதோ அவன் இறங்கிப் போகிறான், உங்களுக்குத் தெரியும், அவன் அங்கே இறங்கிச் சென்று, கீழே அந்த சேறு நிறைந்த யோர்தானைப் பார்க்கிறான், உங்களுக்குத் தெரியும், "மம், அந்த ஒருகூட்ட பரிசுத்... நான் என்ன கூறக் கருதுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நான் அங்கே அந்த இடத்திற்கு இறங்கிப்போக வேண்டுமா?" சரி, அப்படியானால் உன்னுடைய குஷ்டரோகத்தை நீயே வைத்துக்கொள். 170. எனவே பிறகு, அவன் கீழே இறங்குகிறான், உங்களுக்குத் தெரியும். நிறைய ஜனங்கள் செய்வது போன்று, அவன் தன்னுடைய உயரமான குதிரையிலிருந்து இறங்குவதை என்னால் காண முடிகிறது, உங்களுக்குத் தெரியும். "நான் அதைப்போன்ற அந்தக் கூட்ட ஜனங்களிடம் இறங்கி வரும்படி என்னை நானே தாழ்த்த வேண்டுமா." எனவே, அங்கே தண்ணீருக்குள் போவதை என்னால் காண முடிகிறது, "மம்," உங்களுக்குத் தெரியும், இந்த விதமாக தன்னுடைய மூக்கைப் பிடித்தபடி, கீழே முங்கி, திரும்ப எழும்பி, "ஓ, அங்கே அதில் எதுவும் கிடையாது என்று நான் உங்களிடம் சொன்னேனே. எனக்கு இன்னும் குஷ்டரோகம் இருக்கிறதே என்று கூறுகிறான். "உ-ஊ, தீர்க்கதரிசி, 'ஏழுமுறை' என்று கூறியுள்ளார், ஏழு முறை ஆவது மட்டுமாக, அப்படியே தொடர்ந்து முங்கி எழுந்து கொண்டிரும். "ஆனால் சகோதரன் பிரன்ஹாமே, நான் எவ்வளவு நேரம் முங்க வேண்டும்?" "அது வரைக்கும்." "எது வரைக்கும்?" "நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வது வரையில், இதைத்தான் இயேசு கூறியுள்ளார்: 'நீங்கள் வல்லமையால் தரிப்பிக்கப்படும் வரைக்கும், எருசலேம் பட்டணத்திலேயே காத்திருங்கள்' என்று அவர் கூறியிருக்கிறார்." "இரண்டு நாட்களா?" அது வரைக்கும்." "எவ்வ ளவு காலம்?" "அது வரைக்கும், நீங்கள் தரிப்பிக்கப்படும் வரையில்." அது சரியே. அது வரையில், அப்படியே அங்கேயே தரித்திருங்கள், அதுதான் கர்த்தருடைய வார்த்தையாக இருக்கிறது. 171. சரி. ஒருசமயம் யோசபாத் என்ற பெயருடைய ஒரு மனிதன் அங்கேயிருந்தான், அவர்களில் ஒருகூட்டம் பேர் வெளியே வனாந்திரத்திற்குப் போனார்கள். அவர்கள் வெளியே போகையில், தங்களோடு ஒரு திசைகாட்டியை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள்; வேறொரு காரியம் என்னவென்றால், அவர்கள் கர்த்தருடைய ஆலோசனையைப் பெறாமலே வெளியே போய்விட்டார்கள், அப்போது அவர்கள் தொல்லையில் அகப்பட்டார்கள். நீங்கள் ஏதோவொன்றைக் குறித்து கர்த்தரிடம் ஆலோசனை பெறாமல் போகத் தொடங்கினால், நீங்களும் கூட தொல்லையில் அகப்படுவீர்கள். எனவே அவர்கள் தொல்லையில் அகப்பட்டிருந்தார்கள். 172. அவர்கள் அதைக் கண்டுபிடித்தார்கள், அவர்கள் ஏழு நாட்களாக அங்கே வெளியில் இருந்தார்கள்; சாப்பிட அவர்களுக்கு எதுவுமேயில்லாதிருந்தது; குடிப்பதற்கான எல்லாமே காலியாகி விட்டது. நிச்சயமாக, அவர்களுக்குப் புசிக்கவோ அல்லது குடிக்கவோ அங்கே எதுவுமில்லை. எனவே, அவர்களில் ஒருவன், "நாம் என்ன செய்யப் போகிறோம்? நாம் இங்கே மாண்டு போகும்படிக்கே வெளியிலிருக்கிறோம்" என்றான். 173. அங்கே அவர்களில் ஒருவன், "நல்லது, தேவனிடம் இதற்காக ஒரு அருளப்பட்ட வழி உண்டு" என்று சிந்திக்க நேரிட்டது. எனவே அவன், 'நாம் கர்த்தரிடத்தில் ஆலோசனை பெறும்படிக்கு எங்காவது ஒரு தீர்க்கதரிசி இருக்கிறாரா?" என்று கேட்டான். அவர்கள், "ஆமாம், அவன் கைகளுக்கு வார்த்த, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த எலிசா அங்கேயிருக்கிறான்" என்றார்கள். "ஓ, அவருக்கும் எலியாவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்திருக்குமானால், அவன்... எலியா ஒரு உண்மையான தீர்க்கதரிசி. எனவே நாம் இறங்கிச் சென்று, அவனைப் பார்ப்போம்." 174. எனவே இதோ அவர்கள் அந்தத் தீர்க்கதரிசியைக் காண வருகிறார்கள். இந்த விக்கிரக ஆராதனைக்காரனின் மகன் வந்து கொண்டிருப்பதை அவன் கண்டபோது, ஆகையால் அவன் ஒருவிதத்தில் படீரென வெடித்துவிட்டான், அவன் அவர்களிடம், "நீ ஏன் உன்னுடைய தாயின் தேவனிடத்தில் போகவில்லை? நீ ஏன் உன்னுடைய சொந்த சபைக்குத் திரும்பிப் போகக் கூடாது? என்னிடம் எதற்காக வருகிறீர்கள்?" என்று கூறினான். ஓ, அவன் உண்மையிலேயே அதைக் குறித்து வெளிப்படையாக இருந்தான், உங்களுக்குத் தெரியும், அவன் ஒருவிதத்தில் அவர்களை மிகவும் நிலைகுலைய வைத்தான். 'நீ ஏன் உன்னுடைய தாயின் தேவனிடத்தில் திரும்பிப் போகக் கூடாது? நீ ஏன் உன்னுடைய தாயின் சபைக்குத் திரும்பிப் போக கூடாது? அங்கிருந்து தானே நீ துவங்கினாய். நீ ஏன் என்னிடம் வந்தாய்?" என்றான். அவன், "இல்லை, இல்லை" என்றான். அதைப்போன்ற ஏதோவொன்று. 175. மேலும் அவன், "நான் யோசபாத் இங்கிருப்பதற்கு மதிப்பு கொடுத்திராவிட்டால், உன்னை நோக்கிப் பார்த்திருக்கவும் கூட மாட்டேன்" என்றான். இப்பொழுது, அவன் முழுவதும் கோபமாக இருந்து, "எனக்காக கொஞ்சம் இசையை இசையுங்கள்" என்றான். 176. எனவே அவர்கள் இசையை, தம்புருவை (tambourine) மீட்டினார்கள். இப்பொழுது, கவனியுங்கள். நீங்கள் தீர்க்கதரிசியாக இல்லை என்றால், அந்த கருவிகளில் ஒன்றாக இருக்க முடியும், உங்களுக்குத் தெரியும், ஆவியை கீழே தீர்க்கதரிசியிடம் கொண்டுவர அந்த இசை இசைக்கப்பட்டது. நான் சொல்ல வருவது உங்களுக்குத் தெரியும். எனவே அவர்கள் தம்புருவையும், மற்றவைகளையும் இசைத்து, பேரிகைகளை (drums) அடித்து, இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டும், அவர்கள் எல்லாருமே அடிக்கவும் இசைக்கவும் தொடங்கினார்கள், அவர்கள் ஒருக்கால் ஒரு மகத்தான பெரிய பழைய பாடலை கொண்டிருந்திருப்பார்கள், அது இப்படியாக வாசிக்கப்பட்டிருக்கும் ஓ, ஆகாயத்தில் ஒரு சந்திப்பு இருக்கப்போகிறது, இனிய, இனிய, அந்த நேரத்தில், தேவனுடைய சொந்த குமாரனே அங்கு முக்கியமான வராயிருப்பார், அந்த ஆகாய சந்திப்பில். அப்போது தீர்க்கதரிசி ஆவிக்குள்ளாகத் தொடங்கினான். முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, அவன் ஆவிக்குள்ளான போது, காரியங்கள் நடக்கத் தொடங்கின. 177. அதுதான் காரியம், நம்மால் இங்கே எந்தவிடத்திற்கும் போக முடியவில்லை, நாம் அதற்கான ஆவியைப் பெறவில்லை. அதுதான் அதைச் செய்கிறது. அது சரியே. சகோதரன் பாஸ்வர்த் அவர்களே. அதைக் குறித்து என்ன? சரி. நாம் அதற்கான ஆவிக்குள்ளாக வேண்டும். 178. அவர்கள் தங்கள் கரங்களைத் தட்டத் தொடங்கினார்கள், ஒருக்கால் அவர்கள் ஒரு நல்ல நேரத்தை கொண்டிருந்திருப்பார்கள், அப்போது தேவனுடைய ஆவி தீர்க்கதரிசியின் மேல் விழத் தொடங்கினது. ஆவியானவர் தீர்க்கதரிசியின் மேல் வந்தார்; அப்போது அவன் காரியங்களைக் காணத் தொடங்கினான். நீங்கள் ஆவிக்குள்ளாகும் போதுதான் காரியங்களைக் காணப்போவதாக இருப்பீர்கள். 179. எனவே அவன் ஆவிக்குள்ளாகத் தொடங்கி, "இப்பொழுது என்ன சம்பவிக்கப் போகிறது என்பதைக் காணும்படியாக, நான் தேவனால் அருளப்பட்ட வழியில் வந்து கொண்டிருக்கிறேன். அதோ அங்கே வெளியில் சென்று, கொஞ்சம் பள்ளங்களை தோண்டுங்கள், ஏனென்றால் அங்கே கொஞ்சம் தண்ணீர் இருக்கப் போகிறது" என்றான். அவர்கள் மண்வெட்டிகளை எடுத்துக்கொண்டு, தோண்ட ஆரம்பிப்பதை என்னால் காண முடிகிறது. ஒரு ஆள் சொல்வான், (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தைத் தட்டுகிறார்) "ஓ, என். நான் இங்கே ஏதோ அடித்தேன். "அது என்ன?" 180. "அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன." சரி, நீங்கள் அவ்வளவு ஆழமாக இருந்தால், நீங்கள் பெறப் போகும் நீர் அவ்வளவுதான். விஷயத்தை வெளியே எடுத்து, தோண்டிக்கொண்டே இருங்கள், அவ்வளவுதான். 181. அவர்களில் ஒருவர், "சரி, நான்...திருமதி. ஜோன்ஸ் என்னைப் பார்த்து சிரித்தார், தெய்வீக சுகமளித்தல் என்று எதுவும் இல்லை என்று கூறினார். பழைய தகர டப்பாவை உதைத்து தோண்டிக்கொண்டே இருங்கள். எவ்வளவு பெரிய பள்ளம் தோண்டுகிறீர்களோ, அவ்வளவு தண்ணீர் கிடைக்கும். 182. "ஏன், எனக்கு எந்தக் காரணமும் தெரியவில்லை. நான் குணமடைவதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை; நான் இதைப் பார்க்கவில்லை." நீங்கள் இன்னும் உங்கள் பள்ளத்தை தோண்டவில்லை. அதுதான் விஷயம். இன்றிரவு என்ன விஷயம், உங்கள் பள்ளங்களை நீங்கள் தோண்டவில்லை. சகோதரனே, மண்வெட்டிகளை எடுத்து, ஒரு பள்ளம் தோண்டுவோம். 183. சரி, நீங்கள், "நீங்கள் எந்த அடையாளத்தையும் பார்க்கப் போவதில்லை. எந்த மழையும் வராது. இது, அது அல்லது வேறு எதுவும் இருக்கப் போவதில்லை. "ஆனால் நீங்கள் தண்ணீரைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள். அல்லேலூயா! 184. நான் இன்றிரவு என்ன நினைக்கிறேன் என்றால், பட்டணத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரையில், வீசியடித்துச் செல்லும், ஒரு நல்ல பழைமை நாகரீகமான, பரிசுத்த ஆவியின் எழுப்புதல் தான் வெஸ்ட் பாம் பீச் (பட்டணத்திற்கு) அவசியமாயிருக்கிறது. தங்கள் இருதயத்தில் பாதி பின்வாங்கிப் போய், இங்கே சுற்றிலுமுள்ள இந்த ஒரு கூட்டம் பிரசங்கிமார்கள், அவர்கள் பீடத்தண்டையில் முழங்கால்படியிட்டு, தேவனோடு சரிப்படுத்திக் கொள்ளும் போது, நீங்கள் பழைமை நாகரீகமான ஒரு எழுப்புதலைக் கொண்டிருப்பீர்கள். அது இலவசமானது. அது சரியே. 185. சகோதரனே, இன்றிரவு இந்த தேசத்திற்கு அதுதான் அவசியமாயிருக்கிறது, இன்று இந்த நாட்டிற்கு அதுதான் தேவையாயுள்ளது, ஜனங்களுடைய இருதயத்தை விட்டு பொறாமையும் திருட்டும் (petty larceny) வெளியே வருவது தான். ஆமென். சரி. தேவனிடம் திரும்பி வாருங்கள். சகோதரனே, அது மோசமாகவும், ஏற்றுக்கொள்ள கடினமாகவும் இருக்கிறது என்று எனக்குத் தெரியும், அது வீட்டில் ஆழமாகப் போகிறது என்று நான் அறிவேன். 186. நான் ஒரு சிறு பையனாக இருந்த போது, நாங்கள் மிகவும் ஏழையாக ஜீவனம் பண்ணினோம். நாங்கள்... எங்களுடைய சோளரொட்டியை (corn pone) செய்வதற்கான கொழுப்பைப் பெற்றுக்கொள்ளும்படி, அம்மா இறைச்சி தோல்களை ஒரு தட்டுப்போன்ற கொதிகலனில் வைத்து தீயில் வாட்ட வேண்டியிருந்தது; நாங்கள் சோளரொட்டியும், வெல்லப்பாகும், அதைப் போன்ற மற்றவைகளையும் சாப்பிட்டே ஜீவனம் பண்ண வேண்டியிருந்தது. எங்களிடம் பன்றிக்கொழுப்பு இல்லாதிருந்தது, எனவே அவர்கள் பழைய இறைச்சி தோல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. 187. ஒவ்வொரு சனிக்கிழமை இரவும், நாங்கள்.... என்று எனக்குத் தெரியும். அவர்களிடம் ஒரு பெரிய பழைய தேநீர் கெண்டியும் (teakettle), ஒரு பெரிய பழைய தேவதாரு மர தொட்டியும் இருந்தது, அவர்கள் திரும்புவார்கள்...அந்த டீகெட்டிலில் வெந்நீரை ஊற்றுவோம், நாங்கள் அனைவரும் குளிப்போம். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் அது ஒரு குளியல், பின்னர் ஒரு பெரிய அளவு ஆமணக்கு எண்ணெய் எடுத்து. நான் - அதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அது போன்ற உணவுகளை நீங்கள் சாப்பிட்ட பிறகு... நான் அதை எடுத்துக்கொள்வேன். அம்மா வரும்போது, நான் - நான் என் மூக்கைப் பிடித்துக் கொள்வேன், "அம்மா, அம்மா, தயவு செய்து வேண்டாம், ஐயோ," நான், "நான்... அந்த விஷயம் என்னை மிகவும் மோசமாக்குகிறது" என்றேன். அவள் சொன்னாள், "அது உன்னை நோய்வாய்ப்படுத்தவில்லை என்றால், அது உனக்கு எந்த நன்மையும் செய்யாது." 188. இன்றிரவே நான் சொல்கிறேன், அது உங்களை நல்லவராகவும், நோயுற்றவராகவும் ஆக்கவில்லை என்றால், அது உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது, ஒருவேளை அது உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூண்டிவிடலாம், உங்கள் செரிமானக் முறைமைகள் செயல்படும், அதனால் நீங்கள் முழு நற்செய்தியை எடுத்துக் கொள்ளலாம். அல்லேலூயா! ஆமென். ஆம், ஐயா, இது தேவனால் அருளப்பட்ட பாதை. அது சரி, அது உங்களை சரி செய்யும், நாளை உங்களை நன்றாக உணர வைக்கும். அவளை அப்படியே கீழே விழுங்கி, "ஆம், அது சரி என்று நினைக்கிறேன்; நான் செல்கிறேன், இந்த மனிதருடன் கைகுலுக்கி, பிறகு அவருடன் ஒப்பனை செய்யுங்கள். ஆம், ஐயா, நான் கூட்டத்தில் ஒத்துழைக்கப் போகிறேன். தேவனின் மகிமை முன்னேறுவதைக் காண என்னால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறேன். அப்போது நீங்கள் எங்காவது செல்லப் போகிறீர்கள். வியூ, சகோதரனே, அது ஏதோவொன்றாக இருக்கிறது. சரி, ஆனால் அது தேவனால் அருளப்பட்ட பாதையாக இருக்கிறது. அது சரியே 189. சரி, அப்போது என்னால் காண முடிகிறது, அவர்களுக்குத் தண்ணீர் கிடைத்தது, அவர்களுடைய பள்ளங்கள் தண்ணீரால் நிரப்பப்பட்டிருந்தது, முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, அவர்களுக்கு வேண்டிய எல்லா தண்ணீரையும் குடித்தது மாத்திரமல்ல, அவர்கள் சென்று, பெருங்கல்லை எடுத்து, அங்கே அவர்களுக்கு இருந்த, அந்தப் பழைய, குளிர்ந்துபோன, சம்பிரதாய கிணறுகள் எல்லாவற்றையும் அடைத்துப் போட்டார்கள். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் இந்தக் கட்டிடம் நிரம்பும் அளவுக்கு, நீங்கள் இன்றிரவு மிகவும் ஆழமாகத் தோண்டுவீர்களானால், ஜனங்கள் சுகமடைந்து, ஆவியால் நிறைந்து, வெளியே தெருக்களில் சத்தமிட்டுக் கொண்டும், தேவனைத் துதித்துக்கொண்டும், நாளைக்கு இந்த மதுபான கடைகளுக்கு நடந்து சென்று, தேவனுடைய மகிமைக்காக சாட்சி கூறிக்கொண்டும், மற்றும் எல்லாவற்றையும் செய்து கொண்டும் இருப்பார்கள், அப்போது நாம் சாட்சிகளின் இந்தக் கற்களில் சிலவற்றைக் கொண்டு (அது சரியே) இந்தப் பழைய, குளிர்ந்து போன, சடங்காசார கிணறுகளை அடைத்துப் போடுவோம். ஆமென். அது சரியே. நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். தேவன் ஒரு அருளப்பட்ட வழியை உடையவராயிருக்கிறார். 190. ஒருசமயம் அங்கே ஒரு ஸ்திரீ இருந்தாள்; அவளுக்கு உதிரப்போக்கு இருந்தது, அது வேதாகமத்தில் உள்ளது. ஓ, என்னே, அது மிகவும் மோசமாக இருந்தது. மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாதிருந்தது. இந்நிலையில், வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்திக் கொண்டிருந்த ஒரு மனிதரைக் குறித்து அவள் கேள்விப்பட்டாள். எனவே முதலாவது காரியம் என்னவென்று தெரியும், ஒரு இரவில் .... அவர் அதை அறிந்திருந்தார். அவர் ஒரு பெரிய புயலில் கடலைக் கடந்து இரவு முழுவதும் தண்டுவலித்துக் கொண்டிருந்தார்(கள்). அடுத்த நாள் காலையில், அந்தச் சிறிய படகானது அங்கேயிருந்த அந்த அலரி போன்ற ஒரு வகைச் செடிகளுக்குள் தள்ளிக்கொண்டு வரப்பட்டது. அவள் - அவள் அங்கே மேலே அந்த மலையில் இருந்தவாறு, அதை நோக்கிப் பார்த்தாள். ஏதோவொன்று அவளுடைய இருதயத்தில், "தேவன் எனக்காக ஒரு அருளப்பட்ட வழியை உடையவராயிருக்கிறார். என்னால் மாத்திரம் அந்த மனிதருடைய வஸ்திரத்தைத் தொட முடியுமானால், நான் சுகமடையப் போகிறேன்" என்று கூறினது. 191. எனவே அவள் கீழே இறங்கிப் போகிறாள். எல்லா காலங்களிலும் இருந்தது போலவே, தேவனால் அருளப்பட்ட பாதையை நீங்கள் பின்பற்ற முயற்சிக்கும் போது, நீங்கள் எல்லாவிடங்களிலும் குழப்பங்கள் (conflict - சச்சரவுகள், சண்டைகள், முரண்பாடுகள், ஒன்றுடனொன்று ஒவ்வாதிருத்தல், பிணக்குகள், மனப்போராட்டங்கள், போர்கள், தகராறுகள், மாறுபாடுகள், வித்தியாசங்கள், குழப்படிகள் - தமிழாக்கியோன்) (வருவதைக் கண்டுகொள்வீர்கள். அவள் அந்த மேய்ப்பருக்கு எதிர்படுவதை என்னால் காண முடிகிறது; அவன், "இப்பொழுது, நீ எங்கே போக நினைக்கிறாய்?" என்று கேட்கிறான். "நான் அவருடைய வஸ்திரத்தைத் தொட விரும்புகிறேன்.' "முட்டாள்தனம்." அவளோ சரியாக அவன் பக்கமாக முண்டியடித்துக் கொண்டு போனாள். 192. அடுத்த காரியம் என்னவென்றால், அவள் அதோ மேலே வருகிறாள், அவள் ப்ரிகாம் யங்-உடனும், அவனுடைய ஒருகூட்ட மனைவிமார்கள் எல்லாரோடும் வருகிறாள். அவள் அடுத்த மனிதனிடம் வருகிறாள்: "ஏன், அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன." 193. அவள் சரியாக கீழே நகர்ந்து வந்து, அவர்களுடைய கால்களுக்கு இடையே நகர்ந்து, சரியாக தொடர்ந்து அவ்விதம் வந்து கொண்டிருக்கிறாள். அவள் அதைக் குறித்து எந்தக் கவனமும் செலுத்தவில்லை, அவளுக்கு ஒரு மாற்று வழி இருந்தது; என்ன செய்ய வேண்டுமென்று தேவன் அவளுடைய இருதயத்தில் கூறியிருந்தாரோ அதைச் செய்வதுதான் அதுவாக இருந்தது. ஆமென். இன்றிரவும் அதுதான் நமக்கு அவசியமாயிருக்கிறது, தேவனால் அருளப்பட்ட வழியைப் பின்பற்றுதல். அவள் சரியாக அதனூடாக நகர்ந்து சென்று, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். ஏராளமான ஜனங்கள் அவளை நெருக்கிக்கொண்டும் (hugging), மற்றும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்க, ஓ, போதகரே, நீர். என்று கூறப்பட்டது. அவர், "என்னைத் தொட்டது யார்? என்னைத் தொட்டது யார்?" என்று கேட்டார். அவர் இப்பொழுது செய்வது போல, அதேவிதமாக, அந்தத் தரிசனம் எங்கேயிருந்தது என்று காணும்படிக்கு அவர் சுற்றும் முற்றும் பார்த்து, "உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது; சமாதானத்தோடே போ" என்றார். ஆமென். 194. அது என்னவாக இருந்தது, அவர்களில் நிறைய பேர் இதையும், அதையும் மற்றதையும் கூறிக் கொண்டிருந்தார்கள். பேதுரு சொன்னான் - அவன் சொன்னான், அவர், "என்னைத் தொட்டது யார்?" என்று கேட்டதற்கு அவன், "நல்லது, போதகரே, முழு திரள் கூட்டமும் உம்மைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்களே" என்று கூறினான். அதற்கு அவர் சொன்னார் - "ஆனால் யாரோ ஒருவர் என்னைத் தொட்டபோது, நான் அறிந்து கொண்டேன்" என்றார். 195. இன்றிரவு நாம் கொண்டிருக்க விரும்புகிற தொடுதல், அந்தவிதமான தொடுதல் தான். இன்றிரவு உங்கள் ஒவ்வொருவருக்குமான தேவனால் அருளப்பட்ட வழி அதுதான். தேவனுடைய தொடுதல், அதுதான் அவருடைய அருளப்பட்ட வழியாக இருக்கிறது. நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொள்ளுங்கள். அவரிடம் ஒரு அருளப்பட்ட வழி இருக்கிறது. ஆண்டவரே, நான் அதை விசுவாசிக்கிறேன்" என்று கூறுங்கள். 196. இப்பொழுது அந்தக் குழந்தையோடு வெளியே போய்க் கொண்டிருக்கும் அந்த சீமாட்டியைப் போன்று. அந்தக் குழந்தை.... என்று அவள் விசுவாசிக்கிறாள். அவள் போய்க் கொண்டும், வெளியே நடந்து கொண்டும் இருக்கிறாள். சீமாட்டியே, அந்தக் குழந்தையை வைத்திருக்கிற நீ, இந்தவிதமாகத் திரும்பிப் பார். நீ அந்தக் குழந்தைக்காக உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? அந்த வியாதி அந்தக் குழந்தையை விட்டு போய்விடும் என்று விசுவாசிக்கிறாயா? அந்த நீரிழிவு நோய் அதை விட்டுப் போய்விட்டது என்று விசுவாசிக்கிறாயா? அது போய்விட்டது, எனவே அப்படியே கட்டிடத்தை விட்டு வெளியே போ. அந்தவிதமாகத்தான் நீங்கள் அதைச் செய்ய வேண்டும். அவருடைய அருளப்பட்ட வழியை தொடுங்கள். ஆமென். அல்லேலூயா! தேவனால் அருளப்பட்ட வழி. 197. ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து தான் ஒவ்வொரு பாவிக்கும் தேவனால் அருளப்பட்ட வழியாக இருக்கிறார். விசுவாசிக்கிற ஒவ்வொரு மனிதனும் சரியாக இப்பொழுதே அதைக் கொண்டிருக்க முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? தேவனால் அருளப்பட்ட பாதை. 198. அங்கே ஒரு ஸ்திரீ இருந்தாள்.... ஒருநாள், தன்னுடைய சிறு குமாரத்தியை இழந்த ஒரு-ஒரு மனிதன் இருந்தான். அந்த அருளப்பட்ட வழியாகிய இயேசுவானவர், வந்து தம்முடைய கரங்களை அந்தச் சிறுமியின் மேல் வைத்தார். அவள் சுகம் பெற்றாள். 199. ஒருநாள் பர்த்திமேயு என்னப்பட்ட ஒரு வயதான குருடன் இருந்தான், அது இருந்தபடியே (அவன்) அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டான். எனவே, அவரைக் கூப்பிட்டான். அவன் தேவனால் அருளப்பட்ட வழியை ஏற்றுக்கொண்டு சுகம் பெற்றான். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 200. கவனியுங்கள். அல்லேலூயா! சகோதரனே, நான் நலமாக உணருகிறேன். இப்பொழுது நீங்கள் அந்த சூழ்நிலைக்குள் வந்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் காரியங்களைச் சரிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் மாத்திரம் உங்கள் சிந்தையை அமைதிப்படுத்த முடிந்து, உங்கள் இருதயத்தை சாந்தப்படுத்தி, "தேவனே, நான் அதை ஏற்றுக்கொள்ளுகிறேன். நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன் என்று கூறுங்கள். 201. ஒவ்வொரு நபரையும் சுகமாக்கும்படியாக தேவன் இப்பொழுதே இங்கிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அது தேவனுடைய அருளப்பட்ட பாதையாக இருக்கிறது. அங்கே அந்தச் சிறு குழந்தையை வைத்திருந்த அந்த பெண், அவள் வெளியே போயிருக்கையில், அவள், "நான் இதை வீட்டிற்கு கொண்டு செல்லப் போகிறேன், அவ்வாறு செய்ய வேண்டியிருக்கிறது, என்ன விஷயம்?" என்று தன்னுடைய மனதில் வியப்படைந்து கொண்டேயிருந்தாள். தேவன் ஒரு அருளப்பட்ட வழியை உடையவராயிருந்தார். அது சரியே. 202. சகோதரனே, நான் ஒரு காரியத்தை உன்னிடம் கூறட்டும், ஒரு சமயம் சபை முழுவதுமாக சடங்காசாரமாகவும், அலட்சியப்போக்குடனும் இருந்தது. சபையானது ஏறக்குறைய அது இப்பொழுது இருப்பது போன்றே இருந்தது, ஒவ்வொருவரும் ஒரு மதக் கோட்பாட்டை உடையவர்களாகவும், ஒவ்வொருவரும் ஒரு ஸ்தாபனத்தை கொண்டவர்களாகவும், ஒவ்வொருவரும் இதையும், ஒருவர் இதையும், ஒருவர் அதையும் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அதன்பிறகு இயேசு அதனூடாக வந்த ஒரு நேரம் வந்தது. அவர் தேவனால் அருளப்பட்ட வழியாக இருந்தார். அது சரிதானா? 203. ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். இயேசு பரலோகத்திற்கு ஏறிப்போன ஒரு நேரம் அங்கேயிருந்தது, தேவனோ ஒரு அருளப்பட்ட வழியைக் கொண்டிருந்தார். அப்போஸ்தலனாகிய பேதுரு, அவர்கள் அவனுடைய நிழலில் கிடத்த, சுகம் அடைந்தார்கள். அது சரிதானா? தேவனால் அருளப்பட்ட பாதை. 204. அவர்களிடம் பவுல் என்னப்பட்ட வேறொரு மனிதன் இருந்தான். அது சரிதானா? அவர்களால்... முடியாதிருந்தது. அவனால் அவர்கள் எல்லாருக்கும் ஜெபிக்கக் கூட முடியாதிருந்தது, இந்நிலையில் தேவன் ஒரு அருளப்பட்ட வழியைக் கொண்டிருந்தார். கைக்குட்டைகளை (உறுமால்களை - handkerchiefs) பவுலுடைய சரீரத்திலிருந்து எடுத்த போது, அசுத்த ஆவிகள் வெளியே போயின. அது சரிதானா? 205. சபையானது அவைகள் ஒருவித கோழைத் தனமுள்ளவர்களாக இருந்த ஒரு நிலைக்கு வந்திருந்தன. அவர்கள் அந்த மேலறைக்கு ஏறிச்சென்று, பத்து நாட்கள் இரவு பகல் மட்டுமாக, அங்கேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள், அப்போது அங்கே பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, பரலோகத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாயிற்று. ஒரு பிரசங்கியார் சாலையில் நடந்து வந்து, "இப்பொழுது, உறுப்பினருரிமை (membership) மூலமாக நாங்கள் சென்று உம்மை உள்ளே ஏற்றுக்கொள்கிறோம்" என்று கூறுவதோ, ஒரு கத்தோலிக்க பாதிரியார், "நாங்கள் உனக்கு புனித நற்கருணையைத் தருகிறோம்" என்றோ அல்ல; ஆனால் அங்கே தேவனால் அருளப்பட்ட வழி வந்தது. பரிசுத்த ஆவி பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, சடிதியாய் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தது; அது அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்கள் நடந்து சென்று, "நான் என்னுடைய பெயரை சபை புத்தகத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்" என்று கூறவில்லை. அவர்கள் அதை தேவனால் அருளப்பட்ட வழியில் செய்தார்கள். அப்போது அவர்கள் ஓடவும், சத்தமிடவும், அந்நிய பாஷைகளில் பேசவும், சுற்றிலும், சுற்றிலும், சுற்றிலும், சுற்றிலும் துள்ளிக்குதிக்கவும், கூச்சலிடவும், தேவனைத் துதிக்கவும் தொடங்கினார்கள். அங்கிருந்து தான் ஒரு சபை (Church) வந்தது (வியூ!) தேவனால் அருளப்பட்ட பாதை. 206. அது இன்னும் தேவனால் அருளப்பட்ட பாதையாக இருக்கிறது. தேவன் துளியும் மாறியிருக்கவில்லை. "இந்த சுவிசேஷம் எனக்கு சாட்சியாக, கட்டாயம் ஒவ்வொரு இனத்தாருக்கும், ஒவ்வொரு பாஷைக்காரருக்கும் (tongue), ஒவ்வொரு தேசத்தாருக்கு பிரசங்கிக்கப்பட வேண்டும்." அப்போது அவர் திரும்பி வருவார். 207. "நீங்கள் உலகம் முழுவதும் சென்று, சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்" தேவனால் அருளப்பட்ட வழி. "வியாதியஸ்தருக்காக ஜெபம் பண்ணுங்கள்" தேவனால் அருளப்பட்ட வழி. "நான் செய்கிறவைகளை; நான் தரிசனம் காண்கிறேன், உங்கள் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதைக் காண்கிறேன், இந்தக் காரியங்களைச் செய்கிறேன்; நான் செய்கிற இந்தக் காரியங்களை நீங்களும் கூட செய்வீர்கள்" தேவனால் அருளப்பட்ட வழி. "பாம்பீச்சிலும், ஃபுளோரிடாவிலும், உலகம் முழுவதும், இது என்னைக் குறித்தும், என்னுடைய உயிர்த்தெழுதலைக் குறித்தும், ஒரு சாட்சியாக இருக்கும்" தேவனால் அருளப்பட்ட வழி. அல்லேலூயா! 208. ஓ, நான் எவ்வளவாக அவரை நேசிக்கிறேன். ஓ, அவருடைய அருளப்பட்ட வழி எவ்வளவாய் இங்கேயிருக்கிறது. ஒவ்வொரு பாவிக்காகவும் அவருடைய அருளப்பட்ட வழி, பரிசுத்த ஆவியைத் தேடுகிற ஒவ்வொருவருக்காவும் அவருடைய அருளப்பட்ட வழி, அது என்னவாக இருந்தாலும், எல்லாவற்றிற்குமான அவருடைய அருளப்பட்ட வழி. 209. பலவர்ண கட்டம் போட்ட ஆடையை அணிந்து, அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற சீமாட்டியே, உங்களிடம் எந்த ஜெப அட்டையும் இல்லை, அப்படித்தானே? சரியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற வயதில் மூத்த சீமாட்டி, உங்களிடம் எந்த ஜெப அட்டையும் இல்லை. நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். அது சரியே. ஆனால் உங்களுடைய பக்கவாட்டில் ஏதோ தவறு உங்களுக்கு இருக்கிறது, இல்லையா? நீங்கள் அதிலிருந்து சுகமடைய விரும்புகிறீர்கள். தேவன் உங்களைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களைக் குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? அது உங்களுடைய இடது பக்கவாட்டில் உள்ளது, இல்லையா? நீங்கள் உங்களுடைய படுக்கையை விட்டு வர முயற்சித்து, உங்களுடைய இடது பக்கவாட்டு பகுதியைப் பிடித்துக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அது சரி அல்லவா? சரி, அது இப்பொழுது உங்களை விட்டுப் போய்விட்டது. நீங்கள் தேவனால் அருளப்பட்ட வழியை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். உங்களைச் சுகப்படுத்தும்படியாக, அவர் இங்கேயிருக்கிறார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் போகலாம், தேவனுடைய நித்திய சமாதானமும் கிருபையும் உங்கள்மேல் தங்கியிருப்பதாக. ஆமென். நீங்கள் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இந்தவிதமாக நோக்கிப் பார்த்து, பிழைத்துக்கொள்ளுங்கள், விசுவாசியுங்கள். 210. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற சீமாட்டியே, நீங்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? அந்த குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களாக, அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் நீங்கள், தேவன் அந்த குடலிறக்கத்திலிருந்து உங்களைச் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் அதைச் செய்துவிட்டார் என்று விசுவாசிக்கிறீர்களா? தேவனால் அருளப்பட்ட வழியை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? தேவனால் அருளப்பட்ட வழியானது, சரியாக இப்பொழுதே உன்மேல் வருகிறதாக நீ உணரும் அந்த வல்லமையாக இருக்கிறது. நீ உன் இருதயத்தைத் திறப்பாய் என்றால், சரியாக அங்கே உனக்கு மேலாக நின்று கொண்டிருக்கிற அந்த தேவனுடைய தூதனானவர், உன்னைச் சுகப்படுத்துவார். நீ அதை விசுவாசிக்கிறாயா? உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால், உன்னால் சுகமடைய முடியும். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 211. உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற சீமாட்டியே, அதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய், நீ விசுவாசிக்கிறாயா? அல்லது, அந்த இருதயக் கோளாறு சரியாக அங்கே இருக்கிறது, அது இருக்கிறது. அது சரிதானா? இப்பொழுது உன்மேல் அசைவாடிக் கொண்டிருக்கிற தேவனுடைய வல்லமையானது உன்னைச் சுகப்படுத்துகிறது என்று விசுவாசிக்கிறாயா? எழுந்து நில்லுங்கள்; அந்த இருதயக் கோளாறு உங்களை விட்டுப் போய்விட்டது: தேவனால் அருளப்பட்ட வழி. அல்லேலூயா! தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். ஆமென். விசுவாசத்துக்குள் வாருங்கள். 212. ஒரு சீமாட்டி மியாமியிலிருந்து வருகிறாள் என்றும், அவள் இங்கே மேலே வருகிறாள் என்றும் நான் காண்கிறேன். அந்த ஸ்திரீக்கு இருக்கிறது, அவளுக்கு குறைந்த இரத்த அழுத்தமும், இரத்த சோகையும் இருக்கிறது; அவள் சரியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். சரி, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், வீட்டிற்குத் திரும்பிச் சென்று, நலமாயிரு. ஆமென். 213. சரியாக உனக்கு அடுத்து உட்கார்ந்து கொண்டிருக்கும் சீமாட்டிக்கும் கூட உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, நீயும் கூட வீட்டிற்குச் செல், சுகத்தைப் பெற்றுக்கொள்வாயாக. நல்ல கர்த்தருக்கு நன்றி. அல்லேலூயா! ஆமென். தேவனுடைய தூதனானவர் இங்கேயிருக்கிறார்; என்னுடைய முழு சரீரமும் அப்படியே மிகவும் மரத்துப் போய்விட்டது, என்னுடைய கைகளை என்னால் உணர முடிவதே கடினமாக இருக்கிறது, நான் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறேன். 214. அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஐயா, உம்முடைய நுரையீரலில் ஏதோ தவறு இருக்கிறது, இல்லையா? சரி, எழுந்து நில்லுங்கள்; இயேசு கிறிஸ்து உம்மைச் சுகப்படுத்துகிறார். தேவன் (உம்மை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நீர் வீட்டிற்குச் சென்று, சுகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆமென். சர்வவல்லமையுள்ள தேவனை நீங்கள் விசுவாசிக்கும்படியாக நான் உங்களுக்கு சவால்விடுகிறேன். 215. அங்கே, அங்கிருந்து வெளியே, அங்கு எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கிற ஒரு மனிதரை நான் காண்கிறேன். சற்று பொறுங்கள். அந்த மனிதருக்கு கீல்வாதம் உள்ளது. அவருக்கு மூல நோயும் கூட இருக்கிறது - அவருக்கு அது உள்ளது. அதுதான் அது. உமக்கு அடுத்திருப்பது உம்முடைய மனைவி, இல்லையா? அது சரிதானா? சீமாட்டியே, எழுந்து நில்லுங்கள். அந்த அதே சீமாட்டி ஒரு தரிசனத்தில் நிற்பதை நான் கண்டேன். சற்று பொறுங்கள்; பயபக்தியாயிருங்கள். நான் நம்புகிறேன், ஆம், ஐயா, உமக்கு பித்தப்பை கோளாறு இருக்கிறது மற்றும் அதைப் போன்று ஏதோவொன்று உம்முடைய மூக்கில் இருக்கிறது, உங்களுடைய மூக்கு ஒழுகக் காரணமான ஏதோவொன்று, அல்லது, அது- அது ஒருவகை ஒவ்வாமையாக (hay fever) இருக்கிறது. சொல்லுங்கள், வேண்டாம்.... உங்கள் பெயர் ஜோ அல்லவா, அல்லது அவர்கள் உங்களை "ஜோ" என்று, அல்லது அதைப் போன்ற ஏதோவொன்றாக, அல்லது "ஜோ ஸ்டோன்" என்றோ, அல்லது அந்த விதத்திலுள்ள ஏதோவொன்றாக அழைப்பது இல்லையா? அது சரி அல்லவா? உங்களைப் பரிசோதித்துக் கொண்டிருந்த அந்த மருத்துவர் சொன்னதை நான் கேட்டபோது தான் நான் அதைக் கேட்டேன் என்று நினைக்கிறேன். வீட்டிற்குச் செல்லும், ஐயா. நீரும் கூட மியாமியிலிருந்து வருகிறீர், இல்லையா? நான் உம்மை என்னுடைய ஜீவியத்தில் கண்டதேயில்லை, ஆனால் அது உண்மை அல்லவா? அது சரிதானா? உம்முடைய மனைவியின் மேல் உமது கரத்தை வையும்; மனைவியே, உன்னுடைய கரத்தை உன் கணவன் மேல் வை; நீங்கள் எல்லாரும் உங்கள் சுகமளித்தலை ஏற்றுக்கொள்ளுகிறீர்கள், ஏனென்றால் நீங்கள் சுகத்தோடு வீட்டிற்குப்போகிறீர்கள். அல்லேலூயா! 216. நான் பைத்தியம் பிடித்தவன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் ஒவ்வொரு மனிதனுக்காகவும் இங்கேயிருக்கிறது. ஒவ்வொரு நபருக்குமான சுகமளித்தல் இங்கேயிருக்கிறது. ஆமென். தீவிர உற்சாகம் கொண்ட ஒரு நிலையில் நான் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்; நான் அவ்வாறு இல்லை. நான் என்ன உணருகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவருமே, சரியாக இப்பொழுதே, சுகத்தைப் பெற்றுக் கொள்ளும்படியான சரியான சூழ்நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? 217. என்னுடைய நியாயாதிபதியாகிய தேவனே, இந்தக் கட்டித்தில் ஒவ்வொரு நபரும், சரியாக இப்பொழுதே, எல்லாவிடங்களிலும், தொங்கிக் கொண்டிருக்கிற ஒரு பெரிய மஞ்சள் நிறமான ஒளிக்கீற்றுகளின் பண்டகசாலை (bank) இருப்பது போன்று தோன்றுகிறது. அது நீங்கள் விசுவாசிப்பதாக இருக்கிறது, நண்பர்களே. ஓ, தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வதன் மூலமாக, தேவனால் அருளப்பட்ட பாதையை எடுத்துக் கொண்டு, கர்த்தாவே, இது சத்தியமாக இருக்கிறது" என்று கூறி, அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களா? 218. ஓ, என்னே. நான்.... இங்கே உள்ளேயிருக்கும் ஒவ்வொரு ஆவியும், இயேசு கிறிஸ்து மூலமாக, இப்பொழுது என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. அது சரியே. அது உண்மை. இந்த நேரத்தில் நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களானால், அங்கே உங்கள் மத்தியில் பலவீனமான ஒருவரும் இருக்க மாட்டீர்கள். அது சரியே. நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால். நான் அதைச் சொல்ல மாத்திரமே முடியும், அதை உறுதிப்படுத்தி, ஆதரித்து, அது சாத்தியம் என்று கூறும்படியாக தேவன் இங்கேயிருக்கிறார். உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள். நாம் ஜெபிப்போமாக. 219. கர்த்தாவே, வேறு என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. அது இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கும் முழு கூட்டத்தினர் மேலும் அசைவாடிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். ஓ, பிதாவே, தயவுகூர்ந்து, தேவனே, இந்த மகத்தான வல்லமையில் நீர் இங்கே உள்ளே இருக்கையில், நீர் இங்கேயிருக்கும் ஒவ்வொரு நபரையும் சுகப்படுத்துவீராக. இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் தாமே, இந்த மகத்தான வல்லமையானது கேட்டுக் கொண்டிருக்கிற இந்தக் கூட்டத்தினர் மேல் அசைவாடிக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் தாமே சரியாக கீழே அசைவாடிக் கொண்டிருப்பாராக. இது உம்முடைய அருளப்பட்ட வழியாக இருக்கிறது. பேதுருவின் நிழலில் கிடத்தப்பட்ட அவர்கள், எல்லாரும், சுகமடைந்தார்கள். பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் விழுந்தார். 220. கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஒவ்வொரு இருண்ட ஆவியையும், ஒவ்வொரு சந்தேக ஆவியையும் துரத்துகிற பரிசுத்த ஆவியானவர், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நிரூபிக்கும்படியாக, இப்பொழுது பிரசன்னமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியானது, இந்த இங்கே சுற்றிலும் அசைந்து கொண்டிருக்கிற இந்த சந்தேகத்தின் ஆவி, தெய்வபக்தியற்ற ஆவியின் சுவர்களை உடைத்தெறிந்து (break down), ஒவ்வொரு நபரும் சுகமடைவார்களாக. ஓ, பிசாசே, நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவாகிய, தேவ குமாரனாலே, நீ இந்த ஜனங்களை விடுவிக்கும்படி நான் கட்டளையிடுகிறேன். இவர்களை விட்டு வெளியே வா. 221. ஒவ்வொரு நபரும் விடுதலை அடைவார்களாக கீல்வாதத்தை உடையவர்களாக அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பவர்களும், பிசாசின் வல்லமையால் கட்டப்பட்டவர்களாக, அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்தப் பெண்மணியும், மாதவிடாயினாலே தன்னுடைய சிந்தையை இழந்தவளாக அங்கே உட்கார்ந்திருக்கும் அந்தப் பெண்ணும் விடுதலை அடைவார்களாக. நீங்கள் ஒவ்வொருவரும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சரியாக இப்பொழுதே முற்றிலுமாக சுகமடைந்து விட்டீர்கள், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களானால், உங்கள் காலூன்றி எழுந்து நின்று, தேவனால் அருளப்பட்ட உங்கள் ஜெயத்தை உரிமை கோருங்கள். 222. ஆரவாரம் செய்வதற்கான நேரம் இதுவே. அது இருந்தவண்ணமாகவே, எரிகோ மதில்கள், நீங்கள் இதற்குள் பிரவேசிக்காதபடி தடுத்து வைத்திருக்கிற சத்துரு, தரையில் விழுந்து, ஒவ்வொரு பிசாசின் வல்லமையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உடைக்கப்பட்டுப் போவதாக 2